Header Ads



மௌலீதும், மீலாதும்..!

(மு.ஆ. ஜவாஹிர் ஜமாலி)

இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் வீடுகளையும், பள்ளிவாயில்களையும், வீதிகளையும் சுத்தப்படுத்துவதையும். மின் குமிழ்கள் மூலம் அலங்கரித்தும் வீதிகளில் பச்சை நிரக் கொடியையும் ஏற்றி கந்தூரி வைபவம் என்றும் திக்ர் மஜ்லிஸ் என்றும் மீலாத்விழா கொண்டாடியும், மவ்லித் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி செய்துவருகின்றனர்.

இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மீலாது விழா கொண்டாடுவதையும், மவ்லிதுகளைப் பாடுவதையும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மீலாதுகளுக்கும் மவ்லிதுகளுக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம். அனைத்து மவ்லீதுகளுமே பொய்யும் புரட்டும் நிரைந்ததாகவும் இஸ்லாத்தின் அடிப்படையை (அகீதாவை) தகர்க்கக் கூடியதாகவும் உள்ளன.

அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓதப்படும் ஸுப்ஹான மவ்லீது. இது எவ்வாறு அபத்தக்களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும்  நபி மொழிக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் அரிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி? வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாகாது.

நம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்துச் செயள்கலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்டையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இதனை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாரு கூருகின்றான். நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்.! அப்போதுதான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக.!                                                                       அல் குர்ஆன் - 03: 31

மவ்லீதுகள் என்பது நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பாராட்டுவதற்காகத்தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை புகழ்ந்து கவி பாடியதை நபி (ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளார்கள்.                            உண்மையான எந்த முஸ்லிமும் நபி (ஸல்) அவர்களின் நேர்மை, தியாகம், உயர்வு, இவற்றையெல்லாம் உலகரிய உரைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் மவ்லீது இந்தப் பணியைத் தான் செய்கின்றதா?  நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் 'என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? எந்தப்பண்பை புகழ்ந்தீர்கள்' என்று கேட்டுப்பாருங்கள். கூலிக்குப் பாடியவர்களில் பலருக்கு இது தெரியாது. அவர்களை அழைத்துப் பாடச்சொன்னவர்களுக்கும் தெரியாது. புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கிறது. 

· அல்லாஹ்வின் வேதத்தை பொருள்.  தெரியாமல் ஓதினாலும் ஒரு எழுத்திற்கு பத்து நண்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகின்றது. மவ்லீதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும், கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களை பொருள் தெரியாமல் வாசித்தால் நண்மை உண்டு என நினைப்பது தான் நபி (ஸல்) அவர்களைப் புகழ்தலா? இந்தப்பாடலைப் பாடிய உடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்து விட்டதாக நம்பப்படுகிறதே. இதற்குப் பெயர் தான் நபி(ஸல்) அவர்களைப் புகழுதலா? .மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானல் இன்னும் அதைச் செய்வதானால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் அந்தக் காரியம் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும்.

இஇன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                                                     அல்குர்ஆன் - 05: 03.

இநபி (ஸல்) உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்று விட்டது. எனும் போது நபி (ஸல்) மரனத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத் தராத ஒன்றை மார்க்கத்தில் இனைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீழாது விழா என்பது நபி ஸல் அவர்கள் மரணித்து நான்கு  நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆறம்பிக்கப்பட்டது. எனும் போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இது போன்ற மார்க்க விசயத்தில் விளையாடிய யூத, கிருஸ்த்தவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும், கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்.

எனவே இது போன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விட வேண்டும். நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                         அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : புகாரி - 2697, முஸ்லிம் -  3242.        

மீலாது விழா கொண்டாடுமாறும் மவ்லீது ஓதுமாறும் நபி (ஸல்) அவர்கள் எந்த கட்டளையும் பிறப்பிக்காதது அதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது. செய்திகளில் உன்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் (அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு (அனாச்சாரமும்) வழிகேடும் நரகத்தில் சேர்க்கும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.                                 அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ். நூல் - நஸாயி -1560.

அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் மீலாத் கொண்டாடுமாறும் மவ்லீத்கள் ஓதுமாறும் கூறவில்லையென்றால் அது எப்படி ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது? மீலாதா? கிறிஸ்மஸா? எந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அந்த நாள் பற்றி பல விதமான கருத்து முறன்கள் இருக்கின்றது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறந்த விடயத்தில் எந்த கருத்து முறனும் கிடையாது. இவ்வாரிருக்க இவர்களின் விழாக்களும், வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா? ஒரு மனிதர் மரனித்தால் யாராவது சந்தோஸப்படுவார்களா? அல்லது கவலைப்படுவார்களா?  இதுதான் நபியைப் புகழுவதின் இலச்சனம். 'கிரிஸ்த்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீரிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்' என்பது நபி மொழி.                           அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி - 3445,6830.

ஈஸா (அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவது போன்று இன்று நமது முஸ்லீம்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் விழா எடுக்கின்றனர் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திருக்குர்ஆன் வசனங்களையும், நபி வழியையும் அலட்சியம் செய்யும் வகையிலும், புறக்கனிக்கும் வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்கக்கூடியதாகவும், இன்னும் இஸ்லாத்தைவிட்டு வெளியேற்றக் கூடியதாகவும், பல்வேறு நச்சுக்கருத்துக்களை கொண்டதாகவும் இந்த மவ்லிது கிதாபில் காணப்படுகிறது. உதாரணமாக, எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லிது' எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார்.                             (ஆதாரம் : சுப்ஹான மவ்லித் பக்கம் : 12) 
மௌலிதின் (ஸெக்ஸ்) ஆபாஸங்கள். ஸாஹுல் ஹமீது என்பவர் தன் பருவ வயதை அடைந்த மகனுக்கு பெண் பார்ப்பதற்காக செல்லுகின்றனர். அந்த வேளையில் ஆற்றங்கரை ஓரமாக கண்ணிப் பெண்கள் சிலர் குளித்துக் கொன்டு இருக்கின்றனர். அப்போது ஸாஹுல் ஹமீது ஒரு கன்னிப் பெண்ணை தன் கரத்தால் தடவி விட்டு இந்தப் பெண் தன் மகனுக்கு நல்ல தோதுவானவள். என்று சொன்னார்கள். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இது சரிதானா? பெண்கள் குளிக்கின்ற இடத்திற்கு ஒரு இறைநேசர் சௌ;ளுவாரா? அப்படி பெண்கள் குளிக்கின்ற இடத்திற்கு சென்று பெண்களை (சயிட்) அடிப்பவர் இறைநேசரா? காம உணர்வு பிடித்த நித்தியானந்தனா? இன்னும் நமது ஊர் பெண்கள் குளிக்கின்ற இடத்திற்கு யாராவது சென்று அங்கே உள்ள பெண்களைப் பார்த்தாள். நாம் சரி குளிக்கின்ற பெண்களைத்தானே பார்க்கின்றனர் என்று சும்மா விட்டு விடுவோமா அல்லது செறுப்பாலும், விழக்குமாராலும். விரட்டி ஓட அடிப்போமா இல்லையா? 

பாவங்களை மன்னிப்பது நபிகள் நாயகமா?          

                                நபி (ஸல்) அவர்களிடம் பாவமன்னிப்பு கோரும் விதமாக மவ்லிதில் பல வரிகளை நாம் காணமுடியும்.  

