April 13, 2013

ஜம்இய்யதுல் உலமா விடயத்தில் அசாத் சாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்


Ash Sheikh M.Z.M Shafeek (Bahji, Mazhaahiri)

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு  ஏற்பட்டுள்ள  இனப்  பிரச்சினை   விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஜமாஅத்தாக இயங்குபவர்களில் உலக ஆதாயங்களை  அறவே  எதிர்பார்க்காது  இதய  சுத்தியோடு  ஈடுபடுகின்ற   ஒரே  அமைப்பு  ACJU தான். 

ஆளும்  கட்சியை  எதிர்த்து  சவால்  விட்டுக்  கொண்டும்,அடிக்கடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும்  உரிமைக்காகப் போராடுவது அசாத் சாலி  போன்றோருக்கும் ஏனைய  அரசியல் வாதிகளுக்கும் தான்  பொருந்தும். கட்டாயம் அவ்வாறு   அசாத் சாலி போன்று  துணிச்சலாக   பேசுபவர்களும்  சமூகத்துக்கு  தேவை  தான். 

அதனையிட்டு  அவரை பாராட்டவும் வேண்டும். அதற்காக  ACJU வையும்  அசாத்  சாலி  போராடுவது போன்றோ,  அல்லது சில இனவாத கட்சிகளில் அங்கம் வகிக்கும்  பிக்குகள்  நடந்து  கொள்வது  போன்றோ  களத்தில்  இறங்கி  பரபரப்பை  ஏற்படுத்த  வேண்டும்  என  எதிர்  பார்ப்பது  முட்டாள்  தனம். 

உலமாக்களை  பொறுத்த வரை  ஆத்மீகம்  உள்ளிட்ட  பல  விடயங்களில் மக்களை  நேர்வழிப்  படுத்தும்  கடப்பாடு  உள்ளவர்கள்  அவர்கள். நாளை  மிம்பர்  படியை  அவர்கள்  மிதிக்கும்  போது மக்கள் அவர்களை  கண்ணியமாக  ஏற்க  வேண்டும். அவர்கள்  உணர்ச்சிவசப்பட்டோ, அதிரடி  நடவடிக்கைகளில் ஈடு பட்டோ சமூகத்தில் தமக்கு இருக்கின்ற   கண்ணியத்தை  இழக்கும் போது அவர்கள்  எமது சமூகத்துக்கு எந்த  நலவைக் கொண்டு சென்றாலும் சமூகம் அதனை அங்கீகரிக்காது என்பதோடு நில்லாது  அதனால் ஏற்படுகின்ற விளைவு முஸ்லிம் சமூகத்தைத் தான் மென் மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்லும்.   

எனவேதான்  அதனை தெளிவாகப் புரிந்து கொண்ட ACJU தடால் படால்கள் இன்றி  மிகவும் முதிர்ச்சியுடன்  காய்  நகர்த்திக்  கொண்டிருக்கிறது.  நாம் அறிந்த வரை அரசாங்கத்தின்  ஒப்புதல்  உடனேயே  இனவாதிகள்  முஸ்லிம்களுக்கு  எதிராக  செயற் படுகிறார்கள்   என்பதை  ACJU வும்  நன்றாகவே  புரிந்து  வைத்திருக்கக் கூடும். அரசாங்கத்துக்கு  அடிபணிந்து, அதன் கைப்  பிள்ளையாவது  என்பது வேறு. அரசாங்கத்தை  பகைத்து  பிரச்சினைப்  படுத்திக் கொள்ளாது  முஸ்லிம் சமூகத்தை இக்கட்டில் இருந்து விடுவித்து  உரிமைகளை  அடைய  காய்  நகர்திச்  செல்வது  என்பது வேறு. இதில்  இரண்டாவதை  தான்  ACJU செய்து  வருகிறது.  

மிகவும்  பொறுப்பும் கண்ணியமும்  வாய்ந்த, ஆத்மீக ரீதியாக முஸ்லிம்களை வழி நடாத்திச் செல்கின்ற அமைப்பொன்று பயணிக்க வேண்டிய பாதை எதுவோ அதே பாதையை தான் ACJU வும் தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது. 

