Header Ads



றிசானாவை காப்பாற்ற அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டோம் - அமைச்சர் டிலான்

(அஸ்ரப் ஏ.சமத்)

சவுதியில் மரண தண்டனை விதித்து மரணமான றிசானா றபீக்கின் குடும்பத்துக்கு முதூரில் வீடொண்றை நிர்மாணித்துக் கொடுக்கும் படி வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவு இட்டுள்ளதாக   வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்தார்.

அமைசச்ர்  கொழும்பு தெவட்டஹா பள்ளிவாசலில் றிசானா றபீக்குக்கு  துஆப் பிரார்த்தனையும் மற்றும் றிசானா  சார்பாக கொழும்பில் வாழும் 500 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வினை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் ஹசன் மௌலான துஆப் பிராத்தனை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் கிழக்கு முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் நகீப் மௌலானாவும் ஐனாதிபதியின் பௌத்த மத ஆலேசகர் தேரர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்தாவது,

றிசானாவின் மரணத்திற்கு பிறகு இனி வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களது வயது எல்லை 25க்கு மேற்பட்டிருக்கவேண்டும் இதற்காக எனது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

றிசானாவின் சகோதரி ஒருவருக்கு திருகோணமலையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழில் ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நஸ்ட ஈடாக 10 இலட்சம் ருபாவை றிசானாவின் பெற்றோறிடம் வழங்குவதற்கு எனது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

றிசானாவை விடுவிக்க நானும் எனது அமைச்சின் செயலாளர் வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர்  ஆளுனர் அலவி மௌலானா மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஹூசைன் பைலா வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம். அண்சார் மற்றும் முதூர் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் றிசானாவின் பெற்றோர்கள் என பலர் சவுதி சென்றிருந்தோம். றிசானாவின் எஜாமாணி எங்களை யாரையும் சந்திக்கவோ பேசவோ முடியாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 2 முறை சவுதி சென்று வாய் முலமும் எழுத்து முலம் அந்த நாட்டு மண்ணர்க்கு வேண்டுகோல் விடுத்திருந்தார். மண்ணர்கூட ஷரிஆ சட்டத்தில் தலையிட முடியாது.அவர் கூட றிசானாவின் எஜாமாணியிடம் மண்ணிப்பு வழங்கும் படியும் அதற்காக இழப்பு நிதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.   என அமைசச்ர் தெரிவித்தார்.

எதிர்வரும் 18ம் திகதி றிசானாவீன் முதூர் இல்லத்திற்குச் சென்று இதுபோன்ற ஒரு நிகழ்வை நடாத்தஉள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

4 comments:

  1. எதிர் வரும் 18ம் திகதியின் (18-01-2013)முழு நிகழ்வுகளை இங்கு(ஜப்னாமுஸ்லிம் தளத்தில்)எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. Dilan, we know you didnt do enough to get this innocent girl out so at least please stop telling lies and distorted facts. We know Mahinda never visited Saudi Arabia in person. All we came to know was that he sent 2 written letters which we thing wouldnt have gone pass the Saudi embassy in Colombo. People who know about Saudi embassy would even tell you its like a den of gangsters & thugs (corrupted Saudi officials). They do housemaid business from embassy premises. So why dont you stop this illegal money making happening inside embassy.
    Why dont you get ALFEA (Association of Licensed Foreign Employment Agencies ) who are the biggest culprits to get some welfare for this girls family and others in similar situations.
    All you are doing is a pure publicity stunt to hoodwink the masses.

    ReplyDelete
  3. உங்கள் முயற்சிக்கு நன்றி .

    ReplyDelete

Powered by Blogger.