Header Ads



சகோதரி றிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு  அறிவித்தது.

இன்று புதன்கிழமை, 9 ஆம் திகதி, இலங்கை நேரப்டி 11.40 மணியளவில் சகோதரரி றிசானா மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


கடந்த 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா, இரண்டு வாரங்களில் சிசுவொன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடவுச் சீட்டில் வயதை மாற்றி ரிசானா சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற பல்வேறு தரப்பினரும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப் பின் அப்துல் அசீஸ் இன்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

50 comments:

  1. manastchiye illama mannippu kodukkadha andha thai oru unmayan muslima ikawe maatal

    ReplyDelete
  2. 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'
    அவரது பெற்றார், குடும்பத்தினர், ஊர்மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அவரை மன்னித்து சுவன வாழ்வு அளிப்பானாக!

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.... அன்னாரது பாவங்களை மன்னித்து மறுமையில் சிறந்த பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பானாக ...
    அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன் ..

    ReplyDelete
  4. innalillahi wayenna elahi rajioun....muslim kal muslimaha erunthal intha mathiry nadakkathu..allah tholuhayya mukkiyama sonna edathil sakkathyyum waly urthiy ullan..selvantharhal yalayhalukku uthawi seythu siyathanm yadukkamal erunthal entha mathiry nadakkathu..yallarukkum panam pathwi aasay...yallorum maranaththy ninaythal ethu onrukkum ninau warathu.......

    ReplyDelete
  5. மன்னிக்கும் பண்பற்ற,மனச்சாட்சி இல்லாத,கொடூரமானவர்கள்தான் அந்த குழந்தையின் பெற்றோர். காட்டு மிராண்டி தந்தையும் தாயும்.... சீ கேவலம்... யஹூதிகளின் பரம்பரையை சேர்ந்தவர்கள் போலும். முதலில் அந்த Sub - Agent ஐ தூக்கிலிடவேண்டும்.சரியான அரசாக இருந்தால் Saudi Arabia விற்கு பணிப்பெண்கள் அனுப்புவதை தடை செய்ய வேண்டும்.செய்யுமா இந்த அரசு?

    ReplyDelete
  6. மனிதநேயத்தோடு ரிசானா நபீக்கும் சவூதியில் கொலை செய்யப்பட்டார்.

    ReplyDelete
  7. இது பணிப்பெண்கள் அனுப்பும் Agentகளுக்கு படிப்பினையாக அமையும்..

    அதே நேரம் சிறு வயதில் தனியாக,கல்வி அறிவு,அனுபவம் குறைந்த பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் படிப்பினையாக அமையும்..

    சீதனம் போன்ற விடையங்களுக்க வெளிநாட்டுக்கு போகும் பெண்களே...அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்.....

    அல்லாஹ் இந்த பெண்ணின் மறு உலக வாழ்கையை நல்லதக்கி வைப்பானாக..

    ReplyDelete
  8. "இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜிஊன்". இது ஒரு கவலை தரும் விடயம் என்றாலும் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி என்பதை மறக்க வேண்டாம். இவர் மீது சரியான சாட்சிகள் இன்றி குற்றம் சுமத்தப்பட்டிருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள். அவருக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.

    ReplyDelete
  9. إنا لله وإنا إليه راجعون
    We extend our heartfelt condolences to Rizana & her family on the death of Rizana.

    We pray to Allah Almighty to bless the deceased with His grace and admit her into Paradise. “We belong to Allah and to Him we return”.