أنت غفار الخطايا           والذنوب الموبقات
இஇழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ! அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ!
غفروا عني ذنوبي    واعف لي عن سيئات

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொருத்தருள் புரிபவரே! என்று ஸுப்ஹான மவ்லிது கிதாபில் எழுதி வைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் அந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும், நபி வழியையும் மதிக்கக்கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். 'தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ்) கூறுவதை தெரிவிப்பீராக!'                                                                                         அல்குர்ஆன் - 39: 53

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. பல நபிமார்கள் கூட அல்லாஹ்விடத்தில்தான் பாவமண்ணிப்பு கேட்டுள்ளனர். அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்த கப்ஸாக்களை படிப்பது பாவமா? புன்னியமா? என்பதை மவ்லிது பக்தர்கள் சிந்திக்கட்டும்.! நன்மை என்று என்னிக் கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லிது பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?

திருக்குர்ஆனுக்கும், நபி வழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள, மேலும் இஸ்லாத்தில் பலதெய்வ வழிபாட்டு முறையை திணிக்க முயன்றுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபட்டு உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம். இன்னும் கேளுங்கள் அபத்தங்களை
صَرْمًا لِعَفْوَتِهِ أَجَبْتُهُ مُسْرِعًا مِنْ أَجْلِ دَعْوَتِهِ  وَمَنْ يُنَادِيْ إِسْمِيْ أَلْفًا بِخَلْوَتِهِ عَزْمًا بِهِمَّتِه

மன உறுதியுடன் என் பாவமன்னிப்பை நம்பியவராக தனிமையில் இருந்து  என் பெயரை யார் ஆயிரம் முறை அழைக்கின்றாரோ அவரின் அழைப்பால் நான் வேகமாக வந்து அவருக்கு விடையளிப்பேன்.

· மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை உலக நோக்கத்திற்காக தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் வாசகர்கள் கவனத்தில் கொள்க! நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால். வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்? நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்? கொடுக்கப்படும் கூலிகளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும் ஏன்? பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவதுதான் நபி(ஸல்) அவர்களைப் புகழும் இலட்சணமா?

மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள். அதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இல்லாத வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். மார்க்க அறிஞர்களுக்கு இழிவு ஏற்பட இதுதான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்வார்கலா. மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் (பித்அத்) மார்க்கத்தின் நூதனச் செயலாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தராத வற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக வழி கேடாகும்.

அது மறுமையில் நிராகரிக்கப்படும். அதற்குறிய தண்டனையும் கிடைக்கும். உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்னற்றுபவர் சுவனம் நுலைந்து விடுவார்! எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார். அவர் சுவனம் நுழைய மாட்டார். என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.                                                                     நூல் புஹாரி – 7280. 

எனவே நபி (ஸல்) அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதன் அடையாளமாகும். மஹ்ஸரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி ஸல் அவர்கள் தண்ணீர் புகட்டிக்கொண்டிருப்பார்கள் அதில் நீர் அறுந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்கள்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச்nளூசன்று விடுவார்கள். 

எனவே அன்பிற்கினிய சகோகதரர்களே! மீழாது விழா உட்பட மார்கத்திற்கு முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலொசனையாலோ, வேறு எந்த வித்ததிலும் உதவ வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம். குர்ஆனையும், ஹதீஸையும் விழங்கி அதன் நிலழில் வாழ்ந்து சுவனம் நுழைய அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக.




10 comments:

  1. படிப்பினை ஊட்டும் மீலாது விழா

    * உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன.
    (ஸுரத்து ஹுத் 121)

    * மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்து யூஸுப் 111)

    * நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
    (அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331)

    இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும்
    (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762)

    மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
    (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253)

    வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்? எனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.

    எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான். இப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும்.



