Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 150 கிலோ ஏலக்காய் பிடிபட்டது


(Tn)சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 150 கிலோ ஏலக்காய்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சவூதியின் ஜித்தா நகரிலிருந்து நேற்றுக்காலை 9.15 மணியளவில் தரை யிறங்கிய எஸ்.வி. 780 ரக சவூதியா எயார் வேஸ¤க்கு சொந்தமான விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடமிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து சவூதிக்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் விசேட வழியூடாக வெளியேறிக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான இருவரது பயணப் பொதிகளை சுங்கப் பகுதியினர் சோதனையிட்டனர்.

ஒருவரிடமிருந்து 100 கிலோ ஏலக்காயும், மற்றுமொருவரிடமிருந்து 50 கிலோ ஏலக்காயும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 150 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 100 கிலோவுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும், 50 கிலோவுக்கு 5000 ரூபா தண்டப்பணமும் அறவிடப் பட்டுள்ளது. பொருட்களை கொண்டு வந்த இருவரும் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.


2 comments:

  1. இனிமேல் எந்த வேலையும் செய்யமுடியாது இதுவரை வாங்கியது போதும் இனிமேல்போதுபல சேனாவுக்கு உதவு வோம் என்று சுங்கத்தில் உள்ளவர்கள் இருப்பர்கள் என்று சொல்வதை விடுத்து, நாம் போன வேலையே முக்கியம் என நாடு திரும்பு வதே இந்த நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் செயும் உபகாரமாகும் சிகரட் கொண்டுவருவது போன்றவற்றையும் கஸ்டம் அதிகாரிகள் கண்டிப்பாக பிடிக்க வேண்டும்

    ReplyDelete
  2. umraa panathai cover panna partheengalo.................

    ReplyDelete

Powered by Blogger.