Header Ads



பௌத்தசிங்கள இனவாதிகளுடன் பந்தயம் ஓடலாமா..?



(மூத்த ஊடகவியலாளர் ஜே.எம்.ஹாபீஸ்)

பொதுபலசேனா இயக்கம் பற்றி இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இருப்பினும் அதன் செயலாளர் நெத் எப்.எம் இற்கு வழங்கிய செய்தியையும் இன்னும் அது தொடர்பாக பொதுபலசேனா வழங்கி வரும் தகவல்களையும் பார்க்கும் போது இவை எதுபற்றியும் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என எண்ணத் தோன்றுகிறது.

இன்று நாடு படும்பாட்டைப் பார்க்கும் போது இது என்ன புதுக்கதை என சிலர் யோசிக்க இடமுண்டு. இதனை ஒரு சிறிய உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

'நாளை ஒரு பூதம் வரும். அந்தப் பூதம் எம்மை தாக்க ஆயத்தமாகிறது. எனவே நாம் ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருப்போம். அந்த பூதம் வரும் வழியில் டயர் போட்டு எரிப்போம். பின்னர் மரங்களை வெட்டி பாதையை மறைத்து அந்த பூதத்தை கொன்றொழிப்போம்' என்று ஒரு அமைப்பு முழங்கினால் அது பற்றி நாம் ஏதும் கவலைப் படுவோமா? இல்லையே...!

ஏனென்றால் இது ஒரு கற்பனை கதையல்லவா? இதுபோலத்தான் இந்த பொது பலசேனா சொல்லும் கதைகளும் அமைந்துள்ளன. உதாரணமாக வஹ்ஹாபிகளும் ஸலபிகளும்தான் எமக்கு அச்சுறுத்தல். சம்பிரதாய முஸ்லிம்கள் பற்றி நாம் குற்றம் சுமத்தவில்லை. வஹ்ஹாபிகளும் ஸலபிகளும் ஹலால் சான்றிதழ் மூலம் பணம் திரட்டி ஜிஹாத் செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனைக் கதை கூறுகிறார்கள். இதைப்போய் அப்படி இல்லையப்பா என்று நாம் கூறினால் அவர்கள் ஏற்கப் பொவதில்லை.

ஏனென்றால் வேண்டாத சம்சாரத்தின் கால்பட்டாலும் தவறு. கைபட்டாலும் தவறு. எனவே நாம் கைகால்களைப் மோதாது பார்த்துக் கொண்டால் போதும். சிறிது காலத்தில் மேலேசொன்ன பூதத்தின் கதைபோல் ஒன்றும் நடக்காது முடிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.

பறகஹதெனியாவில் நமது முஸ்லிம் சகோதரர்கள் சிலர் நடந்துகொண்டது வீரர்கள் போல் யாரவது சாதனை செய்ய முட்பட்டால் மட்டுமே பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. பௌத்த கடும் போக்களர்கள் கூறும் அனைத்து கற்பனை கதைகளையும் நியாயப்படுத்த எம்முடன் மோதுகின்றனர். வழிய வழிய மோதும் போது ஒழித்து வைத்துள்ள ஆயுதங்கள் வெளியே வரும் என்ற தப்புக்கணக்கு காரணமாக இவ்வாறு அவர்கள்  நடந்து கொள்வதாக நாம் கற்பனை செய்ய முடியும். 

அப்படி அவர்கள் நினைக்கும் விதத்தில் அவற்றை வெளியே எடுக்க எம்மிடம் ஒன்றும் இல்லையே. எனவே விசர் கதைகளுக்காக நாம் வருந்தத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயம் அவர்கள் வழிய வழிய பிரச்சினையை இழுப்பார்கள். இழுத்துமுள்ளார்கள். புத்திசாலித்தனமாக  அதனை சமாளித்து வெற்றி கண்டுள்ளோம். 

குருநாகலையில் இருந்து வேவுட வரை ஓட்டப் பந்தயம் நடத்தும் முட்டாள் செய்கைகளை செய்யாதிருப்பின் ஒன்றும் நடக்காது என்பது எனது ஊகம். அல்லாஹ் எம்அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

இங்கு ஒரு சிறிய சம்பவத்தை நாம் உதாரணமாகக் கொள்வது நல்லது. கண்டிப் பகுதியில் வயது முதிர்ந்த ஒரு சிறுபான்மைச் சகோதரர் இருந்தார். அவர் எதையும் துணிந்து பேசுபவர். நாட்டில் புலிப் பயங்கரவாதம் நடைபெற்றசமயங்களில் தனிமனிதனான அவரைச் சூழ்ந்து கொண்டு பல சிங்கள சகோதரர்கள் 'கொட்டியா, கொட்டியா' என்று பரிகசிப்பார்கள். வாய்திறக்க முடியாதவாறு துவேச ரீதியில் ஏசுவார்கள். அவரோ மிகப் புத்தி சாதுர்யமாக சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு அதனை சமாளிப்பார். புதிலாக அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவார். ஈற்றில் இன்று என்ன நடந்தது தெரியுமா? அவரைப் பரிகசித்தவர்கள் அதனை அவதானித்தவர்கள், உயர் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள் அனைவருமே இன்று அவரை அனுதாபத்துடன் அனுகி அவர் நலனைக் கவனிக்கின்றனர். வயது முதிர்ந்த அவர் இன்று அனைவரதும் செல்லப் பிள்ளையாக உள்ளார்.

