Header Ads



றிசானா விவகாரம் அரசியலாகிறது - அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை


வெளிநாட்டு வேலைவாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்  டிலான் பெரேராவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி நேற்று நாடாளுமன்றில் அறிவித்தது.

மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக் தொடர்பான ஒத்தி வைப்பு விவாதத்தில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்  டிலான் பெரேரா கருத்து தெரிவிக்கையில், ரிசான விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரண கொண்டுவரப்படுமானால் அதனை எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார். Sfm

No comments

Powered by Blogger.