எனவே  மடத்தனமாக  அரசாங்கம்  வைக்கும்  பொறிக்குள்  போய் மாட்டிக்  கொள்வதற்கு  ACJU வில்  உள்ளவர்கள்   முட்டாள்கள்  அல்ல. ஆகவே   அசாத்  சாலி,  ACJU வும்  தனது  பாணியிலேயே    போராட  வேண்டும்  என  எதிர்  பார்க்கக் கூடாது. அவர்  ACJU வை  ஊடகங்களில்  அடிக்கடி  விமர்சிப்பதை  உடன் நிறுத்திவிட்டு  தனது  பாணியில்  பயணிக்க  வேண்டும். 

13 கருத்துரைகள்:

சகோதரர் அசாத்சாலி கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன். மேலும் இந்த விடயத்தில் இறைவன் அவருக்கு நல்ல சிந்தனையையும் பலத்தையும் வழங்குவானாக........ ஆமீன்.

sirantha karuththukkal nanri

Salam.mou M.Z.M.Shafeek bro, we would have appreciated had Acju taken the decision on halal mater in consultation with scholars, intellectual, ulamas other than those in Acju and politicians but u all thought that u all r most deserved to take decision although it is related to common problem faced by our comunity not the matter related to fathwa, for which we agree ulama should take drcision.it is diferent matter of which calibre of ulama should give the fathwa.here dont blame bro Asad salih, he is not a ulama insted, he is a human being with senses.we know some so called ulama in the Acju with double stand, I can figur out. U must know how the children were sent to madrasa (those who could not cope up with studies during our era I m sorry i dont know how it is at the present).it is my kind appeal to like u all take a decision considering openons all.wsalam

உலமா சபையை பற்றி விமர்சிக்க முடியாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியதல்ல. அதிலும் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) தவறு செய்த போது ஒரு பெண் எழுந்து நின்று விமர்சித்தாள் என்ற பரம்பரையை சேர்ந்த நாம் உமரின் கால்தூசுக்கும் சமமாகாத நம் உலமாக்களை விமர்சிக்கக்கூடாது என்பது இஸ்லாத்துக்கு முரண்பட்டதாகும். ஆனால் விமர்சனங்களின் போது வார்த்தைகள் அழகாக இருக்க வேண்டும். அசாத் சாலி அவ்வாறு அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்ததாக காணவில்லை.
உலமாக்கள் உலக ஆதாயம் பார்க்காதவர்கள்தான். ஆனால் நடைமுறையில் நிறையப்பேர் அவ்வாறு இல்லை. அரசு பொதுபல சேனாவின் மூலம் உலமாக்களை நரிகள், கள்வர்கள் என கூறும் போது அதற்கு மௌனமாக இருந்து அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கையை உலமா சபை கடைப்பிடித்ததே உலக ஆதாயம்தான். இன்றைய உலமா சபையின் தலைமையகத்தில் உலகத்தை பற்றி மட்டுமே சிந்திப்போர் நிறையப்பேர் இருக்கின்றனர். இவர்கள் மறுமையை பயந்திருந்தால் தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை ஹலாலை கைவிட மாட்டோம் என கூறியிருப்பார்கள். அல்லது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஹலாலை காப்பாற்றியிருப்பார்கள். இது பொது தளம் என்பதால் பல விடயங்களை பேசாமல் விடுகிறேன்.

