February 14, 2013

குனூத் ஓதும்போது ஆயுதம் கேட்பீர்களா..? ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறப்பு அமைச்ரவை கூட்டம் வியாழக்கிழமை, 14-02-2013 அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களும் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எழுப்பிய கேள்வியொன்று முஸ்லிம் அமைச்சர்களை விசனமடையச் செய்துள்ளதுடன், அவர்கள் இதுதொடர்பில் தமது வேதனைகளையும் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் குனூத் ஓதுமாறும் ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் அமைச்சர்களை பார்த்து, குனூத் ஓதும்போது ''ஆயுதங்களையும் தாருங்கள் என முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய மாட்டார்களா..? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து எழுந்த இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத முஸ்லிம் அமைச்சர்கள் வாயடைத்து நின்றுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து எழுந்த இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத முஸ்லிம் அமைச்சர்கள் வாயடைத்து நின்றுள்ளனர். பின்னர் ஒரு முஸ்லிம் அமைச்சர் ஜனாதிபதியை பார்த்து, முஸ்லிம்கள் நாட்டின் ஒற்றுமைக்காகவும், சகிப்புத் தன்மைக்காகவும்கூட குனூத் ஓதுகிறார்கள். இது நாட்டிற்கெதிராகவோ இல்லை எந்த சமூகத்திற்கெதிராகவோ இறைவனிடம் இறைஞ்சும் விவகாரம் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இக்கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் இதுதொடர்பில் தமது கருத்துக்களை அங்கு ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எனினும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் கருத்து வெளியிட்டுள்ள சில முஸ்லிம் அமைச்சர்கள் மிகுந்த மனவேதனையடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அறியவருகிறது. இக்கூட்டத்தில் பேசப்பட்ட மேலும் சில விடயங்களை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் பகிர்ந்துகொண்ட போதிலும்  சில காரணங்களுக்காக நாம் அவற்றை இணையத்தில் பதிவிடுவதை தவிர்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

30 கருத்துரைகள்:

தன்மானம் இழந்த இந்த அமைச்சர்களுக்கு எப்படி மன வேதனை வந்ததோ தெரியவில்லை.

நக்குண்டார் நாவிழந்தார்.

முஸ்லிம்களை இப்படி இரண்டாம் தரப்பிரஜையாக நடத்தும் இந்த ராஜபக்சவை முஸ்லிம் மக்கள் நிட்சயமாக தண்டிப்பார்கள்.

muslim politicians should be explain about islam to non muslim politicians.

ஹகீம், மற்றைய முஸ்லிம் அமைச்சர்களே! நம் இதயத்தின் குறுக்கே சூடேற்றிய முள்ளுகள் உள்ள இரும்புக் கம்பியால் பல தடவை வெறியுடன் குத்துவது போல் இல்லையா! இந்த இனவெறி வார்த்தைகள்!

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஓட்டுக்காக ஒட்டுப்போடப் போகறீர்கள்? இப்படி ஒரு தேட்டம் தேவைதானா? என்று இன்னுமா தோணவில்லை? எப்போ திறக்கும் உங்கள் “ஆகிரத்துக்கான” கண்கள்? எதை வைத்திருக்கிறீர்கள் அல்லாஹ்விடம் போய் ஓட்டுப்போட?

அல்லாஹ்வுக்காக, கட்சி, அரசியல் தோழர்கள், நீங்கள் சேர்த்திருக்கும் பொருட்கள், சொத்துக்கள், பதவியால் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்புகள், வங்கி மீதிகள், வங்கியில் இல்லாத மீதிகள் போன்ற எல்லா வற்றையும் புறம் தள்ளி, நிதானித்து தனிமையில் இருந்து, சிந்தியுங்கள்! நீங்கள் வாசிக்காக சேர்த்த இவைகளெல்லாம் செல்லாக் காசிகளாக தெரியும்.

