Header Ads



வெள்ளைத் தோலுக்கு மரியாதை..!


சவூதி அரேபியாவில் சகோதரி றிசானாவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை குறித்து தொடர்ந்து வாதப்பிரதி வாதங்கள் நீடித்துள்ளன. இந்நிலையில் பி.பி.சி யில் புதன்கிழமை மாலை ஒலிபரப்பான செய்தியறிக்கையின் சில பகுதிகள்..!

பிரிட்டிஷ் கனடிய பிரஜையான வில்லியம் சாம்சன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சவுதி சிறையில் 964 நாட்கள் கழித்த இவர் தனது பாஸ்போர்ட்தான் தனது தலையை காப்பாற்றியது என்று கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளார். அதே போல ஒரினச் சேர்க்கை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொருவரும் பிறகு பத்திரமாக பிரிட்டனுக்குத் திரும்பினார்.

சவுதியில் வேலைபுரியும் ஆசிய மற்றும கருப்பின மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழான வேலைகளை செய்வதாலும், அவர்கள் வரும் நாடுகளால் ராஜ தந்திர ரீதீயாக அழுத்தங்களை செலுத்த முடியாமல் இருப்பதுமே இதற்கு காரண்ம் என்று கூறும் அம்னஸ்டி நிறுவனத்தின் சவுதி ஆய்வாளர் டினா இல் மாமோன் கடுமையான தண்டனைகள் சவுதியில் குற்றங்களை குறைத்து விடவில்லை என்கிறார்.

இதேவேளை ஷரிஆ சட்டத்தில் தவறேதும் இல்லை. அது குறித்த வெளியுலகப் புரிதலில்தான் தவறு என்று ஹாலி மாகாணத்தின் ஆளுனராக இருக்கும் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சவுத் பின் அப்துல் மோஷின் தெரிவித்தார். 

2 comments:

  1. பேசி வேலில்லை . பேசினால் ஷரீஅஹ் சட்டத்துக்கு மாற்றம் பேசுவதாகக் கூறுகிறார்கள்....! மௌனம் சிறந்தது...!

    ReplyDelete
  2. Mahdhi Hasan,

    இப்படிப் பேசாமலே இருந்து இருந்துதான் இன்று நம்மவர்கள் இப்படி இருக்கின்றார்கள்.

    உலகமே பரிகசிக்கும் வகையிலான காட்டுமிராண்டிச்சட்டங்களை வானாளாவப் புகழ்ந்து கொண்டும் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை பாதுகாப்பு என்று மற்றவர்களை நம்பவைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

    இறைவனின் சட்டம் என்று சிலாகிக்கப்படும் சட்டத்திற்கு வெள்ளைத்தோல் என்ற பேதம் எப்படி இருக்க முடியும்? இறைவன் என்றாலே எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகத்தானே இருந்தாக வேண்டும். தானின்றி அணுவும் அசையாது என்று திட்டமிட்டு தானே உருவாக்கிய மனிதர்களுக்கிடையிலே அவனே உருவாக்கிய சட்டங்கள் எப்படி பாராபட்சமாய் இயங்கப்போயிற்று?

    இதையெல்லாம் கேட்டால் மேற்கத்திய சதி என்று முத்திரையடித்துவிட்டு கடந்த சென்றுவிடுவார்களே தவிர உட்கார்ந்து சிந்திக்க மாட்டார்கள் நம்மவர்கள்.

    காரில் செல்லும் ஒரு முஸ்லீம் நடுவழியிலே கார் நின்றுவிட்டால்,'இது அமெரிக்கச் சதி!' என்று கூப்பாடு போட்டுவிட்டுத்தான் பெற்றோல் இருக்கிறதா என்று தாங்கியைக் கழற்றிப் பார்ப்பானாம் என்று சும்மாவா சொல்கின்றார்கள்?

    பழைய துருப்பிடித்த மூளைச்சலவைசெய்யப்பட்ட சித்தாத்தங்களையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு சொந்தமாகச் சிந்தித்து செயல்படுவதுதான் எதிர்காலத்திற்கு உதவும். இல்லையென்றால் வெகுசீக்கிரத்தில் நாம் அனைவரும் வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள்ளிருப்போம்.!

    ReplyDelete

Powered by Blogger.