    ReplyDelete
  10. Inna Lillahi wa inna ilaihi raji'un

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்
    யா அல்லாஹ் அறியாத பருவத்தில் செய்யாத கொலைக்கு வீணாக பலியாக்கப்பட்ட இந்த இளம் பிஞ்சின் பாவங்களை போருத்தருவாயாக
    ஆமீன்
    மன்னிக்கதெரியாத ஜென்மங்கள் இந்த அரபுகள் ....இன்னும் ஜாஹிளிய்யகாலம் மாறாத நிலையில் வாழும் ஜென்மங்கள்

    ReplyDelete
  12. அல்லாஹ்வின் சட்டத்தை குறை கூறுவது போல உல்ளது உங்கள் comment .. குழந்தையின் பெற்றோர்கள் மன்னிப்பது அவருடைய விருப்பதை பொருத்தது...அவர்களுக்கும் குழந்தையை இழந்த கவலை இருக்கும்தானே... இத் தஹ்ண்டனை சரியாய் தவற என்பது இன்சாஹ் அல்லாஹ் மருமையில் விசாரிக்கும் பொது தெரிய வரும்...நாங்கள் யஹூதிகள் போன்று பேசாமல் இருந்தால் சரி... அடுத்து பெரும்பான்மை சகோதர்கள் கிளம்பி விடுவார்கள்,,so...அதுக்கு மார்க்க அடிப்டையில் பதில் சொல்வதற்கு தயாராக இருக்கும்படி கேட்டு கொள்கின்ரேன்....

    ReplyDelete
  13. @ Ishak ... அல்லாஹ்வின் சட்டப்படி மன்னிக்கலாம் or மன்னிக்காமல் இருக்கலாம்... நீங்கள்தான் ஜாஹிலியா காலத்தில் இருக்குறீர்கள்.... என்னமோ சும்மா மரண தண்டனை குடுத்த மாதிரி பேசுகிறீர்கள்...
    விசாரணை செய்துதான் தண்டனை குடுத்து இருப்பார்கள்...அதில் தவறு இருந்தால் அது மருமையில் விசாரிக்கபடும்....அல்லாஹ் நீதியன்வன் அதனை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....

    ReplyDelete
  14. If our Zakat money and Sadaqa's are reaching properly to poors and our leaders are taking care of our society, why our sisters should go to middle east. Just come and see what our sisters are doing in Dubai. These all because of failure of leadership and masjids. Masjids should take care of their mahallah people. We should blame ourselves.

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹ், இறைவன் இவருக்கு சுஹதாவின் நன்மை வழங்க பிரார்த்திப்போம். தன் குடும்பத்துக்காக தன் வாழ்வை இழந்த பெண். மேலும் எந்த ஒரு கஷ்டத்திட்கும் இனிமேல் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் மத்திய கிழக்கிற்கு போக கூடாது எனும் செய்தியை சமூகத்திற்கு சொல்லும் வலுவான ஒரு விம்பம். எத்தனயோ இளம் பெண்களை காப்பாற்றப் போகும் இவரின் மரணம். அந்த வகையில் இவர் ஒரு சுஹாதா தான்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    யா அல்லாஹ் இந்த சகோதரியின் பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கத்துக்கு அனுப்புவாயாக.
    நீயே யாவற்றையும் அறிந்தவனாகவும் நீதியானவனாகவும் இருக்கின்றாய்.

    ReplyDelete
  17. நாட்டில் உள்ள அதுவும் சரீஆ சட்டம் நிறைவேட்டப்படும் போது அதில் குறை காண விளைவது சரீஆவில் குறை காண்பதாகும். எனவே சட்டத்துக்கெதிரான நமது வார்த்தைகள் கவனம். உங்கள் விமர்சனங்கள் அல்லா குர்ஆன் சட்டத்துக்கு புறம்பானது என்றால் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படலாம் இல்லாவிட்டால் அல்லா குர்ஆனுக்கு எதிரான விமர்சனமாக நீங்கள் அல்லாஹ்வால் தண்டிக்கப்படலாம். மார்க்க சட்டங்களோ அல்லது அரச சட்டங்களோ நிறைவேற்றப்படும் போது அதை அப்படியே அல்லாஹ்வின் பக்கம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வதே நமக்கு போருத்தமமும் தண்டிக்கப்பட்ட ஆத்மாவுக்கும் பொருத்தம். மகழே தெழிவு பெறுங்கள்.