    ReplyDelete
  2. மவ்லிதுகள் தீனிக்காக!!!மவ்லி!துகள் படிப்பினைக்கு என்பதை எந்த ஈமான் பலம்மிக்கவர்களும் ஏற்றுகொள்ளமாட்டார்கள்,..!மவ்லிதுகள் தீனிக்காக!!!மீலாது விழாவும் சஹாபாக்களும்
    நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

    மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
    ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

    பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

    கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. நபி(ஸல்)
    தாமாகவே தனது பிறந்ததினத்தை கொண்டாடினார்களா
    ??... ஆம். இந்த ஹதீஸ் சுனன் பைஹகயில்
    பதிவாகியுள்ளது.அதாவது ரசூல்(ஸல்) அவர்கள்
    தமது பிறந்த தினநாளொன்றின் போது, இரண்டு ஆடுகளைஅறுத்து,ம
    க்களை அழைத்து உணவு பரிமாறி விருந்து வழங்கினார்கள்.
    இந்த ஹதீஸை எவருக்கும் நிராகரிக்க
    முடியாது.மிக்ப்பெரும் இஸ்லாமிய அறிஞர்கள்
    இவ்விடயத்தில் சட்டரீதியான முறையில்
    ஆராய்ந்துசரியான பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். மிகப்பெரும் முஹத்திஸ்களில் ஒருவரான இமாம்
    ஜலாலுத்தீன் ஸூயூத்தி(ரஹ்) இது பற்றி குறிப்பிடும்
    போது,இந்த நாளில் நபி(ஸல்) அவர்கள்
    தமது பிறந்ததினத்தினையே கொண்டாடினார்கள்.
    மேலும் தனது பிறந்ததினத்தை (மவ்லிதை)கொண்டா
    ட உம்மத்தினருக்கு அனுமதியும் வழங்கினார்கள் என்று கூறியுள்ளார்.இமாம் ஜலூத்தீன்
    ஸூயூத்தி(ரஹ்) அவர்களின் 'ஹஸனுல் மக்ஸித் பீ
    அமலில் மவ்லித்" என்ற புத்தகத்தில் 33வது பக்கத்தில்
    இதனை இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.
    முஸ்லிம்உம்மத்தின் மிகப்பெரும் முஹத்திஸ்ஸூம்,
    ஸஹீகுல் புகாரியின் விரிவுரையாளருமான இமாம் இப்னு ஹஜர் அஸ்களானி(ரஹ்) அவர்களிடம் நபி(ஸல்)
    அவர்களின் மவ்லித்தை(பிறந்த தினத்தை)
    கொண்டாடுவது பற்றிக் கேட்கப்பட்டது.
    அதற்கு இமாம் இப்னு ஹஜர் அஸ்களானி(ரஹ்)
    அவர்கள்,
    எனது கருத்தின்படி மவ்லித்தானது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸூக்கு ஏற்ப உருவாக்கப்பட்டத
    ு என்று பதில் அளித்தார்கள் என குறிப்பிட்டுள்ள
    ார்கள். இது இப்படியிருக்க, இஸ்லாத்தில்
    மிகப்பெரும் முஹத்திஸ்கள் சரிகண்ட
    விடயத்தை ,இஜ்திஹாத்துடைய நிலையை அடைய
    இருக்க வேண்டிய 9நிபந்தனைகளில் ஆகக்குறைந்தது ஒன்றிலும் தேர்ச்சியில்லாதவர்கள்
    பிழை என்று குறிப்பிடுவது அவர்களின் குறைந்த
    அறிவை சுட்டிக்காட்டுகின்றது.

    ReplyDelete
  4. சகோ. அஸாஹிம் அவர்களே அப்படியென்றால் கிறிஸ்மஸ் தினத்தினையும் கொன்டாடி ஈசா நபியைப்பற்றிய அகமிய விடயங்களை நம் சமூகத்திற்கு சிறப்பாக சொல்லுங்களேன். ஈசாவும் ஓர் நபிதானே அவரைப் பற்றியும் சமூகத்தில் பல தப்பபிப்பிராயங்கள் நிலவுகிறதல்லவா?. எனவே கிறிஸ்மஸ் தினத்தினையும் சிறப்பாக ஜாம் ஜாம் என்று நார்சா சகிதம் மணம் குணமா கொண்டாடுவோமா?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்.

