Header Ads



சவூதி அரேபியாவுக்கு எதிராக விசாரணை அவசியம் - எல்லாவல மேதானந்த தேரர்

முஸ்லிம்களின் ஷரீ ஆ சட்டத்தை "படு பயங்கரமான படுகொலைச் சட்டம்' என வர்ணித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, மனித உரிமைகளைப் பற்றி பிதற்றிக்கொள்ளும் அமெரிக்கா, ரிஸானா நபீக்கை படுகொலை செய்த சவூதி அரேபியாவுக்கு எதிராகத்தான் ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, தேசிய கீதம் பெரும்பான்மை இனத்தவர்களின் மொழியிலேயே இசைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அந்தக் கட்சி, வாசுவின் யோசனையை அரசுக்கு எதிரான நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழு நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியது. 

இதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மூவர் அடங்கிய அமெரிக்க "திரிசூல குழு' கொழும்பு நிர்வாகத்துக்கு எதிராக ஜெனிவா தொடரில் மீண்டுமொருமுறை பிரேரணை கொண்டுவரப்படவுள்ள விடயத்தை உறுதிப்படுத்தியது தெரிந்ததே.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரச பங்காளிக்கட்சிகளும், கடும்போக்குடைய சிங்களப் பேரினவாத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க இராஜதந்திரக்குழுவின் மேற்படி கருத்து தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரரிடம்  கருத்து கேட்கப்பட்டது. 

இதன்போது அமெரிக்காவின் அறிவிப்பை வன்மையாகக் கண்டித்த அவர், இலங்கையின் தற்போதைய நிலைவரங்களையும் எடுத்துரைத்தார். இந்த நாட்டில் புலிகள்தான் அசம்பாவிதங்களைப் புரிந்தனர். தமிழ், முஸ்லிம், சிங்களம் எனப் பாகுபாடின்றி அனைவருக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்களை மரணப்படுக்கையில் இருத்தினர்.

யுத்தத்துக்குப் பின்னர் தற்போதைய அரசு நாட்டில் பல துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சிங்களப் பகுதிகளை விட தமிழர் பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது என்றும் மேதானந்த தேரர் கூறினார்.

எனவே, இலங்கையில் இவ்வாறு நல்லெண்ண செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் தறுவாயில், அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது. புலிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்குப் புரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவோ அல்லது இதர நாடுகளோ மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், சவூதிக்குப் பணிக்குச் சென்ற ரிஸானா நபீக் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் கழுத்து வெட்டப்பட்டுள்ளது. 

கழுத்தை வெட்டிக்கொலை செய்யுமாறு எவருமே கூறவில்லை எனவும் தேரர் சுட்டிக்காட்டினார். அத்துடன், முஸ்லிம்களின் சரி ஆ சட்டமானது படுகொலைச்சட்டம் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு மனிதப் படுகொலை புரியும் சவூதிக்கு எதிராகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டுமென்றும், மாறாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அல்லவென்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய கீதச் சர்ச்சை

ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் இனத்தின் மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும். அதுதான் வழமையும் கூட. திருகோணமலையில் நடக்கும் சுதந்திரதின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால், மஹியங்கனையில் நடக்கும் நிகழ்வுகளின்போது வேடுவ மொழியில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

அரசின் நல்லெண்ண செயற்பாடுகளைத் திசைதிருப்பும் யோசனையே இதுவாகும். தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் நாம். ஏனைய விடயங்களிலும் தமிழர்களுக்கு இடமளிக்க வேண்டும். ஆனால், தேசிய கீதம் ஒரு மொழியில்தான் இருக்க வேண்டும்; இசைக்கப்பட வேண்டும்  என்று மேலும் தெரிவித்தார் எல்லாவல மேதானந்த தேரர்.  

3 comments:

  1. உங்கள போன முறை அவனுகள்தானடா காப்பாத்தின.......நன்றி மறந்துட்டிங்கலாடா...........இந்த முறையும் அவனுகள்ட போய்தான் பிச்ச எடுக்கனும்.......

