Header Ads



கிறிஸ் மனிதனால் கால் இழந்த முகம்மட் சப்ராஸ்க்கு உதவுவோம்...!

(ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பிராந்திய நிருபர் அண்மையில் கிறிஸ் மனிதன் பிரச்சினையில் கடற்படையினர் துப்பாக்கியால் தாக்கிய இக்பால் முகம்மட் சப்ராஸ் வீட்டுக்கு சென்று அவர்களது நிலமையினை கண்டறிந்த போது..) 

2011.ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஞாயிறு இரவு 8 மணியளவில் வீடொன்றின் சமையலறைக்குள்ளிருந்த பெண்ணை முக மூடி அணிந்த ஒருவர் யன்னல் ஊடாக கூப்பிட்டுள்ளார். அவரைக் கண்ட அப்பெண் அவலக் குரல் எழுப்பவே அயலவர்கள் அங்குவர முக மூடிய கிறிஸ் மனிதன் தப்யோடிவிட்டார். அவரைத் தேடியபோதும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதே நேரம் இரவு 11 மணியளவில் பைசல் நகரில் வீடொன்றில் தனிமையிலிருந்து பெண்ணை ஒருவர் யன்னல் ஊடாகக் கத்தியைக் காட்டி மிரட்டவே அப்பெண்ணும் அவலக் குரல் எழுப்பியுள்ளார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வரவே கிறிஸ் மனிதன் தப்பியோடியுள்ளார். எனினும் அவரை இளஞர்கள் உட்பட பலரும் துரத்திச் செல்லவே தப்பி சென்று கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடற்படை முகாமினுள் நுழைந்ததை அப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு கடற்படை முகாம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மறைந்திருக்கும் மர்ம மனிதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக முகாமில் இருந்து கடற்படையினார் இளைஞர்களை நோக்கி துப்பாக்கியால் வெடிவைத்தார்கள்.

அப்போது இரு 16 வயது இளைஞர்களை துப்பாக்கி ரவைகள் தாக்கியது அதில் ஒருவர் தற்போது குணமாகிவிட்டார். இரண்டவது 16 வயதான இக்பால் முகம்மட் சப்ராஸ் என்ற இளைஞர் எழுந்து நடக்க முடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றார். 

இக்பால் முகம்மட் சப்ராஸ் கடந்த இரண்டு வருடங்காளக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மற்றும் இதுவரை சப்ராஸ்க்கு வைத்தியச் செலவாக  2600000 ( இருபத்தி ஆறு லட்சம்) ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் தற்போது சப்ராஸின் வைத்தியச் செலவுக்கு அவரது குடும்பம் பெரும் கஷ்டத்தினை எதிர் நோக்குகின்றார்கள்.

முகம்மட் சப்ராஸ் எழுந்து நடப்பதற்கு இரண்டு செயற்கை கால் பொருத்தவும், காலில் உடைந்த பகுதிகளை நிமிந்த உடற்பயிற்சி கருவிகள் வாங்குவதற்கும், ஏனைய வைத்திய செலவுகளுக்கும் தற்போது 300000 (மூன்று லட்சம் ரூபாய ) தேவைப்படுகின்றது.  

தனவந்தர்கள், செல்வந்தர்கள், உதவிசெய்ய நினைப்பவர்கள் கிறிஸ் மனிதன் பிரச்சினையில் எமது சமூகத்திற்காக குரல் கொடுத்து காலினை இழந்த தற்போது பதினொட்டு வயதான முகம்மட் சப்ராஸ் எழுந்து நடக்க வேண்டும் என துஆ செய்வதுடன், உங்கள் நன்கொடைகள் மூலம் உதவுங்கள்..!







2 comments:

  1. Greas man was also a political drama against public.
    every body affected and this young boy very much affected So all of us must help him. Including if any body find any suitable job for his future. Or help him to own a self business.

    ReplyDelete
  2. Right now we have to collect the amount for his treatment.. and then as suggested, he must get a suitable job for his survival.

    ReplyDelete

Powered by Blogger.