Header Ads



வடக்கின் பெரும் சமருக்கு முஸ்லிம்களை அழைக்கிறோம்..!



(அகிலன் சிதம்பரநாதன்)

வடக்கின் பெரும் சமர் ( Battle of The North ) என்ற பெயரில் அறியப்படும் யாழ் மத்திய கல்லூரி (Jaffna Central College ) மற்றும் யாழ் புனித பரியோவான் கல்லூரி (Jaffna St. John's College) இடையிலான வருடாந்த மாபெரும் கிரிகட் போட்டிகள் 107 ஆவது வருடமாக, 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளன.

09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை, வருடாந்த Central Night ஒன்றுகூடல் யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற இவ்விரு கல்லூரிகளிலும், இரு தசாப்தங்களுக்கு முன்னர் வரை கணிசமான அளவு முஸ்லிம்கள் கல்வி கற்றுள்ளனர்.

தமது கல்லூரிகளின் பாரம்பரிய நிகழ்வில் கலந்து பிணைப்புக்களை வலுப்படுத்திக்கொள்ள முஸ்லிம்கள் அழைக்கப் படுகின்றனர்.

No comments

Powered by Blogger.