    ReplyDelete
  18. இன்னாலில்லாகி வஇன்னா இலைகி ராஜஊன் .யா அல்லாஹ் சகோதரி றிசானாவின் பாவங்கள் யாவற்றையும் மன்னித்து ஜன்னதுல் பிதௌஸ் எனும் சுவர்கத்தில் நுழைய வைப்பாயாக

    ReplyDelete
  19. யாஅல்லாஹ்! இந்த சகோதரிக்கு சுவணவாழ்வை நிரந்தரமாக்குவாயாக.எமது சகோதரிகள் வெளிநாடு வருவத்கான முதற் காரனம் சீதனமே!இந்தகேடுகெட் செயலை விட்டும் அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக!

    ReplyDelete
  20. உலகிலேயே மனிதர்களில் மிக கேவலமானவர்களும் மிக இழிவடந்தவர்களாகவும் அரபிகள் தங்களை மீண்டும் ஒரு முறை நிறூபித்து இருக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் மட்டும் அவர்கள் சமூகத்தில் இருந்து வந்திருக்காவிடில் அவர்களை மனித குலமாகவே உலகம் நோக்கி இருக்காது
    இஸ்லாமிய ஷஃரிஆவை துஸ்பிரயோகபடுத்தி 500 கோடிக்கு மேட்பட்ட உலகின் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாம் என்றால் மிக கொடுமையானது மனிதாபிமானமே இல்லாதது என்ற அபான்டத்தை இந்த செயலின் மூலம் அவர்கள் எத்திவைத்து இஸ்லாத்தை இன்றைய நாளில் கழங்க படுத்தி இருக்கிறார்கள்???

    ReplyDelete
  21. இருமாப்புக்காகவும் பகட்டுகாகவும் அநியாயமாக சாட்சியே இல்லாத ஒரு கொலைக்கி இஸ்லாத்தின் பேரால் தண்டனை வழங்கி இஸ்லாம் பற்றிய தப்பான என்னங்களை முழு மனித சமூகத்திட்கும் வழங்கி இருக்கும் இந்த நிகழ்வின் மூலம் நிச்சயமாக மிக பெரிய அழிவை அவர்கள் சந்திபார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை கடாபிபோல் சதாமைபோல் சவுதிய அரசும் அதன் ஆட்சியாளர்களும் அதன் கொடுங்கோள் அரசின் சட்டங்களும் வீழ்ந்து நொருங்கி தவிடு பொடியாக போவதை மிக மிக விரைவில் எதிர்பார்களாம்

    ReplyDelete
  22. றிஸானாவுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.பலரது கருத்தும் மன்னிப்பு வழங்க மறுத்த பெற்றோரை குற்றவாளியாக சித்தரிக்க முனைந்துள்ளமை தவறானது.ஏனெனில், குழந்தையை இழந்த ஒரு தாயிற்கு தான் அதன் வலி புரியும்.எனவே தான் இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் மனம் திருப்தி அடையும் விதமாய் பலிக்குப்பலி என்பதை வைத்துள்ளது.இப்படி சட்டம் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவன் அரசின் மீது நம்பிக்கையிழந்து சட்டத்தை தன் கையில் எடுக்கு முனைவான்.இதன் விபரீதம் பாரதூரமானது. எனவே, இங்கும் பாதிக்கப்பட்ட தாய் குற்றவாளியை மன்னிக்கவில்லை என்பதை குற்றமாக சித்தரிப்பது இஸ்லாத்தையே குற்றம் பிடிப்பதற்கு சமம்.ஏனெனில் இஸ்லாம் தான் இந்த குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கியுள்ளது.
    றிஸானாவின் விடயத்தில் சுட்டு விரல் நீட்டப்பட வேண்டிய 6 சாரார் உள்ளனர்.
    1-மஹ்ரமியின்றி பயணத்தை மேற்கொண்ட றிஸானா.
    2-பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பெற்றோர்.
    3-வறுமை கோட்டுக்குக் கீழ் அவதிப்படும் ஏழைகள் குறித்து சிந்திக்காத முஸ்லிம் சமூகம்.
    4-பணத்திற்காக மார்க்கத்துக்கு முரணாய் பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றும் முகவர்கள்.
    5-பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் கரக்க அனுமதித்துள்ள இலங்கை அரசு.
    6-இஸ்லாமிய நாடாய் இருந்து கொண்டே மஹ்ரமியல்லாத பெண்களை வேலைக்கு அமர்த்தும் சவுதி அரசு.
    எனவே, குற்றத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தப்பு காண்பது எந்த அடிப்படையில் நியாயம்?