உலமா சபை என்பது அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பது உண்மை. அதற்காக அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருப்பது கூடாது. இன்று இரண்டாவது நிலைதான் காணப்படுகிறது என்பதை உணர்வை ஒதுக்கி விட்டு அறிவை வைத்துப்பார்ப்போரால் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் அடாவடித்தனங்கள் விடயத்தில் உலமா சபையை விட முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள் என்பதே உண்மை. உலமா சபைதான் பொறுமை இல்லாமல் அவசரப்பட்டு ஹலாலை வாபஸ் வாங்கிக்கொண்டது. இத்தகைய அவமானத்துக்கெதிராக அதாவது உலமா சபைக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமும் செய்;யவில்லை. சிலர் தமது மனக்குமுறல்களை மட்டும் கொட்டித்தீர்த்தார்கள். இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் எனக்கூறிய உத்தம தூதரின் இறுதி வழி காட்டலை பின்பற்றும் நாம் உலமா சபை எமது சபை என்பதற்காக நீதியை – உண்மையை மறைத்து பொய்க்கு வக்காலத்து வாங்கக்கூடாது. – முபாறக் மௌலவி

nallathoru vidayaththai sonneergal.

MASHA ALLAH GOOD THINKS TO UNDERSTAND.
EACH OTHER

என்ன ஆசாத் சாலி சார் ........ விளக்கம் போதுமா ..... இல்ல படம் போட்டு விளக்கனுமா ?????? உலமா சபையின கண்ணியம் எங்க .............. உங்ட அடுத்த தேர்தலுக்கான நகர்வு எங்க............... இடண்டையும் ஒப்பிட வேண்டாம் சார்.......

இப்படி உலமாக்கள் தவறு செய்யும் போது அதனை சுட்டிக் காட்டி யாராவது பேசினால், உடனே அவர் பற்றி எரிந்து விழுவது நல்லதல்ல. தவறு யார் செய்தாலும் தவறுதான் என்று எற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வர வேண்டும். ஒருவர் விடும் தவறை சுட்டிக் காட்ட சுட்டிக் காட்டுபவர் மிகவும் கண்ணியமானவராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நடந்த விடயம் உண்மையிலே தவறுதான் என்பதை அறிந்திருந்தால் போதுமானதாகும். சகோதரர் ஆசாத் சாலி விடயமும் அதுதான். அவர் எதற்காக இதை செய்கின்றார் என்பது வேறு விடயம். சொன்ன செய்தி சரியா? பிழையா? என்பதை கவனித்தால் போதும் என்பதே எனது கருத்தாகும். ஹலால் விடயத்தில் உலமா சபை எடுத்த முடிவு இந்த சமுகத்தின் உரிமையை அடகு வைத்த செயலாகவே நான் காணுகின்றேன். மேலும் இந்த விடயத்தில் இதய சுத்தியோடு செயல் படும் ஒரே அமைப்பு ACJU என்பதும் பச்சை பொய்யாகும். இன்னும் நிறைய அமைப்புகள் இது தொடர்பான அற்பணிப்புடன் செயல் படுகின்றார்கள் என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

விமர்சிப்பதில் எம்மவர்கள் வல்லுனர்கள். தற்போது நாட்டின் நிலைமைகள் சற்று சீராகி இருப்பதற்கு ஹலால் விட்டுக்கொடுப்பு ஒரு காரணம். விட்டுக்கொடுக்கா விட்டால் பல பிரச்சினைகளுக்கு நம் சமூகம் முகம் கொடுக்க நேரிட்டு இருக்கும். அத்தோடு விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் அதற்கும் நம்மவர்கள் விட்டுக்கொடுத்து இருந்தால் நல்லமே... என்று விமர்சித்து இருப்பார்கள். இல்லையெனில் விட்டுக்கொடுக்காமல் சிலர் கூறுவதைப்போல் ACJU உறுப்பினர்கள் பதவி துரப்பார்களானால் தலமைத்துவம் தெரியாதவர்கள்.... அதற்கும் அப்பால் இன்னும் விமர்சனங்கள் வந்து இருக்கும். இப்படி மக்கள் விமர்சிப்பார்களே என்று ACJU வும் தனது திசையை பலவாறும் திருப்பினால் "தகப்பனும் மகனும் கழுதையில் பயணம் " போன கதை போன்றுதான் இருக்கும். விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் முடியும். ஆனால் ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க எல்லோராலும் முடியாது.

