Header Ads



'பிரார்த்தனை எனது கடமை'



இரவு உறங்கையில் நான் விழித்திருக்கின்றேன்.
என் தேசத்து நிலைகண்டு இருதயம் வலிக்கின்றது 
பேரின சமுத்திரத்தில் அலைமோதும் காகித கப்பல் 
என்று எதிரிகள் சிரிக்கின்றனர்


மாலுமிகள் அதிகார மோகத்தில் போதையாகினர் 
நமது நிலையென்ன என்பதில் பல வினாக்கள். 
என்னை பொறுத்தவரையில் பதில் ஒன்றுதான் 
பயணத்தின் மாலுமி இறைவனே 


துப்பாக்கி ரவைகளும் அரிவாளும் தாண்டவமாடிய 
90களின் அதிர்வலை இன்னும் ஓயவில்லை 
மீண்டும் மரண ஓலைங்களால் நிரம்பிய தேசம் வேண்டாமென 
என் இரவுகள் பிரார்திக்கின்றது 


குருதி குடித்து நிமிர்ந்த காஸாவும் மியன்மாரும் கண்ணுக்குள் 
இருக்கிறது 
எம் மானத்தையும் இருப்பையும் கருவறுக்க தளைக்குக்கும் 
சேனைகள் உன் ஆணையால் நரம்பறுந்து நடைபிணமாக 
என் இரவுகளில் பிரார்த்திக்கின்றேன் 


இது இறை நேசர்களின் தவச்சாலை என்பது எனது வாதம்.
என் இஸ்லாமிய உறவுகளில் போலிகளும் உண்டு.
'கவ்பா'வை சுற்றுகின்ற பொழுதே திருடுகின்ற மனவலிமை.
பல ஆயிரம் மயில் தூரத்துக்கு அப்பால் 
ஈமானில் கலப்படம் இல்லாமல் இருக்காது. 


உனது ரசூலையும் உன்னையும் மிகவும் நேசிக்கின்றவர்களும் 
இங்கு இல்லாமல் இல்லை 
ஆதலால் பிரபஞ்சம் உறங்கும் நிலையில் விழித்திருந்து கேட்கிறேன் 
எதிரிகளின் இருதயத்தை திசை திருப்பி விடுவாயாக 

faji

1 comment:

Powered by Blogger.