April 16, 2013

கம்பளை லக்கி எம்போரியம் தாக்குதல் தனிப்பட்டது - காதர் ஹாஜியார்


கம்பளையில் இன்று பிற்பகல் லக்கி எம்போரியம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் தனிப்பட்ட விவகாரம் என பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு காதர் ஹாஜியார் வழங்கிய தகவல்கள் வருமாறு,

லக்கி எம்போரியம் மீதான தாக்குதலை அடுத்து அந்த கடையின் சில கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இது முற்றிலும் தனிப்பட்ட விவகாரம். இது தனிப்பட்ட இருவருக்கிடையே நடைபெற்ற சம்பவம். நூற்றுக்கு 100 வீதம் இது தனிப்பட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதை விட்டுவிடுங்கள். நான் கொழும்பில் இருக்கிறேன்.வேறு எவராவது தாக்கியிருந்திருப்பின் நான் வீதிக்கு இறங்கியிருப்பேன் என்றார்.

பிற்குறிப்பு - இவற்றையெல்லாம் கூறிய பிரதியமைச்சர் காதர் ஹாஜியார், தான் கூறியவற்றை இணையத்தில்  பதிவிட வேண்டாமென்றார். ஜப்னா முஸ்லிம் இணையமோ அவரிடம் இல்லை இந்த தகவலை பதிவிட்டால்தான் மக்களிடம் உங்கள் கருத்து போய் சேரும், மக்களும் அதனை அறிந்துகொள்ள வேண்டுமல்லவா என கேட்டபோது சரி பதிவிடுங்கள் என்றார்.

இதுகுறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக லக்கி எம்போரியம் நிறுவனத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொள்ள முயன்றபோதும் எமது முயற்சிக்கு பயன் கிட்டவில்லை

5 கருத்துரைகள்:

Dear Jafnamuslim, why u ask Kadhar, don't u know as he is a liar? now he become Joker also.

ஐயோ காதர் அண்ணே நீங்க ரோட்டுக்கு எறங்காதீங்கண்ணே.நீங்க வீதிக்கெறங்கி சமுதாயத்துக்கு செஞ்செதெல்லாம் போதுமண்ணே. தல்லாத வயது ஒங்களுக்கு. முஸ்லிம்கள்ட துஆ பரக்கத் ஒங்களுக்கு நெறய்ய்ய இருக்கு. அதனால கார் பஸ்ஸெல்லாம் ஒங்கள முட்டிடாது

Hello stop licking the boots of the Governemt, wake up and speak on behalf of our community.

we know that there is a MP call Cader, no need to give a statement to remind you.

Avar roottil iranguvaaro illayo, engaley nadu roottil irakki vidaamal irundaal nallathu. Veshathaarihalay nanba mudiyaathu.

Post a Comment