Header Ads



முஸ்லிம் அமைச்சர்களுக்கு வந்த ஆத்திரமும், ஜனாதிபதி மஹிந்தவின் பதிலும்..!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி அலரி மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தாம் தலைமைதாங்கும் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு தருகிறோம்.

கூட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த, கட்சித் தலைவர்களை நோக்கி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது எல்லோரும் அமைதியாக இருந்துள்ளனர். இதன்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முதலில் முஸ்லிம்கள் விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இதையடுத்து ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் தமது கருத்துக்களை துணிவுடன் கூறியுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனவாத நடவடிக்கைகள் குறித்தே முஸ்லிம் அமைச்சர்கள் அதிகமாக பேசியுள்ளனர்.

குறிப்பாக பொதுபல சேனாவை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஸ வழிநடத்துவதாகவும், இதற்கு ஜனாதிபதி மஹிந்த ஆசிர்வாதம் வழங்கியுள்ளதாகவும் முஸ்லிம்கள் சந்தேகிப்பதாகவும், முஸ்லிம்கள் இவ்வாறே பேசிக்கொள்வதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த அரசாங்கம் படிப்படியாக முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தால் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களின் முழுமையான ஆதரவை இழந்து தவிக்கும் பரிதாம் ஏற்படுமெனும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை காரணமாக ஆத்திரம் மேலிட்டுள்ள முஸ்லிம்கள் பொறுமை காத்து வருவதாகவும், தமது பக்கம் நியாயங்கள் இருந்தும் பௌத்த தேரர்களுடனோ அல்லது அவை சார்ந்த அமைப்புக்களுடனோ விவாதங்களில் ஈடுபடும்போது சிறிய கீறல் ஏற்பட்டால்கூட அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுமென்ற கவலை காரணமாகவே முஸ்லிம் தரப்பு தமது பக்க நியாயங்களைக்கூட எடுத்துரைக்கமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்லாம் குறித்தும், தாம் வழிபடும் இறைவன் பற்றியும், தமது இறைத்தூதர்கள் குறித்தும் பௌத்தசிங்கள இனவாதிகள் மிகக்கேவலமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும், அசிங்கமான படங்களை இணைங்களிலும், பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்வதாகவும், இவற்றினால் அமைச்சரவை அந்தஸ்த்திலுள்ள தமக்கே ஆத்திரம் பொங்கிவருவதாகவும், தமக்கே இந்நிலையென்றால் முஸ்லிம் சமூகம் எத்தகைய ஆத்திரத்துடன் காணப்படுகிறது என்பதை அரசாங்கமும், ஜனாதிபதியும் புரிந்துகொள்ள வேண்டுமென்றும்  முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.


மேலும் கிழக்கு மாகாணத்தில் சில பள்ளிவாசல்கள் தலைவர்கள் மீது இராணுவத்தினர் அழுத்தங்களை பிரயோகித்தமை, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தயட்ட கிருள கண்காட்சிக்கு ஆட்கள திரட்டுவதற்காக கையாளப்பட்ட உபாயங்கள் என்பனவும் முஸ்லிம்கள் மத்தியில் விசனங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் வடக்கில் மீளக்குடியேறும் முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என பொதுபுல சேனா வெளியிட்டுள்ள கூற்றுக்கள் தொடர்பிலும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது கவலையை ஜனாதிபதியிடன் பகிர்ந்துகொண்டுள்ளனா.