    ReplyDelete
  23. சீதன கொடுமையால் அவதிப்படும் குமரிப்பெண்களை காப்பாத்த இதை பார்த்தாவது முன் வாருங்கள் அன்பார்ந்த வழிப சமூகமே..................

    ReplyDelete
  24. Inna Lillahi Wainna Ihaihi Rajioon

    May Allah forgive all the sin of her.

    Dear All who comments regarding this matter

    Keep in mind that this punishment was given based on
    sharia law that is law of allah, we don't know who made
    mistake here,
    so don't criticize arabs and sharia law blindly
    make dua for this sister
    Jazzakalla.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
    அவரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்டவ்சை கொடுப்பாயாக.
    எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்

    ReplyDelete
  26. Ya Allah, forgive our younger sister Rizana's sins, and provide your Paradise "Jannathul Firdous" and provide peace to her family members and relatives.

    A very sad day for all Sri Lankans.

    As a protest, we all should boycott free dates which are given by Saudi Govt. during Ramazan.

    ReplyDelete
  27. (No comment) innah lillahi vainnah ilahi rajioon...

    ReplyDelete
  28. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  29. Dear brothers and sisters
    shariah law made by allah, here judgement also had released based on shariah law
    mistakes may happened but allah only know the fates
    for a muslim,this world is a prison bt for kaafeer this is the paradise
    we dnt want to criticize them paradise
    insa allah we hope allah to give his mahfirath to risana
    same time we cant badua to that baby"s parents because islam gave the rights to that parents to take decision
    if we criticize that parents rights or shariah law its equal to criticizing allah
    asthahfirullah
    may allah forgive all of our sins and give us his mahfirath in mahzar

    ReplyDelete
  30. அல்லாஹ் யாவும் அறிந்தவன்…இதில் யாருக்கு அநீதி இழைக்கப்பட்டதோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் அருளும் யார் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையும் நிச்சயம் கிடைக்கும்… அல்லாஹ் இந்த சகோதரியை பொருந்திக் கொள்வானாக…

    ReplyDelete
  31. Ennathaan irunthaalum islaam avarhal virumbinaal mannikkalaam enra oru vaaypayum valangi ullathu.antha vaaypai arabihal payanpaduththi irunthaal ellorum santhosap pattiruppaarhal.kattaayam marana thandanai mattum thaan valanga vendum enru sollavillai thaane.manniththu viduthalai seithirukkalaame.satta reethiyaahap paarththaal, Rizana baby sitter aaha poahavillai.oru baby sitter enraal enna thahuthihal irukka vendum enru saudi sattam veru vahuththu vaithirukkirathu. athu appadiyirukka,visaariththavarhal kooda ivar baby sitter alla. ivaridam kulanthayai koduththathu ungaludaya thappu enru kooda theerpaliththirukkalaam.appadi santharpam irunthum avarhal athai miss use panni vittaarhal.yaar enna thaan sonnaalum arabihalaip poruththavarai naangal mattum thaan manitharhal enra irumaapu elloridamum irukkaththaan seihirathu. athanaal thaan avarhal nammai ajamihal enru kurippiduhiraarhal. ajamihal enpathan arththam enna enpathai nanraaha arabu ilakkanam padiththavarhalidam keattaal therium. anyway Islaamiya sharia sattaththai naam marukka mudiyaathu. Rizanavin vithi avvalavuthan.Allah avarathu paavangalai mannipaanaaha.arabihalin amma mattum thaan amma. matravarhalin amma summa. ithatkellam oru thervu insha Allah viraivil varum.

