Header Ads



இப்படியும் ஒரு பொலிஸ்காரர்


ஊழலில் மூழ்கித் திளைக்கும் 174 நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சோவியத் குடியரசு நாடுகள் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷ்யா, இந்த பட்டியலில் 133-வது இடத்தில் உள்ளது. ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அரசு எடுத்துவந்த போதிலும், ஊழல் ஓய்ந்தபாடில்லை.

கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரஷ்ய அதிகாரிகளிடம் இல்லாவிட்டாலும், கடமையை மீறுவதற்காக கையை நீட்டும் அரசு அதிகாரிகள் நிறைய பேர் ரஷ்யாவிலும் உண்டு. முறைகேட்டிற்கு துணை போகாத ரஷ்ய போலீஸ்காரர் ஒருவரை அந்நாடு கவுரவிக்க உள்ளது.

15 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக பெற மறுத்து, தனது கடமையை செய்த போக்குவரத்து போலீஸ்காரரை எந்த அரசாக இருந்தாலும் பாராட்டியே தீர வேண்டும் என்பதை நேர்மையானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

ரஷ்யாவை சேர்ந்த வசதியான வாலிபர் ஒருவர், 300 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்தார். அந்த கார்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்ற உண்மையை மறைத்து, பதிவு எண் வழங்கினால் 45 மில்லியன் ரூபிள் (15 லட்சம் அமெரிக்க டாலர்) லஞ்சம் வழங்குவதாக பதிவு எண்ணை வழங்கும் போக்குவரத்து போலீஸ்காரருக்கு அவர் ஆசை காட்டினார்.

ஆனால், அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அந்த ஆசாமியை கைது செய்த போலீஸ்காரர், அவர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நேர்மையை பாராட்டி அவருக்கு சிறப்பு விருது, பதவி உயர்வு மற்றும் 1 லட்சம் ரூபிள் (நம் நாட்டின் மதிப்புக்கு சுமார் ரூ. 2 லட்சம்) ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க உள்ளதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2 comments:

  1. How about our Examiners who issue driving licences in Srilanka?????????????

    ReplyDelete

Powered by Blogger.