    ReplyDelete
  2. Saudi Arasangathi Visaranai seiya ningal yaru? Ungaduku money. Venum enral poithu kudungal

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    முஸ்லிம்களின் வளர்ச்சி இவர்களுக்கு பொருக்குவதில்லை. மன கலக்கத்துடன் தான் இந்த கருத்துக்களை முன் வைக்கின்றேன். சென்றமுறை ஜெனீவா நேரம் துன்ட கானோம் துனிய கானோம் என்று ஓடி ஒழிந்து விட்டு இப்ப மட்டும் வாய் கிழிய கத்தினா எல்லாம் சரியாயிடுமா? அன்று முஸ்லிம் நாடுகள் உதவி செய்திருக்காவிட்டால் இலங்கையின் கதி? நன்றி மறந்துட்டீர் பிக்கு அவர்களே. நன்றி மறப்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லயே.இவர்களின் மார்கமும் அதைத்தான் போதிக்கிறது என்று நினைக்கிறேன்.அதைத்தான் ஏனைய சிங்கள சகோதரர்களுக்கும் அந்த கேடு கெட்ட வழியை கான்பிக்கிறார்கள். நேர்வழியின் பக்கம் அன்பாய் அழைக்கிறோம். அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் கொடுக்கட்டும். ஷரீஆ சட்டம் பற்றி விமர்சிக்க உனக்கு எந்த அதிகாரமும் கிடயாது பிக்குவே. அதன் சிறப்பு பற்றி உனக்கு என்ன தெரியும்? அல்லாஹ் அருளிய ஷரீஆ சட்டம் பிழை என்று உலகுக்கு சொல்வதற்கே இந்த மத வெறி பிடித்த பிக்குகள் முட்படுகின்றார்கள்.இந்த இடத்தில் முஸ்லிம்கள் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். நமக்குள்லளே தர்கங்கல் கூடாது. இறைவனின் வார்தையில் முழு நம்பிக்கை கொள்வோம், இதில் மாற்று கருத்துக்கு இடம் கிடையவே கிடையாது.அரை குரையாக படித்த முட்டாள்கள் இந்த பிக்குகள். கண்மனி நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரிகளை படித்து திருந்த முட்படுங்கள். சகோதரி ரிஸானாவின் மேல் இவர்களுக்கு அப்படி என்ன ஒரு அக்கரை, ஆடு நனைகிரது என்று ஓநாய் அழுகிறதாம்! முதலில் இஸ்லாமிய மார்கத்தை படித்து விட்டு சொல்லு. அப்போது புரியும் இங்கு தான் நேர்வழி உண்டென்று. முடிந்தால் ஜெனீவா சென்று பார், அப்போது புரியும் உமக்கு எம் முஸ்லிம்களின் இலங்கைக்கான ஆதரவை உம்மை அங்கு அழைக்காதது ஏனோ? பெளத்த தலைவர்களுக்கு கூட உம்மீது நம்பிக்கை இல்லை, இது பெளத்த நாடா? இல்லை. இது பெளத்தர்கள் அதிகம் வாழும் நாடு மாத்திரமே. அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு,எம்முடைய சமுதாயம் உங்கலுக்கு என்னதான்யா கொடும செஞ்சான்க‌? நாம் என்ன இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தயா கேட்டோம்? இல்லயே,சக இனத்தவர்களோடு சம உரிமையுடனும் ஒற்றுமையாகவும் வாழத்தானே ஆசைப்படுகிறோம். முஸ்லிம்கள் பொறுமை காக்கக்கூடியவர்கள் அதற்கும் ஓர் எல்லை உண்டு மீற வைக்காதீர், முஸ்லீம்கலின் பலம் தெறியாமல் குறைக்கிரார்கள்..... பாவம் பிக்குகள் மதம் பிடித்து அழைகிரார்கள். இது இவர்களை இம்மையிலும் மறுமையிலும் எங்கு கொண்டு போய் சேர்க்குமோ? இஸ்லாமிய சகோதாரர்களே ஐவேலை தொழுகையிலும் இரு கரம் ஏந்தி அல்லாஹ்விடம், சதிகாரர்கலுகு எதிராக ப்ரார்தியுகங்கள் நிச்சியம் வெற்றி இறை நேசகர்களுக்கே. எம் முஸ்லிம் சமூகத்தை சதி காரர்களிடம் இருந்து பாது காப்பாயாக. ஆமீன்

    வஸ்ஸலாம்.

    ReplyDelete

Powered by Blogger.