வழமையைவிட முஸ்லிம் அமைச்சர்கள் இம்முறை துணிவாகவும், ஆத்திரம் மேலிட்டும் கருத்துக்கள் வெளியிடுவதை அவதானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முஸ்லிம் அமைச்சர்களை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு இனவாத அமைப்பையும் நான் சீராட்டி வளர்க்கவில்லை. அதற்கான தேவையும் என்னிடம் இல்லை. இதை உங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு போய் கூறுங்கள். எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள், கலாசார விடயங்களில் தலையிட்டு, வன்முறைகளை பிரயோகிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக மதகுரு ஒருவர் தலையீடுகளை மேற்கொள்கிறார். அவரே வடக்கில் இனவாத நடவடிக்கைகளை தூண்டிவிடுகிறார். தற்போதைய அரசாங்கமானது சகல பகுதிகளுக்குமுரிய அரசாங்கம் ஆகும். எந்த பகுதியிலுள்ள மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட அனுமதி வழங்கமாட்டோம். முஸ்லிம் அமைச்சர்கள் தமது சமூகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும். எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு திருப்த்திபடும்படியாக அமைந்திருந்ததாக கூறியதுடன், முஸ்லிம் சமூகத்தின் கவலைகள், ஆத்திரங்களை ஜனாதிபதி புரிந்தும் கொண்டிருப்பாரென கூறிப்பிட்டன.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் முஸ்லிம் அமைச்சர்கள் இச்சந்திப்பில் பலமுறை பொதுபல சேனா என பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டிய போதும், ஜனாதிபதி மஹிந்தவோ எந்த சந்தர்ப்பத்திலும் பொதுபல சேனா என்று பெயர் குறிப்பிடாது இனவாத அமைப்புக்கள் என்றே பொதுப்படையாக குறிப்பிட்டதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.



35 comments:

  1. அப்பாடா இப்பவாவது வாய் தொறந்தாங்கள பரவலா அவங்கல்லாம் பேசுவாங்கதான் கொஞ்ஞம் சமூக உணா்வும் இரிக்கு thank jm

    ReplyDelete
  2. Muslim ministers
    Do you believe the promises of President? All his promises are similar yours, which you gave during the election period. We don’t know you learned from him or he learned from you.
    All these dramas are just for sake of satisfy the Muslims. You can satisfy stating that you brought our problems to the president. This is enough for you for another one or two month.
    Continue with same strategy as much as you can.

    ReplyDelete
  3. தான் வளர்க்கும் கூலிப்படை பற்றி குற்றம் சாட்டப்பட்டால், அவர் எங்ஙனம் அதனைப் பற்றி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்? "எந்தவொரு இனவாத அமைப்பையும் நான் சீராட்டி வளர்க்கவில்லை. அதற்கான தேவையும் என்னிடம் இல்லை" ஆம் உண்மைதான் அவர் நேரடிநயாக வளர்க்கவில்லை அவரது தும்பி கோத்தா தானே வளர்க்கிறார். அதனைத்தான் அப்படி சொல்லியிருப்பார் போலும். " வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக மதகுரு ஒருவர் தலையீடுகளை மேற்கொள்கிறார். அவரே வடக்கில் இனவாத நடவடிக்கைகளை தூண்டிவிடுகிறார்." ஆம் வடக்கில் ஆயரின் அடாவடித்தனத்திற்குள். பொது பல சேனாவை மூடிமறைக்கும் யுக்தி. பொது பல சேனாவுக்கு நன்றி நமது அமைச்சர்களை ஒரே கருத்தில் ஒன்று சேர்த்ததற்கு. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது எத்தனை உண்மை.

    ReplyDelete
  4. முளையில் கிள்ளி எறியாமல் மௌனம் காத்த அமைச்சர்கள் நாலாபுரங்களிலிருந்தும் வந்த அளுத்தங்களைச் சகிக்க முடியாது கிளைவிட்டு கனிகாய்த்த பின்பாவது முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளமை போற்றத்தக்கது.
    இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் பொதுபலசேனாவை குழிதோண்டிப் புதைத்திருக்கலாமல்லவா. இனியாவது விட்ட தவறை உணர்ந்து முஸ்லிம்களுக் கெதிராக எப்பிரச்சினையாவது தலை நீட்டும்போது உடனடியாகவே சம்பந்தப்பட்டவர்களை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் முன்வருவார்களா?.
    முஸ்லிம் உம்மாவின் மணங்கள் புண்பட இத்தனையும் அரங்கேற்றப்பட்ட பின் இப்போது ஜனாதிபதி எடுக்கும் மாற்று நடவடிக்கைகள் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துமா என்பது கேள்விக் குறியே. பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  5. அமைச்சர்களே! நீங்கள் முறையிடுவது ஒரு பௌத்த சிங்களவனிடத்தில்! எது எப்படியாயினும் நல்லது நடக்க அல்லாஹ்வை வேண்டியவனாக நாம் விழிப்புடனும் எதற்கும் தயாரான நிலையில் இருப்பதும் அல்லாஹ்வின் தூதர் எமக்கு கற்றுத்தந்த வழிமுறை இருக்கிறது.ஆக விழிப்புடனும் எதற்கும் தயாரான நிலையிலும் இருப்பதோடு கோடாரிக்கம்புகள் (முனா(பிக்கு)கள்)விடயத்தில் நாம் அவதானம் தேவை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  6. தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்.