    ஹதீத்களை தவறாக புரிந்து கொண்டு கருத்து சொல்லியிருக்கிறீர்கள். மீலாத் விழா கொண்டாடுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது, முடிந்தால் அல் குர்ஆனில் இருந்தோ சஹீஹான ஹதீதில் இருந்தோ நேரடியான ஒரு வாசகத்தை காட்டுங்கள் பார்க்கலாம். சகோதரர் மு .ஆ .ஜவாகிர் ஜமாலி அருமையாக விழக்கியுள்ளார். திரும்ப திரும்ப படித்து பாருங்கள் புரியும். நன்றி நண்பர் மு .ஆ .ஜவாகிர் ஜமாலி அவர்களே. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. வஸ்ஸலாம்.

    asmil
    hemmathagama.

    ReplyDelete
  6. (01)
    நபி புகழ் பாடிய நபித்தோழர்கள்..!
    மஸ்ஜிதுன் நபவியில் நபிகளாரும் ஸஹாபாக்களும் கூடியிருந்த சபையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஃபு இப்னு ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக் கவிஞர் பாடியபோது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அன்னவர்கள் மகிழ்ச்சியால் தமது மேனியில் போட்டிருந்த போர்வையை எடுத்து அந்த சஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் ஒட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கொளரவித்தார்கள்.
    ஹாகிம் 3-578 , அகீததுஸ் ஸுன்னா 318
    அந்த கண்ணியம் நிறைந்த இறை தூதர் அவர்களின்
    (மௌலித்) என்னும் புகழ் பாடுதல்...
    சஹாபாக்களின் காலத்திலும்
    கண்ணியமாக நடந்துள்ளது...!!!!!
    (02)
    பெருமானார் (ஸல்) அவர்கள்
    ' வெண்மை நிறத்தவர்கள்...!
    அவர்களால் மழை வேண்டப்படும்....!
    அவர்கள் அனாதைகளுக்குப் புகலிடமாகவும்,,,
    விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்கள்...!
    ' என்று அபூ தாலிப் அவர்கள்,, நபி (ஸல்) அவர்களை
    புகழ்ந்து பாடிய கவிதையை இப்னு உமர் (ரழி) அவர்கள்
    எடுத்தாள்பவராக இருந்தனர். .
    அறிவிப்பு-அப்துல்லாஹ் இப்னு தீனார் (ரழி)
    Volume :1 Book :15 புஹாரி(1008)
    (03)
    நபி(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி நின்று)
    (தமது ''முபாரக்கான'' கையை மேலே நீட்டி) (அல்லாஹ் விடம்)
    மழையை வேண்டிப் பிரார்த்தித்தபோது...!
    அவர்களின் (திரு) முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..!
    அவர்கள் (மிம்பரில் இருந்து) கீழே இறங்குவதற்குள்
    ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது....!
    பெருமானார் (ஸல்) அவர்கள்
    ' வெண்மை நிறத்தவர்கள்...!
    அவர்களால் மழை வேண்டப்படும்....!
    அவர்கள் அனாதைகளுக்குப் புகலிடமாகவும்,,,
    விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்கள்...! என்ற
    அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக்
    கொள்வேன்.
    அறிவிப்பு-இப்னு உமர் (ரழி)
    Volume :1 Book :15 புஹாரி(1009)
    (04)
    அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் ஓர் முறை
    உரை நிகழ்த்தும் போது
    '' நபி(ஸல்) அவர்களை பற்றி
    அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்கள் இயற்றிய''
    பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்....!
    'எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
    இருக்கின்றார்கள்....!
    ஃபஜ்ரு நேரம் வந்ததும்,,
    அல்லாஹ்வின் வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள்..!
    நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்கு
    அவர்கள் நேர்வழி காட்டினார்கள்...!
    அவர்கள் கூறியது நடந்தே தீரும்...!
    இதை எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன...!
    இணை வைப்பவர்கள் படுக்கையில்,,
    அழுந்திக் கிடக்கும்போது இறை தூதர் அவர்கள்,,
    படுக்கையிலிருந்து எழுந்து (இறையை)
    தொழுவார்கள்...!
    அறிவிப்பு- ஹைஸம் இப்னு அபீ ஸினான் (ரழி)
    Volume :1 Book :19 புஹாரி-(1155)
    (05)
    நபி(ஸல்) அவர்கள் ''பனூ நளீர்'' குலத்தாரின்
    பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும்
    (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள்...!
    இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் 'அல் புவைரா'
    என்று கூறுவார்கள்..!
    (நபி (ஸல்) அவர்களின் இந்த செயலை) குறிப்பிட்டு,,
    ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள்..
    ''புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க,
    அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல்,
    (இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது,
    'பனூ லுஅய்' குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு
    எளிதாகிவிட்டது"
    என்று.. (குறைஷித் தலைவர்களை பரிகாசம் செய்தும்'
    நபி (ஸல்) அவர்களை புகழ்ந்தும் )
    கவிதை பாடினார்கள்..!
    அறிவிப்பு- அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி)
    Volume :2 Book :41 புஹாரி-(2326)