    ReplyDelete
  32. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... பலருடைய தவறு ஒருசகோதரியினுடைய உயிரை பறித்திரிக்கிறது. யா அல்லாஹ் இந்த சகோதரியின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிரதௌஸ் எனும் சுவனபதியை வழங்குவாயாக. இறைவா!!! நீயே மிக அறிந்தவன். மிக்க நீதியாளன்.

    ReplyDelete
  33. இன்னாலில்லாஹ்.....
    இங்கு கருத்திட்டவர்கள் அநேகமானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் போன்றுள்ளது,அவர்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் இஸ்லாத்தையும் இஸ்லாமிய சரீஆவையும் குறைகாண வேண்டாம் என்று.அத்துடன் ரிஸானா எனும் யுவதியின் தாய்க்கு எவ்வாறு ரிஸானா பிள்ளையோ அவ்வாறே எல்லா தாய்க்கும் அவரவர் பிள்ளை பெரிதே! யார் குற்றவாளி என்பதை அல்லாஹ் நங்கு அறிந்தவன், இங்கு கருத்திட்டவர்கள் தங்கள் ஒரு பிள்ளையை இன்னொருவருக்கு தத்துக்கொடுக்க விரும்புவார்களா? அதாவது இன்னொரு இடத்தில் வாழ்வதற்கு? எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்?

    ReplyDelete
  34. iwware americargalukkum europpiyargalukkum saudi arabia thandanai valangumayin unmayileye sariya sattam penappaduwadaga ennalam

    ReplyDelete
  35. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    இறைவா உன் மகத்தான கிருபையை கொண்டு இந்த சகோதரியை மன்னிப்பயாக, அந்த குடும்பத்திற்கு ஆறுதலும் உதவியும் புரிவாயாக.

    ஆமீன்.

    அன்பார்ந்த சகோதர்களே............

    சமுகத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும், வசதி படைத்தோருக்கும் உள்ள கடமையை அல்லாஹ் நினைவு படுத்தி இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    இறைவா எமது சமுகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக.

    ReplyDelete
  36. Ennalillahi Wahinna Elahi Rajoon..nangalum entha chayziya katu Alntha kawalayadanthom rizana udaya kudumbathrukku angal Nanpar Allorudaya Aalntha Kawlaya tharivikkuran (Ikram Saudi Arabia)

    ReplyDelete
  37. ஹலோ இன்று நிறைவேற்றப்படடது இஸ்லாமிய சட்டம் அதனைக்கொச்சைப்படுத்தவேண்டாம். கருத்திட்டவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் பொறுப்பளித்து விடுங்கள்.

    ReplyDelete
  38. ஷரி அத் சட்டம் சரியாகத்தான் இருக்கின்ரது, அதை எப்படி பயன்படுத்துகின்ரார்கல் என்பதில் தான் காட்டுமிரான்ட்டிததனம் புலப்படுகின்ரது. அல்லஹ் அவன் துதர் சொன்னதை சரியாக புரிந்து இருந்தால் இந்த தன்டனை நடந்திருக்காத்து கெவலம் அந்த பென்னுக்கு ஒரு லொயெர் குட குடக்கவில்லை....அரபு மொலி தெரியமல் மாட்டிக்கொன்ட அப்பவி பென்

    ReplyDelete
  39. salam brothers...................
    please stop blaming the child's parents and pray for sister rizana.
    சகோதரி ரிசானாவுக்காக பிரார்திப்போம்