fathhulla, அவர்களே! ஒருவர் மீது கொண்ட பக்தி மேலீட்டால் நாம் சில நேரம் உண்மையை ஒத்துக் கொள்வதில்லை. இது தவறான அணுகு முறையாகும். ACJU எடுத்த முடிவினால்தான் பிரச்சினை முடிவுக்கு வந்தது என்றால், தற்போது கத்னா சம்பந்தமாக பொது பல சேனா கூறும் கூற்றுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்? இலங்கை மக்களுக்கு ஹலால் விட்டுக் கொடுப்பு, வெளிநாட்டவர்களுக்கு இல்லை என்றால் இது முழுக்க முழுக்க பொது பல சேனாவையும் அரசாங்கத்தையும் திருப்திப் படுத்துவதாக அமையாதா? இலங்கை முஸ்லிம்களை ஏமாற்றுவதாக அமையாதா?

Please any one attempt to clear my doubt and confusion that still I have “what is the logic or sense behind the decision on providing Halal certificate to the only export product and the product which sales in local to foreigner or tourist only? By this decision how can conform the availability of Halal product to the people those who live in the country? What are the benefits to the Muslim Community can be gained by issuing Halal certificate to the export product only? And in what mandate it was decided ?

Jazakallah By AlJazeera Lanka : //உலமா சபையை பற்றி விமர்சிக்க முடியாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியதல்ல. அதிலும் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) தவறு செய்த போது ஒரு பெண் எழுந்து நின்று விமர்சித்தாள் என்ற பரம்பரையை சேர்ந்த நாம் உமரின் கால்தூசுக்கும் சமமாகாத நம் உலமாக்களை விமர்சிக்கக்கூடாது என்பது இஸ்லாத்துக்கு முரண்பட்டதாகும். ஆனால் விமர்சனங்களின் போது வார்த்தைகள் அழகாக இருக்க வேண்டும். அசாத் சாலி அவ்வாறு அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்ததாக காணவில்லை.
உலமாக்கள் உலக ஆதாயம் பார்க்காதவர்கள்தான். ஆனால் நடைமுறையில் நிறையப்பேர் அவ்வாறு இல்லை. அரசு பொதுபல சேனாவின் மூலம் உலமாக்களை நரிகள், கள்வர்கள் என கூறும் போது அதற்கு மௌனமாக இருந்து அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கையை உலமா சபை கடைப்பிடித்ததே உலக ஆதாயம்தான். இன்றைய உலமா சபையின் தலைமையகத்தில் உலகத்தை பற்றி மட்டுமே சிந்திப்போர் நிறையப்பேர் இருக்கின்றனர். இவர்கள் மறுமையை பயந்திருந்தால் தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை ஹலாலை கைவிட மாட்டோம் என கூறியிருப்பார்கள். அல்லது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஹலாலை காப்பாற்றியிருப்பார்கள். இது பொது தளம் என்பதால் பல விடயங்களை பேசாமல் விடுகிறேன்.

உலமா சபை என்பது அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பது உண்மை. அதற்காக அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருப்பது கூடாது. இன்று இரண்டாவது நிலைதான் காணப்படுகிறது என்பதை உணர்வை ஒதுக்கி விட்டு அறிவை வைத்துப்பார்ப்போரால் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் அடாவடித்தனங்கள் விடயத்தில் உலமா சபையை விட முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள் என்பதே உண்மை. உலமா சபைதான் பொறுமை இல்லாமல் அவசரப்பட்டு ஹலாலை வாபஸ் வாங்கிக்கொண்டது. இத்தகைய அவமானத்துக்கெதிராக அதாவது உலமா சபைக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமும் செய்;யவில்லை. சிலர் தமது மனக்குமுறல்களை மட்டும் கொட்டித்தீர்த்தார்கள். இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் எனக்கூறிய உத்தம தூதரின் இறுதி வழி காட்டலை பின்பற்றும் நாம் உலமா சபை எமது சபை என்பதற்காக நீதியை – உண்மையை மறைத்து பொய்க்கு வக்காலத்து வாங்கக்கூடாது. – முபாறக் மௌலவி//

Post a Comment