Header Ads



சகோதரி றிசானாவின் மரண தண்டனை குறித்து ஜம்மியத்துல் உலமாசபையின் அறிக்கை



கடந்த புதன்கிழமை (09.01.2013) இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக்கின் மரண தண்டனை ஸவூதி அரேபியாவின் நடைமுறை ஷரீஆ சட்டத்திற்கமைய நிறைவேற்றப்பட்டது. ரிஸானாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்ற போதிலும் அவையெதுவும் பயனளிக்காத நிலையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட அரச மற்றும் சிவில் அமைப்புக்களும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இவ்விடத்தில் மேற்கொண்டது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் பல்வேறு சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் இது விடயமாக மூதூர் மக்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை நாம் பாராட்டுகின்றோம். அப்பெண்ணுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும், அவரது குடும்பத்தின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு முடியுமான உதவிகளை செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறது. 

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

14 comments:

  1. Why should I cry in the Court, because I did not make any crime.

    நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஏனெனில் நான் ஏன், நீதிமன்றத்தில் அழ வேண்டும்.

    (Late Rizana Nafeek

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    இந்த அறிக்கையை கொஞ்சம் முற்படுத்தி
    மாற்று சகோதரர்களின் வாயை மூட வைத்திருக்கலாம்,
    மற்றவர்கள் அரசியல் செய்வதையும் முன்கூட்டியே தடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  3. You have released this statement after six days. ACJU thinking that, they are so intelligent people. We know you very well.

    Now you are appriciating Mutur people for their decision. That is your idea. Why you are acting now like someone does not know anything about this.

    You are saying, Rizana's execution is as per Sharia law. Till now you don't understand, what the whole world is talking about. Dear ACJU, don't act and try to foolish all as usual. Everybody knows, Saudi has misused the Shair law. But in your statement, you are saying this happened as per Sharia law. Don't try to be smart.

    You afraid to qusetion Saudi. When you visit Saudi, they will arrest you. That is your fear. This is the reason you asked MCSL, to release a statement.

    ReplyDelete
  4. ரிஸானா ரபீக்கின் மரண தண்டனை பற்றிய உலமா சபையின் அறிக்கை திருப்திகரமானதாக இல்லை. இம்மரண தண்டனை இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை என்ற கருத்தை பரந்த அளவில் ஏற்படுத்தியுள்ளதோடு இத்தண்டனை ஷரியா சட்டமேயாகும் என்ற பதிவையும் ஏற்படுத்தியுள்ளது. அனேக சமகால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துப்படி சவுதி அரசாங்கம் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை பிழையான விதத்தில் நடைமுறைப் படுத்துகின்றது.

    குற்றம் சுமத்தப்பட்ட ரிஸானாவிடமிருந்து சரியான உரைபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் கருத்துப் பெறாமலும் பொலிசாரினால் அடித்து வதைத்துப் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அப்பெண் உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தாலும் கொலைக்குற்றம் பல வகையானது. கைமோசக் கொலை, தற்பாதுகாப்புக் கொலை, திட்டமிட்ட கொலை, சிறு வயதுப் பிள்ளையின் கொலை எனப் பல விதமான குற்றங்கள் பற்றி இஸ்லாமிய சட்டங்கள் பேசுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே தண்டனையல்ல.

    இத்தகைய அம்சங்கள் எதுவும் கவனத்தில் எடுக்கப் படாது மேற்கொள்ளப் பட்ட ஒரு தண்டனையே ரிஸானாவின் மரண தண்டனையாகும். எனவே இத்தண்டனை இஸ்லாமிய குற்றவியல் சார்ந்தவை அல்ல என உலமா சபை விளக்கத் தவறி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. I agree brother, these people think that we are stupid to agree what they are saying shariya law. I say you guys misuse shariya law. Forgiveness if she is guilty but they proved that she is guilty with doubtful... Is that shariya law???

      Delete
  5. ஜமிய்யதுள் உலமா இந்த கருத்தினை ரொம்பவும் லேட்டா சொல்லிருக்கிறார்கள்.எல்லா விடயத்திலும் அவர்கள் லேட்ட்தான்.

    ReplyDelete
  6. bro please dont blame to ACJ i'm also in your position about rizana ACJ is late at least they should send a good translator to the court
    but dont forget ACJU has don lots of thing for lankan muslims dont forget that .rizana was in jail last 7years you and i as a mulim what did for rizana wen she was beheaded we all suddenly wake up and blaming each others that's not correct we also responsible so make dua

    ReplyDelete
  7. இந்த தீர்ப்பு ஷரீஅ முறைப்படி எனில் ,எனது உறவினர் ஒருவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து இருந்த வேளை அவர் மரணமடைந்து விட்டார்.. ஆகவே அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் , தாதி ஆகியோரை தூக்கிலிட தீர்ப்பு கொடுப்பீர்களா ??? ஒழுங்கான முறைப்படி வாக்கு மூலம் கூட பெறாமல் அவர்கள் செய்த அநியாயத்தை, நியாயமாகக் கருதும் நீங்களும் அவர்களும் சமம்..