    (06)
    . அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்
    இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்,,!
    ழூழூ(கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்
    அல் அன்சாரி(ரலி) அவர்கள்
    அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம்,
    'அபூ ஹுரைரா! இறைத்தூதர் சார்பாக
    பதிலடி கொடுப்பீராக.
    இறைவா! தூய ஆன்மா(ஜிபிரீல்) மூலம் ஹஸ்ஸானை
    வலுப்படுத்துவாயாக!
    என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?'
    என்று விவரம் கேட்டார்கள்.
    அதற்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.
    Volume :6 Book :78 புஹாரி-(6152)

    ReplyDelete
  7. தனது பெயாராலேயே "புகழப்பட்டவரை" புகழக்கூடாது என்று கதறுவது அறிவுடைமையாகாது.


    01.ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு பள்ளிவாசல் ஒரு மிம்பரைஅமைத்துக் கொடுத்தார்கள்.அதிலே அவர்கள் ஏறி நின்றுஇறைதூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களையே புகழ்வார்கள்.

    அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாநூல் :திர்மிதி எண் :2773
    ******************************************

    02.இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்."நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை(அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு)உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னைஉயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான்அல்லாஹ்வின் அடியான் தான்.(அப்படி என்னைப் நீங்கள் புகழ நாடினால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும்' இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்'என்று கூறினார்கள்"என மிம்பரின் மீதிருந்தபடி உமர்(ரலி)சொல்ல கேட்டிருக்கிறேன்.

    நூல்-(புகாரி-3445)


    03.எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன...!(01)-நான் முஹம்மது - புகழப்பட்டவர்...!(02)-அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவர்..!(03)-மாஹீ - அழிப்பவர் ஆவேன்..!என் மூலமாக அல்லாஹ் இறை மறுப்பைஅழிக்கிறான்.(04)-ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர்...!மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.(05)-ஆகிப் -(நபிமார்களில்) இறுதியானவர்..!என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறியதாக:ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)அறிவித்தார்கள்.

    நூல்; (புகாரி-4896.-3532.)

    04.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்கள்...!

    Volume :6 Book :78 புஹாரி-(6145.)

    ReplyDelete
  8. i agree with br M.A.jawahir jamali.
    naam nabi avarhalai puhalathaan vaendum. but athatkum Allah, Rasool kaattiya valimurai onru ullathu. athanpadi than puhala vaendum. varambu meera mudiyathu.
    surely this is(meelad & moulith) also a world conspiracy against islam by jews and christians.