    ReplyDelete
  7. No relation with your topic to the article. When the ministers got angry...!

    ReplyDelete
  8. Insha Allah we vl wait.....

    ReplyDelete
  9. If President has a good intention he can easily stop these kinds of incidents taking place against Muslims. Here he seems to justify the actions of his brother Gotha. We, Muslims should therefore, think twice before we cast our votes to this regime in future...As we know MR and his family is an ultra-nationalist one.

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய அமைச்சர்களே ஜனாதிபதி உங்களிடம் எதிர்காலத்தில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கே சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் நல்லது நாமும் நன்றியுடன் வரவேற்கின்றோம் அப்படியானால் கடந்த பல மாதங்களாக இந்த நாட்டில் எதுவும் நடைபெறவில்லை என்ற அர்த்தமா அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செய்யவேண்டிய அனைத்தும் செய்தாகிவிட்டது இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அர்த்தமா முஸ்லிம்களின் மாணம்,மரியாதை எல்லாம் கப்பலில் அதுவும் முஸ்லிம்கள் இலங்கைக்கு வியாபாரியாக வந்த மரக்கப்பலில் ஏற்றி அனுப்பியாச்சு என்ற எண்ணமா, அல்லது முஸ்லிகளின் வியாபாரம் பொருளாதாரம் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது இனி இந்த மரகலயவினால் முன்னேறமுடியாது இப்போதைக்கு போதும் என்ற எண்ணமா சித்திரை புத்தாண்டுக்கு முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்கிய மக்கள் மீது கூழ் முட்டை வீசி அணைத்து முஸ்லிம் சித்திரை வியாபாரத்தையும் திசை திருப்பியாச்சு என்ற எண்ணமா.
    தயவு செய்து மறந்து விடாதீர்கள் இன்னும் இரண்டு வருடங்களின் பின் நீங்கள்
    வோட்டு பிச்சை கேட்டு வரும் போது அனைத்து முஸ்லிம்களும் உங்களுக்கு வோட்டு பிச்சையை தவிர வேறு ஏதும் இல்லாத பிச்சைக்கரர்களாக மாறியிருப்பார்கள் என்ற, அல்லது நாம் மேடையில் சொல்லும் பொய்களை நம்பி மீண்டும் நமக்கே வாக்குப்போடுவர்கள் என்ற தப்புக்கனக்கா? காலம் பதில் கூறும் இங்கு மட்டுமல்ல மறுமை வாழ்வும் உண்டு உங்களால் முஸ்லிம்களை பழையபடி கவுரவத்தோடும் நிம்மதியாகவும் வாழ வைக்கமுடியுமயிருந்தால் கூடவே இருந்து நல்லதை செய்யுங்கள் முடியாவிட்டால் வெளியேறுங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் உங்களை நம்பி வாழ வில்லை இந்தபிரச்சினக்குப்பின் அவர்களின் நம்பிக்கை இறை விசுவாசம் கூடியுள்ளது எமது பெண்கள் முன்னர் பர்தா போடாதவர்களும் இப்போது போடத் தொடங்கிவிட்டார்கள் ஏன் செருப்பாலும் அடித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  11. ivarhal vai thirakkavillai allah thirakkavaithuvittan.Alhamdulillah