    ReplyDelete
  40. சவுதி அரேபியாவில் சரிஹா சட்டத்தை சரியாக நிறைவேற்றுகிறார்கள் என உலகமே நம்பியிருக்கிறார்கள். ஆனால் உண்மையான விடயம் ஒரு குற்றம் நடக்கும்பட்சத்தில் குற்றவாளியையும் விசாரிப்பது கடமை.சவுதியில் குற்றம் புரிந்தவனை விசாரிப்பதில்லை அரபி நாய் சொல்வதுதான் சட்டம்...................அங்கு மன்னருக்கோ,அரசாங்கத்துக்கோ எதுவும் நாம் முரணாகபேசினால் அதற்கு தனி சிறை உண்டு.............ஒரு அரபி களவெடுத்து அவன் வாகன இலக்கத்தை நாம் போலீஸ்இடம் கொடுத்தால் அப்படி ஒரு வாகனமே இல்லை என கூறுவார்கள்.....................ஒரு வீட்டுப்பணிபெண் தனது முதலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினால் அவளை நாட்டுக்கு அனுப்பிவிட்டு கணக்கை முடிப்பார்கள்.................பல மாதம்களாக சம்பளம் கொடுக்கவில்லை என போலீஸ்இல் முறைப்பாடு செய்தால் கண்டுகொள்ளமாட்டார்கள் நாம் ஒரு ரியால் தெரியாமல் எடுத்தால் சிறையில் அடிப்பார்கள்..........................சாதாரணமாக ஒருநாளைக்கு ஆயிரம் ரியால் வியாபாரம் நடக்கும் ஒரு சாதாரண கடைக்கு அரபிகள் திருடவரும்போது பெரிய ஆயுதங்களுடன்தான் வருவான்,திருடியும் போதாமல் தாக்கிவிட்டுத்தான் செல்வான்.....................போலீஸ்,சட்டம் எல்லாமே அவங்களுக்கு சார்பாகத்தான் இருக்கும்...................நானும் ஒரு முஸ்லிம் எனது இனத்தை இழிவுபடுத்த எனக்கும் விருப்பமில்லை ஆனால் எனக்கு உண்மைகளை சொல்லாமல் இருக்கவும் முடியாது.நபி பிறந்த நாடு மக்கா,மதீனா உள்ள நாடு ஆனால் இந்த நாய்களின் அராஜகம் ஒழிய இன்னும் ஒரு சதாம்ஹுசைன் வரவேண்டும்..........................அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்கும் ஒரு நாடு சவுதிஅரேபியா...........சரிஹா சட்டத்தை குறைகூறவில்லை அதை பிழையாக கையாளும் இந்த நாய்கள் எமது இஸ்லாம் மதத்தையும் கேவலபடுதுகிரான்கள்........கல்யாணம் பண்ணினவர்கள் விபச்சாரம் செய்தால் மரணதண்டனை இதை சவுதிஅரேபியா சரியாக கடைபிடித்தால் அரபிகளில் 80% ஆனவர்களை தூக்கில் போடவேண்டும்.......அல்லாஹ் சத்தியமாக நான் பதிந்துள்ள விடயங்கள் என் கண்கூடாக கண்ட விடயங்கள்........allahakbar.

    ReplyDelete
  41. Hஆழே
    சீதனம் போன்ற் விடயஙலுக்காக வெளினாடு செல்லும் பெண்களே அல்லாHவின் கோபத்துக்கு ஆலாக வேண்டாம்
    இந்த செய்தியை வடக்கு கிழ்க்கில் வாழும 90% ஆண்கலுக்குச் சொல்லுங்கள்
    தனது மனைவி பிள்ளைகலுக்காக வீடொன்று கட்டவக்கில்லாததினால மனைவியையும்,
    வருங்கால வக்கில்லாத முதுகெழும்பில்லாத சீதனம் என்ற பிச்சை கொடுக்க ரிசானா {அல்லகும்மக் பிர்லகா வர்கம்கா}பொன்ர குமரிகலை வெலிநாடு போவதால் ஆன்மையில்லாத ஆண்கலுக்குத்தான் அல்லாக்வின் சாபாம் உன்டாகும்.

    ReplyDelete
  42. Innalillahi wainaillaihirajeeyoon
    Salam dear brothers and sisters first we have to think we are muslim so we have to beleive on (kathir)destiny ,this is the time for her.......only we can ask dua for(rizana)But we dont have any rights to curse the parents ,this is the law of shariya we have to agree compleately otherwise we are not muslim .....So dont make any emotional comments,it doesnt make sence,if the kafir sees this kind of comments, they will blame our religon .We have to be proud to be a muslim Alhamdullilah.inshaallah we all ask dua for rizana to get a paradise

