Header Ads



ஜம்மியத்துல் உலமா சபையை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டேன் - ஜனாதிபதி மஹிந்த


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,

நாட்டிற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஆற்றிய அளப்பரிய பணிகளை நான் ஒருபோதும மறக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜெனீவா சென்று தேசத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையே என புகழாரம் சூட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த, தனது வாழ்நாளில் ஒருபோதும் ஜம்மியத்துல் உலமா சபையின் சேவைகளை மறக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டை முன்னெடுப்பவர்கள் ஜெனீவா பிரேணையின் போது எங்கிருந்தார்கள் எனவும் இதன்போது கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த இலங்கை முஸ்லிம்கள் தமது அரசாங்கத்திற்கு வழங்கும் ஒத்துழைப்புக்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவரே இத்தகவலை எமது இணையத்திற்கு வழங்கினார்.

4 comments:

  1. அடுத்த ஜெனீவா மகாநாடு வருகுது தானே இப்படி தான் செய்வார்கள் பின்னர் பளய குறுடி கதவ திரடீ தான்

    ReplyDelete
  2. அனைத்தும் ஜனாதிபதிக்கு தெரியும்..! இருந்தும் அதனை செயலில் காட்டலாமே..!

    ReplyDelete
  3. பத்து வருஷம் போன புறகு போய் கேட்டாலும், விடமாட்டோம் என்று futureலதான் இருக்குமே தவிர, நிறுத்திவிட்டோம் என்று pastல வராது......

    ReplyDelete

Powered by Blogger.