    ReplyDelete
  12. தலைப்பு மாறி அமைந்திருக்க வேண்டும். ''முஸ்லிம் அமைச்சர்களுக்கு வந்த ஆத்திரமும் ஜனாதிபதியின் பதிலும்'' என்று இந்தச் செய்தியின் தலைப்பு இருந்திருக்க வேண்டும். மாறி இருப்பதால், ஜனாதிபதி ஏதோ ஏடாகூடமாய் பதில் சொல்லப் போய்,அந்த பதிலினால் முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டதோ,...அவர்கள் ஆத்திரப்பட்டு ஜனாதிபதியைக் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்களோ என்று எண்ணி (அதிர்ந்து,ஆச்சர்யப்பட்டு)விட்டேன்.

    ReplyDelete
  13. என்னடய்யா சொல்றாங்க...
    ஆத்திரம் வந்ததாக சொல்றாங்க.மீண்டும் திருப்தி திருப்தி அடைந்ததாக சொல்றாங்க..ஆத்திரம் அல்ல ஜனாதிபதியைக் கண்டு மூத்திரம் தான் போயிருக்கும்.
    ஒன்று மட்டும் புரியுது விலாங்கு மீன் விளையாட்டு தான் விளையாடி வந்திருக்கிறார்கள் அமைச்சர்கள். விலாங்கு பம்பைக் கண்டால் வாலைக் காட்டுமாம்.மீனைக் கண்டால் வாலைக் காட்டுமாம். ஜனாதிபதிக்கு திருப்தியையும் முஸ்லிம்கலுக்கு ஆத்திரத்தையும் காட்டி சிறப்பாய் ந்டித்துள்ளார்கள். ஒஸ்கர் சிபார்சு பன்னலாம்.
    இது புரியாதவர்கள் புக்ழ்பாடி comments வேற..

    ReplyDelete
  14. இது வாய்பேச்சுதானே ஒழிய செயலில் இன்னும் இடம்பெறவில்லை முதலில் செயலில் இடம்பெறட்டும் அப்புரம் இவர்களை பாராட்டலாம் அதுவரை அவசரபட்டு இவர்களை புகழ்ந்து பின்னர் அந்த ஜனாதிபதியின் வாகுறுதிகள் காற்றில் பறக்கவிடபட்டு நிகழ்வுகள் நடக்கையில் பெசன் பெக் அனர்தம் போன்றே ஜனாதிபதியின் அதிகாரமையங்கள் சகலதும் கை கட்டி பார்துகொண்டிருப்பதை கண்டுவிட்டு கைசேதபடவேண்டாம் "இப்படி வாக்குறுதி தந்துவிட்டு இப்படி நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று???"

    ReplyDelete
  15. Thalaippukkum katturaikkum sampantham illai. Pls change title

    ReplyDelete
  16. அடுத்தகாலத்தில் வரவிருக்கின்ற எலச்சனுக்கான நம்மவர்களுடன் சேர்ந்து காய் நகர்த்துகிறார் . பின்னர் புரியும் என்னவென்று. அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி நடிக்கிறார்கள்.அவ்வளவுதான்

    இந்த அரசாங்கம் படிப்படியாக முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தால் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களின் முழுமையான ஆதரவை இழந்து தவிக்கும் பரிதாம் ஏற்படுமெனும் தெரிவித்துள்ளனர்.
    அதாவது நாங்கள் மீண்டும் உங்களுடன் அணிசேரா முடியாது போய்விடும் என்று கூறுகிறார்கள்.

    இதெல்லாம் விளங்கும் சுணங்கும்

    ReplyDelete
  17. Appa en Halal vidayam President ku theriyatha, Abaya pirachanai theriyadha, Fation bug Udaithathu theriyadha Muslimgalai thewiravathigal endru sonnathu ellam enna??????? Kandiyil Meeting pottadhu theriyadha Pallivasalkalai udaikka sonnathu theriyadha innum sollikonde pogalam.Ungaludaiya thalaippukum kathaikum sambanthame illaye. Ministers yarum kobabpadalaye. Ennamo neeng sollireengal nangal ketkirom. But aduthamurai engawathu ennasari nadanthu neengal yarumm mudiwu edukkatti wait and see people will decide

    ReplyDelete
  18. what ever these people talks only for the screen behind that it would be a drama.
    other thing is the person WHO told to the FASHION BUG OWNER "IF YOU WANT TO CONTINUE THE BUSINESS ISLAND WIDE , SOLVE THIS PROBLEM HOW I SAY" can do anything what ever he wants. some how he will give the priority for his BROTHER :GOTA" other his race becouse he is a racist.
    ONE THING WE SHOULDN'T FORGET all gossips heard before he comes became true!