    ReplyDelete
  8. 1- சனல் 4 விவகாரத்தின் போது இலங்கையை காப்பாற்றுவதற்கு அமெரிக்க வரை சென்று போராடிய இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏன் ஒரு அப்பாவியை காப்பாற்றுவதற்கு சவூதி அரேபியா சென்று போராட முடியாது?

    2- உலகம் முழுவதும் ரிசானவுக்காக அழுது புலம்பி கொண்டிருக்கும் போது ஆகக்குறைந்தது ஜனாசா தொழுகையாவது நடாத்துங்கள் என்று சொல்லி இருக்கலாம் அல்லவா?

    ஆக இவர்களால் ஜனாஸா தொழுகை நடாத்துங்கள் என்று சொல்வதற்கு கூட மனமில்லாத போது எப்படி ஒரு அராபிய பெண்மணியின் கல்மனசு எமக்காக கனிந்து வரும்?

    இப்போது எல்லாமே முடிந்து போன தறுவாயில் ஷரிஆ ஐ குறை கூறாதீர்கள் மார்க்க தீர்ப்பை அவமதிக்காதீர்கள் என்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்

    ReplyDelete
  9. 1- சனல் 4 விவகாரத்தின் போது இலங்கையை காப்பாற்றுவதற்கு அமெரிக்க வரை சென்று போராடிய இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏன் ஒரு அப்பாவியை காப்பாற்றுவதற்கு சவூதி அரேபியா சென்று போராட முடியாது?

    2- உலகம் முழுவதும் ரிசானவுக்காக அழுது புலம்பி கொண்டிருக்கும் போது ஆகக்குறைந்தது ஜனாசா தொழுகையாவது நடாத்துங்கள் என்று சொல்லி இருக்கலாம் அல்லவா?

    ஆக இவர்களால் ஜனாஸா தொழுகை நடாத்துங்கள் என்று சொல்வதற்கு கூட மனமில்லாத போது எப்படி ஒரு அராபிய பெண்மணியின் கல்மனசு எமக்காக கனிந்து வரும்?

    இப்போது எல்லாமே முடிந்து போன தறுவாயில் ஷரிஆ ஐ குறை கூறாதீர்கள் மார்க்க தீர்ப்பை அவமதிக்காதீர்கள் என்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்

    ReplyDelete
  10. ACJU people are trying to satisfy the saudi government as they get benefit from there in the name of NGOs. Dont try to save barbaric saudi kings and their cronies. Sharia Law is very pure and allows natural justice and due process in every cases. According to Rizana's execution it does not respect due process and natural justice. So please dont try to satify the saudi rule for your own political advantage and benefits. Please try to protect Islam and sharia law from the hands of saudi kings and SAUD clan.

    ReplyDelete
  11. Brother Mubarak.
    What kind of sharia low this.
    Why they are didn't taken good translator to the court proper ingury
    In the sharia is allow to work none "maharam " woman. In saudi home

    ReplyDelete
  12. கருத்திட்ட கயவர்களுக்கு மாத்திரம் சொல்லிக்கொள்கிறேன்,அ.இ.ஜ.உ.கூறினால் பெண்கள் தனியே வெளிநாடு போகமாட்டார்களா? நீங்கள் சீதனமின்றி திருமணம் முடிப்பீர்களா?உங்கள் நண்பர்களை சீதனமின்றி திருமணம் முடிக்குமாறு அட்லீஸ் சொல்லியுள்ளீர்களா?சொல்வீர்களா?சகாத்தை சரியான முறைப்படி கொடுக்க,கொடுப்பதற்கு ஏதாவது ஒரு சிறு முயற்சியாவது செய்தீர்களா?ஆக இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியத்துக்கும் தூர இருந்து கொண்டு இஸ்லாமிய சட்டத்தை விளங்கப்பார்க்காதீர்கள்.உள்ளே வந்து பாருங்கள் உண்ணதமான வாழ்க்கை உண்டு என்பதை அறிந்து கொள்வீர்கள்.