இங்கு அதை ஏன் கூறுகிறேன் தெரியுமா? அவர்தனது புத்தி சாதுர்யத்தால் சிரித்துச் சமாளித்து அன்பைப் பெற்று நிலைமையை தனி மனிதனாக வெற்றிகொண்டுள்ளார். இது போல் இஸ்லாம் காட்டிய நற்பண்புகளை நாம் வெளிப்படுத்தவேண்டுமே ஒழிய குருநாகல் வீதியில் அந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் போல் ஓட்டப் பந்தயம் நடத்தக் கூடாது.

அண்மையில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் வழியப் பிரச்சினையை இழுத்த ஒரு பெரும்பான்மை இனத்தவர் தவறு அவர்பக்கம் இருக்கும் போதும் கூட, முழு முஸ்லிம் சமுகத்திற்கும் வாயில் வந்தபடி ஏசினார். அங்கு வேடிக்கை பார்த்த மக்கள் கனவானே நீங்கள் கூறுவது சரி. அவன் அப்படித்தான். இந்த தம்பியாக்கள் அப்படித்தான். இதை தெரிந்து கொண்டு ஏன் இங்கு பொருகள் வாங்கினீர்கள். நாமும் இந்ததத் தம்பி இடம் பொருட்கள் வாங்குவதில்லை. அவர் சின்னத்தம்பியல்லவா? ஒன்றும் தெரியாதவர்.

இதன்பிறகு நீங்கள் அவனிடம் எதுவும் வாங்க வேண்டாம் என்று நகைச்சுவை ததும்பப் பேசினர் நிலைமையை விளங்கிக் கொண்ட அவர் மரியாதையுடன் இடத்தைக் காலிபண்ணினார். இதுபோல் சமயோசிதம் தேவை. இறைவனை நம்புங்கள் எம்மில் தவறு ஏற்படாத வரை அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பான். அவர்களுக்கு தற்காலிக வெற்றியைக் கொடுப்போம். அது எதிர்காலத்தில் உதேபியா உடன்படிக்கை போல் அல்லது மக்கா வெற்றிபோல் எமக்கு இறுதி வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். இதில் இஸ்லாமிய பண்பாட்டை வெளிப்படுத்துவோம்.

9 comments:

  1. Well said brother, may Allah give good understand to everybody "Ameen"

    ReplyDelete
  2. NEENDA KAALAM THIDDAMIDDA THOUHEETH SINTHANAI ULLAVARKALAI KARUTTHU REETHIYAAGA VETRI KOLLA MUDIYAATHAVARKALUM ITHIL PINNANI IL ULLATHU P P SENAVIN ARIKKAI MOOLAM DELIVAAGIRATHU. ATHU THAAN PAARLIMANRIL VAAYAI MOODI IRUKKINRANAR INTHA ISLAATTHIN VIRATHIKALAI ALLAAH PAARTTHUK KOLVAAN. NICHCHAYAM SATTHIYAM VENTRE THEERUM.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ்.. உண்மை நிச்சயமாக ஒரு நாள் வெல்லும்.. அது வரை பொறுமையாக காத்திருப்போம்.. ஒவ்வொரு முஸ்லிமிடமும் இன்று இருக்கின்ற ஒரே ஆயுதம் நபிகள் நாயகம் காட்டிய "அஹ்லாக்" எனும் நற்குணமும் "துஆ"வும் மாத்திரம் தான்.. பொறுமையுடன் இவ்விரண்டையும் கையாண்டால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  4. Massallah very nice advice, every one need to read and folow this.

    ReplyDelete
  5. unkalathu karuthai evvaru eatruk kolvathu....
    perinavaathihal ethu seithalum porumayaha irupom entru koorukinreerkale... avarhalal thunpuruthap padda, paduhinra, padappohinra makkaluku niyayam kidaipathu eppadi... utharanama unkalathu veedai sutri valaithu ithu enkalathu punitha poomi entru koorinal vidduk koduthu viduverhala???? enkalayum ethuvum seiya vendam entru kooruveerhala????
    theerkamana mudivuhalai eduka vendiya kaalhaddathil ivvarana karuthukalai alankara vaarthihalai iddu emathu samuthayathai innum somperihalahavum kolaihalahavum maatrathirhal.......
    perina vaathihale itho enkal munnorin karuthu...........
    " UNKALIL MATHUVAI VIRUMPUM KOODAM POL ENKALIL MARANATHI VIRUMPUM KOODAM ULLATHU."

    ReplyDelete
  6. SLTJ பொறுப்பற்ற விதத்தில் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்கள் வெளியிடவதனை தவிர்க்க வேன்டும். இவ்வாறான நிலமைக்கு உங்களின் பொறுப்பற்ற சபைப் பேச்சுக்களும் காரனமாகும். தமிழ் நாட்டுப் பாணி இந்நாட்டுக்கு ஒத்துவராது. எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கைக் கைவிடுங்கள்.

    ReplyDelete
  7. br afrath rasool,
    don't say any name of islamic movements in your comments.
    SLTJ meethu paliyai poadatheerhal.

    ReplyDelete
  8. இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.