Header Ads



இலங்கையிலிருந்து சவூதி அரேபியா செல்ல புதிய கட்டுப்பாடுகள்

(தினகரன்)வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணிப் பெண்களை அனுப்புவது தொடர்பில் விசேட தேசிய கொள்கையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற போது இது தொடர்பில் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல,

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்பப்படும் பணிப்பெண்களின் வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்படும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25 ஆகவும் ஏனைய ஏழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பப்படும் பணிப்பெண்களின் வயதெல்லை 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிக்கால எல்லை 21 தினங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சிங்கப்பூர், ஹொங்- கொங், மலேசியா, சைப்பிரஸ் உட்பட ஏனைய நாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லை 21 ஆகவும் பயிற்சிக்காலம் 30 தினங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரீஆ சட்டம் போன்ற வெளிநாட்டு சட்டங்கள் ரிஸானா விவகாரம் போன்றவ ற்றைக் கருத்திற் கொண்டு இது தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த கொள்கை தொடர்பில் தீர்மானி க்கப்பட்டது. பெண்களை வெளிநாடுகளுக்கு தொழிலு க்காக அனுப்புவது சம்பந்தமாகப் பல் வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இத னால் அவ்வப்போது அது தொடர்பான சட்டங்களில் மாற்றம் செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.