    ReplyDelete
  13. இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் வரியெனில் அது ஸகாத் மட்டுமே இங்கே வருமான வரி தொடக்க்கம் எத்தனையோ வரிகள் செழுத்தபடும் பொருளாதார அமைப்பு காணபடுகின்றமையாள் ஸகாத் வஸூலிக்கும் முறைமை மீள் பரிசீலிக்கபட வேண்டியது அவர்கள் செழுத்திய வரிகள் கழிய மீதமான தொகையே உண்மையான ஸகாது கொகையின் பகுதியானதாக பெறபட முடியும் மேலும் பெண்கள் வெளியில் பயணிப்பதோ ஆண்கள் சீதனம் வாங்குவதோ இஸ்லாமிய அறியாமையினதும் ஈமானிய பழயீனத்தினதும் குறைபாடாகும் இதனை தடுக்க பாரிய முயட்சி அவசியம் வெறும் பயாண்களால் மட்டும் முடியாது

    ஸரியா சட்டம் புனிதமானது ஆனால் நடந்த கொலைபற்றிய எதுவுமே அறிந்திராத ஜம்மியதுல் உலமா ஒரு தரப்பின் வாதங்களை மட்டும் ஏற்றுகொண்டு அந்த பெண்ணுக்கு வழங்க பட்ட தண்டனையை நியாயபடுத்தி அந்த பெண்ணை கொலைகாரியாக்கி இருக்கும் தீர்புக்கு வக்காலத்து வாங்கி பகிறங்க சாட்சி பகர்ந்திருப்பது கண்டனதுக்குறியது இது ஒட்டு மொத்த ஜம்மியதுல் உலமாவும் இதுகுறித்த விளக்கத்தை அல்லாஹ்விடம் ஒப்புவிக்க வேண்டிய கடட்பாட்டை ஏட்படுஹ்தி உள்ளது

    1990 காலதிட்கு முன்னர் ஆண்களும் பெண்களும் வீட்டு பணிபெண்களாக லேபர்,ரைவர்களாக வெளிநாடுகள் சென்று கிடைத்த மாதாந்த சம்பளமான 500,800 ரியால்கள் திர்கங்கள் மூலம் இரண்டு மூன்று வருடங்களில் வீடுகளை தமது தேவைகளை பூர்த்தி செய்தது சாத்தியமாக இருந்தது ஆனால் இன்று அப்படி போவோரால் 10 வருடங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் வீடு கட்டி முடிக்க முடியாது ஆகவே சீதனபிறச்சினயால் மட்டுமே பெண்கள் வெளிநாடு செல்வதில்லை

    அவர்களுக்கு வெளிநாட்டில் மாதம் சம்பாதிக்க கூடிய 500 தொடக்கம் 800 ரியால் நம் நாட்டு மதிப்பு படி 20,000 தொடக்கம் 30,000 வரையான ரூபாவை சம்பாதிக கூடிய தொழில் வாய்ப்புகள் நம் நாட்டிலும் எவ்வளவோ இருக்கின்றன ஒரு நாட்டாமை தினமும் 2,000 மேல் சம்பாதிக்கின்றான் ஒரு மேசன் 3,500 ரூபா தினமும் சம்பாதிக்கின்றான் இப்படியாக வெளிநாடுகளைவிட கூலி வேலைகளில் நம்நாட்டில் அங்கே கிடைபதைவிட பல் மடங்கு சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளபடியால் பெண்களுகென்று தொழில் வாய்புகள் திறந்துவிட படவேண்டும் அதிலும்

    வறுமையில் வாடும் முஸ்லிம் பெண்களும் யுவதிகளும் கன்னியமான முறையில் தொழில் செய்ய கூடிய தொழில் வாய்ப்புகளை ஒவ்வொறு மஹல்லாவிலும் ஊரிலும் முழு நாட்டிலும் இருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் புதிய முயட்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் உருவாக்கி கொடுக்க வேண்டும் நம் நாட்டை சூழ கடல் வளம் இருப்பதால் அது சார்ந்த தொழில் துறைகள் ஏராளம் இருக்கின்றன மேலும் ஏற்றுமதியை நோக்காக கொண்ட நவீன விவசாயம் பொதி செய்தல்,பால் பதார்தங்களால் செய்யபடும் உட்பத்திகள் என முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பெண்களுக்கு என உருவாக்கி கொடுக்க கூடிய தொழில் வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன அப்படியான தொழில் வாய்ப்புகளை ஏட்படுத்தி கொடுத்தால் அங்கே சம்பாதிக்க புறபடும் பெண்களை கட்டுபடுத்த நியாயமான வழி சாத்தியமாக இருக்கும்

    ஊரில் உள்ள தன வந்தர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழில் சாளைகளை ஆரம்பிப்பதும் மிகவும் வரவேட்க தகக்தே ஆகவே ஊருக்கு ஒரு தொழில் சாளைகளை அமைத்து பெண்களும் தொழில் செய்து சம்பாதிக்க கூடிய வழியை ஏட்படுத்துவது ஒவ்வொறு ஊரிலும் உள்ள முஸ்லிமான ஆண் பெண்கள் அணைவருக்கும் உள்ள பர்ழு கிபாயாவான கடமையாகும் என்பதை எல்லூறும் கவனத்தில் கொள்வது நல்லது

    ReplyDelete

Powered by Blogger.