Header Ads



மன்னார் முசலி மகா வித்தியாலயத்தறிகு தரம் பெற்ற அதிபர் ஒருவரை நியமிக்க கோரிக்கை



(அபூ அல்தாபி)

முசலிக்கோட்டத்தில் தாய்ப் பாடசாலை, முந்நாள் கொத்தணி மகாவித்தியாலமும், இந்நாள் மகிந்தோதய மகா வித்தியாலயமுமான முசலி மகாவித்தியாலம் கடந்த காலங்களில் பாடவிதான செயற்பாடுகளிலும், இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், நிருவாக சேவை அதிகரிகள், பட்டதாரிகள், ஏனைய புத்தி ஜீவிகள் போன்ற பலரை உருவாக்கியுள்து.இதற்கு அக்காலத்தில கடமை புரிந்த அதிபர்ளும், அர்ப்பணிப்புமிக்க யாழ்ப்பாண தமிழ் ஆசிரியர்களும், மன்னார், எருக்கலம்பிட்டி, தாராபுரம், விடத்தல் தீவு போன்ற பிரதேச ஆசிரியர்களும் எமது பிரதேச ஆசிரியர்களுமே காரண கர்தாக்களாகும்.


இன்று இப்பாடசாலையின் அடைவு மட்டம் புத்தி ஜீவிகள் கவலைப்படும் அளவில் உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்தவர்கள் அப்படி இருந்தும் அடைவுமட்டம் தாழ் நிiயில இருப்பதற்கு யார?; காரணம் இங்கே சீர் செய்ய வேண்டிய பிரச்சினைகள் உள்ளது.என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.


மீளக்குடியேறிய பின்பு இப்hடசாலை திறக்கப்பட்டு ஏறத்தாழ 08 வருடங்கள் கழிந்துள்ளன.இன்னும் யுத்தத்தைப்பற்றிக் கதைத்துக்கொண்டு, வளமில்லை எனச் சொல்லிக் கொண்டும், காலத்தை கடத்த போகிறோமா? 1990 ம் ஆண்டுக்கு முன்பு சித்தி விநாயகர்; படசாலையும், அல்-அஸ்ஹர் பாடசாலையும் இருந்த நிலையையும் தற்போது அவை மாவட்டத்தி;ல் புரியும் சாதனைகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.ஏன?; அப்படி எமது படசாலையையும் கொண்டுவர முடியாது.


இதனைச் சீர் செய்ய இப் பாடசாலைக்கு கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர் அல்லது அதிபர் சேவை;  தரம் 01 ஐச் சேர்ந்த ஒருவருவர் நியமிக்கப்பட வேண்டும்.இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட உள்ளது. மன்னார் வலயக்கல்வி அலுவகம் தனது குழுப்பரிசோதனைகளை அடிக்கடி மேற் கொள்ள வேண்டும்.சிறப்பாக பணியாற்ற முடியாத ஆசிரியர்கள் வெளியேறி மற்றவர்கட்கு வழிவிட வேண்டும்.

இது தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களும்,வடமாகாண கல்விப்பணிப்பாளர் அவர்களும், வடமாகாண ஆளுனர் அவர்களும், வன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசலிப்பிரதேச புத்தி ஜீவிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

1 comment:

Powered by Blogger.