    ReplyDelete
  19. S HAMEED IN KARUTHTHAI PAARTHTHU SIRITHTHUVITTEN

    ReplyDelete
  20. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைப்பை மாற்றியமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் ,நான் சேக்தாவுது ,தமிழ்நாட்டிலிருந்து .மேலே நான் படித்த கருத்துகள் குறித்து மிக வேதனை கொண்டேன் .இலங்கையில் என்ன நடக்கிறது ?தமிழர்களை அழித்த உங்கள் பிரதமர் இஸ்லாமியர்களிடமும் வேலை காட்டும்முன் சரியாக சிந்தனை செய்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் .அல்லாஹ் போதுமானவன்.செங்கண்ணீருட்ன் சேக்தாவுது .

    ReplyDelete
  22. என்னதான் இலங்கையில் நடக்கிறது ?

    ReplyDelete
  23. If any where Mr. Prisedent having small pcs brain, he should think that his budhhims goverment save form international level in several place and in several occaation save by our muslim countries.. if he did't take serious action on current probelms against our muslims nation in sri lanka. Then we all muslim's need to bring forward our problem to same muslims countries(those help to Mr. Prisedent) diplomatic attnetion ,

    ReplyDelete
  24. ilangkai muslim kal otrumeiyodu seyal phddal yethaium sathikkalam aanal thatphotheye musim aresiyal vathihelai nanpe mudiyathu suyenele vathihal

    ReplyDelete
  25. சீல் குத்தின "சமுக துரோகிகள் ", வடி கட்டிய முட்டாள்கள்

    ReplyDelete
  26. ethuna thadava sollittan ippidi

    ReplyDelete
  27. இத்தகவலை கேட்டதும் மனதிட்கு சந்தோசமாக்கு (அல்லாஹ் அவருக்கு ஈமானைக்கொடுப்பானாக?) இருந்த போதிலும் அவர் சொன்ன இந்த சந்தர்பம்தான் சிந்திக்கவைக்கிரது, இவர் காலம் காலமாக அரசியல்வதிகலால் ஆட்சியய் வசப்படித்திக்கொல்வதட்காக சொல்கிராரோ எண்று சிந்திக்கவைகிரது,(எல்லாம் இறைவனுக்கு வெலிச்சம்) பொதுமக்களும் சிக்கிகொள்ளாமல் நடந்துகொன்டால் சரி.

    ReplyDelete
  28. Innamuma Nambuhirarhal. Oru Muslim irandu Murai Pambu Puthukkul Kaiyai vidamattan. (Hathees) What is the Openion abut our Muslim named Ministers

    ReplyDelete
  29. மஹ்தி ஹஸன் மிகச்சரியாக சொன்னீர்கள்.இவனுகள் தேர்தல் காலத்திற்காக ஆடுகின்ற ட்ராமா இது.

    ReplyDelete
  30. Ithu rombavume palaya dialogue ahidichche ovvoru election varum pothum ithaithane solluvaru election mudinchathukku appuram palaya kurudy kathava thoradi nu nipparu.....! Neenga sary sollakkoodatha koncham puthusaaaaaa...? Enna sary sollunga........ Nu. Pavan neengalum ennathan seivinga?

    ReplyDelete
  31. Ok will c after 8th of January 2015

    ReplyDelete
  32. wow.....when i see those above comments today i can understand the power of allah. alhamdulillah. today mahinda came to parliament as a just member. he is done.

    ReplyDelete

Powered by Blogger.