    ReplyDelete
  9. மஹதி ஹசன் அவர்களுக்கு நன்றி மிக சிறந்த ஹதீஸ்களை பதிந்துள்ளீர்கள். அதில் இதையும் சேர்த்தல் இன்னும் நன்றாக இருக்கும். ஒரு தோழர் நபிகள் நாயகம் ஸல். வந்து யா ரசூலுல்லாஹ் நான் நோன்பு நோற்பதாக இருந்தால் எந்த தினத்தில் நோன்பு நோற்க என்று அப்போது ஸல்.... அவர்கள் கூறினார்கள் திங்கள் கிழமை அன்று நோன்பு நோறுங்கள் அன்று தான் நான் பிறந்தேன் . அன்று தான் அல்லாஹ் என்னை நபியாக அறிவித்தான். அறிவிப்பாளர்; ஹழ்ரத் அபூ கதாதா ரழி... நூல்: முஸ்லிம்...


    சொன்னது மாத்திரம் அல்ல, நாயகம் ஸல்... அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று நோன்பு வைத்து கொண்டும் வந்துள்ளார்கள். பிறந்த நாளிற்கு சிறப்பில்லை என்று கூறுபவர்கள் நபி ஸல்... அவர்கள் சிறப்பு இருக்கின்றது என்று கூறி இருக்க அதை மறுப்பவர் ஆகின்றார்கள். இதை கொண்டாட மறுப்பவர்களே மேலே குறிப்பிட்ட புகாரி 7280 எண் ஹதீஸிற்கு பொருத்தமானவர்களாக இருக்கின்றார்கள். ஒரு நாளிற்கு சிறப்பில்லை என்றால் அதை சொல்ல வேண்டியது நபிகள் நாயகம் ஸல்... அவர்களே நாயகம் ஸல்.... அவர்கள் சொல்லாமல் ஸல்.... அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். ஆக வருடத்திற்கு ஒரு முறை அல்ல ஒவ்வொரு வாரமும் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீலாது கொண்டாட கூறி இருக்கின்றார்கள்.

    நாயகம் ஸல்... அவர்களின் மீலாத்தை மறுப்பவர்கள் மீலாதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த ஈசா அலை சம்பந்தப்பட்ட ஹதீஸை விட்டு விட்டு, பிறப்பில் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று சுட்டும் ஹதீஸை காட்டுங்கள் பிறகு வாதம் வையுங்கள். அதை விட்டு விட்டு நபிகள் கோமான் ஸல்... அவர்கள் மீது அபாண்ட பழியை போடாதீர்கள்.

    நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் அனுமதித்த மீலாத்தை தடுக்காதீர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும்

    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  10. وَاذْكُرُوا نِعْمَتَ اللَّـهِ عَلَيْكُمْ
    அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;

    இன்னொரு இடத்திலே கூறுகின்றான் வஅம்மா பிநி ஃமதி ரப்பிக பஹத்திஸ்
    அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள்

    இன்னொரு இடத்திலே கூறுகின்றான் குள்பிபல்ழில்லாஹி வபிரஹ்மதிஹி fபபி தாளிக்கfபல்யப்ரகூ
    நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்)அவர்களே மக்களுக்கு கூறுங்கள் இறைவனுடைய அருளும் அருட்கொடையும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அவர்களுக்கு கிடைத்த அந்த ரகுமாத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும்

    இவ்வளவும் அல் குர்ஆன் நமக்கு கூறிக்கொண்டிருக்கிறது

    அதுமட்டுமல்ல நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களின் புகழ்கலை கவிதை வடிவில் சஹாபாக்கள் படித்தார்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அங்கீகரித்தார்கள் கவ்ப்f இப்னு zuhair (ரழியல்லாஹு அன்ஹு) அன்னவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) பொன்னாடை போத்தினார்களே எதற்காக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அன்னவர்களுக்கு மஸ்ஜிதுன்னபவியிலே மிம்பர் படி அமைத்து கொடுத்தார்களே எதற்காக அல்லாஹ் கூறினானே அருள்மறை அல் குர்ஆனிலே மேலே சொல்லப்பட்ட ஆயத்துக்கள் கூறுகிறதே (நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள் ; ரகுமாத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் ) இவைகளை கூறிய நாயன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)
    மீலாத் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.