கடைசியாக அல்லாஹ்விடத்தில் சரணடைதலும் அதற்கான தேடல்களும் இருக்கின்றதா? என்றால் உங்களில் பலருக்கு “கேள்விக்குறிகள்” மட்டுமே உங்கள் தலைக்குள் கட்டெறும்புகள் போல் ஊர்ந்து திரியும்.!!!!!!!!!!!!

-அபூ அய்மன்-

ஜனாதிபதி அவர்களே!
குனூத் என்பதே முஸ்லிம்களின் ஆயுதங்களில் ஒன்றுதான்.
முஸ்லிம்களுக்கு பலமே குனூத் போன்ற ஆயுதங்கள் தான் இது ஒற்றுமைக்காகவும் இன நல்லுறவுக்காகவும் தான் தற்போது பள்ளிவாயல்களில் ஒதுகின்றர்களே தவிர யாரையும் அழிப்பதிட்கில்லை.

aaha .ivanukaliuku appadi puriya vaikura.the president should learn our Islamic religion .otherwise .he cant understand. the my kindly request that Islamic politicians have to unite in this matter.pls Islamic politicians

நமது சமூகத்தில் பல முனாபிகுகள் ஊடுருவி உள்ளார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது, இது முஸ்லிம் என்ற பெயரில் உள்ள காபிர்களாகவும் இருக்கலாம். எனவே முஸ்லிம்கள் அவதானமாக இருப்பது நல்லது.

Kunooth than emadu ayutham enpathai yaro avaridam solla poy awar athai thawaraha purindu kondullar

muslimgal kunooth il aayudm ketkath thewai illai becaues mulimgalukku duawe aayudam than!
الدعاء سلاح المؤمن!

கோடாரிக்கம்புகளை பிடுங்கி எரியாத வரைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தீராது.

Supplication: the Weapon of the Believer

MR அமைச்சர் மார்களே
சாதாரன மனிதன் என்னாலேய இதை பொருத்து கொள்ள முடியாது என்றால் மக்களின் ஆணையை பெற்ற நீங்கள் எவ்வாறு பொருத்து கொள்கிறீர்கள் vote பண்ணிய அதிகாரத்தில் கேட்கின்றோம் அல்லாவுக்காக ஒன்றுபடுங்கள் எமது முஸ்லிம்களை பாதுகாருங்கள்.

Muslimgalana Naam Onrupadum varai Kafirhelal Nasukkep Pattukondethaan Iruppom.
"Insha Allah Nanmaiyei Yevi Theenmaiyei Thadupom"

Allah Nam Pakkemthan.

Where is our White and White (Old Man) he is very closed to President. why he cant teach him about Islam.

Old man only told before that Muslim Terrorist group there in Estern side.

மானம் இழந்த முஸ்லிம் பெயர் தாங்கி இது ஒன்றும் பெரிதல்ல அவர்களுக்கு வேண்டியது பதவி,பதவி,பதவி..

குனுத்தில் உள்ள் வாசகங்களின் பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக!நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக!நீ பொறுப்பேற்று கொண்டவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக!நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரக்கத் செய்வாயாக!என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! (எதையும்)விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேர்ப்படுத்த முடியாது.நீ எவருக்குப் பொறுப்பேற்று கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.எங்கள் இறைவா!நீ பாக்கியம் பொருந்தியவன்!உயர்ந்தவன்!

அறிவிப்பவர்:ஹசன்(ரலி)
நூல்கள்:திர்மிதீ (426)நசயீ (1725)

If H.E.President refer Qunooth, he must know the meaning too.
We must turn the blames as propagation to Islam.
This is a great help we could do to our non muslim community.