    ReplyDelete
  43. இதெல்லாத்துக்கும் சவூதி அரேபியாவில் உள்ளவர்கள் காரணம் இல்லை இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லீம்கள் தான் காரணம்

    ReplyDelete
  44. அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் ,கருணையாளன்
    ரிசானாவுக்கு கிடைத்த தண்டனை மூலம் அவளுக்கு
    உயர்ந்த சொர்க்கத்தை தயார் செய்து வைத்து இருந்திருப்பான்,
    அல்லது கெட்ட வலியில் இருந்து காப்பாற்றி இருப்பான்,
    அல்லது இந்த சமுதாயத்துக்கு ஒரு செய்தியை கொடுத்து
    இருப்பான்.நாங்கள் மறைவானவற்றை அறிய மாட்டோம்.
    ஆகவே நாங்கள் செய்ய வேண்டியது, ஜென்னதுல் பிர்தவுஸ்
    கிடைக்க துவா செய்வது மட்டுமே.

    ReplyDelete
  45. anbuch sahothari risana nabeek un muham nangal kantathu illai iruppinum un nilaikkaha nangal kanneer watikkirom un marumai wal ukkaha kai yenthuhirom! nammai pataiththa iraiwanitam ................ engal iraiwa inthech sahotheriyey manniththu un arulil iwarai inaiththutuwayaha...........aameen aameen aameen aameen ................................................................ by




    jafran

    ReplyDelete
  46. rizanavin entha elappu poli agendukalukkum poliyaka bayathai kooddi passport,NIC duthukoduppabarkalukkum paadamaka amaiya vendum.melum rizanavai poli pass port mudithu anuppiya agendaiyum thookkil eda vendum,ivvarana poli agendukalai arasangam thadai seyya vendum

    ReplyDelete
  47. SAVUTHIL VALUM ARABIYARHAL MANITHARHALA? ILLAY MIRUHA HUUTTAM.
    ORU NALAYKKU ANTHA MIRUHA HUTTAMUM ALIYUM HALAM VARUM.

    ReplyDelete
  48. பெண்களை ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லத் தடை செய்தது போன்று பெண்களை ஆண் துணை இல்லாமல் பணிப்பெண்களாக நாட்டுக்கு எடுக்கவும் தடை போட வேண்டும் அதுவே உண்மையான ஷரீ அத் சட்டம். அந்த ஷரீ அத் சட்டமும் அமுலில் இருந்திருப்பின் ரிசானாவுக்கு கிடைத்தது போன்ற மரண தண்டனைகள் ஒருபோதும் நிகழ்ந்திக்காது.

    ReplyDelete
  49. யாஅல்லாஹ் அந்த அப்பாவி பெண் பிள்ளையை மன்னித்து அவரை உனது உயர்ந்த சுவனத்தில் ஒரு மாளிகையை சன்மானமாக வங்குவாயாக என இரு கரமேந்தி அழுது கண்ணீர் வடிந்து உன்னிடம் மன்றாடுகிறேன் எனது கண்ணியமான ரப்பே எனது எனது பணிவான துஆவை அங்கீகரித்து சவூதி நாட்டு பெண்களுக்கு நல்ல ஈமானையும் மன்னிக்கும் மனத்தையும் ஏழைகள் மீது இரக்கம் காட்டும் கருணை உள்ளத்தையும் வழங்கி அருள்வாயாக. இங்கு இழப்பால் தவிர்க்கும் அப்பிள்ளையின் பௌ்றோருக்கு நல்ல உறுதியான ஈமானையும் உறுதியான பொறுமையையும் அந்த பிள்ளையின் இழப்புக்காக உலகம் முழுவதும் கவலைப்பட்ட உள்ளங்களுக்கு சத்தியத்தின் வாயிலைத்திறந்து அவர்களுக்கு ஹிதாயத் எனும் உனது வழிகாட்டலை தெ ளிவாக்கி அதில் அவர்களை ஸ்திரப்படுத்தி வை்ப்பாயாக. எமது பிரார்ததனைகளை ஏற்றுக் கொள்வாயாக எனது ரப்பே ஆமீன.

    ReplyDelete

Powered by Blogger.