அமைச்சர்களுக்கு குநூதின் பொருள் தெரிந்திருந்தால் வாயடைக்க வேண்டியதில்லையே ........அதன் பொருளை சொல்லி இருந்தாலே மகிந்தவின் வாய் அடை பட்டிருக்குமே .....பாவம் அவர்களுக்கு எப்படி பதவியை தக்க வைக்க முடியுமென்று சிந்திப்பர்களே தவிர இஸ்லாத்தை எங்க படிக்க போகிறார்கள் .......இப்போதைக்கு மகிந்தவுக்கு சலாம் போடுவார்களே தவிர ......இஸ்லாமியர்களுக்கு இல்லை

மஹிந்த வின் இந்த கேள்விக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான நிறைய அருத்தங்களும் ,பிண்ணனிகளும் இருப்பது புலப்படுகின்றது.மனதுக்குள் ஏதோ ஒன்று இருப்பதனாலே இந்த வடிவத்தில் வினா எழும்பியுள்ளது.இனிமேலாவது முஸ்லிம்களும்,முஸ்லிம் எம்பிக்களும் விழிப்போடு இருப்பது நல்லது.

முஸ்லீம்களின் உரிமைகூட இல்லாமல் போய்விட்டது பதவி ஆசைபிடித்த முஸ்லீம் பெயர் தாங்கிய அரசியல்வாதிகளால் இவர்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள வாய் கிழிய பேசவும் செய்வார்கள் ஊமையாக இருக்கவும் செய்வார்கள்

ALLAHU AKBAR ALLA VZTRUKKUM AVANE PORUPALAN

President should learn Islam. Then only he can involve the matters which are faced by the muslims. 1. What is Islam?
2. Who is a real muslim?
3. What are the duties of a muslim?
4. What is the contribution to this world and the hereafter of a Muslim?

சத்தியம் என்ன என்பதை கையில் வைத்துகொண்டு வாயால் பேசாமல் இருப்பது வேதனை. உண்மை நிலையை அறியப்படுத்துவது எமது கடமை அல்லவா? பேசும் திறன் ஆற்றல், உரிமை அனைத்தும் இருந்தும் மவ்நிகலாக இருப்பதே வேதனை.மார்கத்தை அன்னிய மக்கள் மத்தியில் எத்தி வைப்பதும் இழந்த உரிமைகளை மீளப் பெறவும் நல்ல சந்தர்ப்பம் அல்லவா இது இந்நிலையிலும் மௌனம் சாதிப்பது குற்றம்.

Yar Aniyayam Saihirahalow Awarhlukku Ediraha Allah Vidam Anaaithu Thouluhaielum Udavee Taduwaduthan Isalmiya Kunuwaththu Anal Nam Tatpoludhu Saiwadhu Islamiya Kunuwaththu Ellay Eday Annaiwarum Willangikkolla Wendum . NAM SAREEYAHA ALLAH SONNAPPIRHARM ERUNDAHL ALLAH ENGALUKKU UDAVEE SAIWAN NAM YARUKKUM PAYAPPADA THAWAI ELLAY. ALLAH AKBAR

amaicharhale;iniyavathu ottumai enum kodiyai eanthugkal muslim amaicharhal muslimkalin vaakkuhalaip pirithu sigkala arasukku pangku kodukathirhal neegkalellarum ottumaiyaha ugkalathu palathaikkaaddugkal nichayam vetty namakundu allah melanavan anaithukum pathil solliye aaha vendum...allah nam anaivaraium ottomaiyaaha vaalvathatku arul puriya vendum.............

When the mosques are damaged the voice should come from the South Eastern region but where are the voices. We are running behind priviledges.

Inda Kunoothai patri Periyavarukku eppadi theriyum??? Ivar oru yoodar allathu yoodarukku udaviyalaraka Irukkalam. Karanam periyavar than Israel Embassiyay ilangaiku kondu vandu pottar. Athan piraku than Muslimgalukku prechchinai nalukku nal athikariththu varukirathu. Muslimgalukku edirana ella seyalgalukkum pinnal isravelargalin sooltchi/thoonduthal irukkalam. Agayal nam avasarapadaamal, nithanaththudanum porumayudanum seyalpaduwom.

Ellam valla Allah ve anaiththayum arinthavan. Naam Allah'vin nerukkaththai athikarippom melum atharkuriya valikalai erpaduththuwom. Avanidame udaviyum theduwom. Avane engalukku podumanavan "HASBUNALLAHU VANIHMAL WAKEEL"

நக்குண்டார் நாவிழந்தார்.............

Post a Comment