Header Ads



ரிஸானாவுக்கு ஒரு கடிதம்...!


(Ash.Zihan - Naleemi)

உனக்கு மரண தண்டனை கொடுத்தது சவுதி அரசு
ஆனால் உன்னை மரண தண்டனைக்காக அனுப்பி வைத்தது எம் சமூகம்

உன்னை மன்னித்திருக்கலாம் என்று சொல்கிறார்கள் 
உன்னை இம்மண் மீதே வாழ வைத்திருக்கலாம் என்று சொல்கிறேன்

நீ சவூதிக்கு சென்ற பிறகு தான் உன் கதை அறிந்தார்கள் எம்மவர்கள்
நீ வீட்டிலிருக்கும் போது அவர்கள் உன் கண்ணீர் துடைக்க மறந்தார்கள்
நீ பசித்த போது உனக்கு உணவளிக்கவில்லை
நீ நோயுற்ற போது உன்னை பார்க்க வரவுமில்லை
நீ கல்வியை கைவிட்ட போது உன் கைபிடித்து தூக்கிவிடவுமில்லை

ஆனால் நீ மரணித்த போது மட்டும் கண்ணீர் விடுகிறார்கள்..

சட்டத்தில் ஓட்டை இருக்கிறதா என்று பார்க்கிறவர்கள் ஏன் உன் வீட்டு சுவரில் இருந்த ஓட்டைகளை கண்டுகொள்ளவில்லை..?

ரிஸானாவே..!

நீ மரணித்ததில் சற்று எம் சமூகம் இப்போது உயிர்கொண்டு எழுந்திருக்கிறதா..??

நீ வீடின்றி இருந்த போது எம்மவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு ஏப்பமிட்டார்கள் 

உன் வீட்டு அடுப்பெரிய நீ விறகு தேடிச்சென்ற போது எம்மவர்கள் சாப்பிட்டுவிட்டு பல் குத்த 'Tooth Prick' வாங்கிவந்தார்கள்

நீ உன் தங்கைக்கு சட்டை தைத்த போது எம்மவர்கள் வீட்டுக்கு A/C பூட்டினார்கள்

நீ சாப்பாடின்றி கவலைப்பட்டபோது எம்மவர்கள் பாகிஸ்தான் தோற்றதுக்காய் சாப்பிடாமல் விட்டார்கள்

நீ உன் வீட்டு கூறையில் ஓட்டை எண்ணிய காலத்தில் எம்மவர்கள் தராவீஹுக்கு ரகஅத்து எண்ணினார்கள்

உன் குடும்பத்தின் மானத்தை மறைக்க கஷ்டப்படபோது எம்மவர்கள் தலைக்கு தொப்பி போடுவதில் சண்டையிட்டர்கள்

உன் வீட்டுக்கூறை தலையில் முட்டுகிறது என்று சொன்னபோது எம்மவர்கள் கனுக்காழுக்கு கீழால் கழுசன் தொங்குவது ஹராம் என்றார்கள்

நீ உன் வீட்டுக்குள் குமுரி அழுதபோது எம்மவர்கள் நுவரெலியாவில் குதிரைப் பந்தயம் பார்த்து சிரித்தர்கள்

உன் வீட்டுக்கு மலசல கூடம் இல்லை என்று சொன்னபோது எம்மவர்கள் இன்னொரு பள்ளிவாயலைக் கட்டி ஊரை பிரித்துச் சென்றார்கள்

நீ உறங்குவதற்கு கட்டில்களில்லை  என்றபோது எம்மவர்கள் வீட்டுக்குள்ளே Swimming Pool கட்டினார்கள்

உன் வீட்டு வறுமைக்காய் கடல் கடந்து சென்ற போது எம்மவர்கள் கடல் நடுவில் கல்யாணம் நடத்தினார்கள்

நீ சாப்பிடாமல் தூங்கிய போது எம்மவர்கள் அதிகம் சாப்பிட்டதால் நோயாளியானார்கள்

ரிஸானா..! 

நீ எம் சமூகத்துக்கு ஆயிரம் ஆயிரம் செய்திகள் சொன்னாய்

அவை அவர்களுக்கு கேட்டிருக்காவிட்டால் இதோ நான் மீண்டும் சொல்கிறேன்

இன்னும் இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் 'ரிஸானாக்கள்' வாழ்வதை நீ காட்டித்தந்தாய்

அவர்களை நீ காப்பாற்றச் சொன்னாய்

புனிதப் பூமியில் அவர்கள் ஹராமாய் வாழ்ந்திடாமல் இந்த மண்ணிலே அவர்களை புனிதத்தோடு வாழ வைக்கச் சொன்னாய்

எம் கொடைவள்ளல்கள் வருடா வருடம் ஹஜ்ஜுக்கு செல்வதை விட்டு வருடா வருடம் ஓர் ஏழைக்கு வீடு கட்டச் சொன்னாய்

ஓவ்வொரு ரமழானிலும் உம்ரா செய்வதை விட்டு ஓர் அநாதைக்கு அறிவு கொடுக்கச் சொன்னாய்

இன்னும் நீ சொன்னாய்

தஃவாக் களத்தில் கருத்துச் சண்டையிடுவதையிட்டு வறுமை நிலத்தில் பயிர் விதைக்கச் சொன்னாய்

பல ஆயிரம் செலவளித்து கொடி கட்டி கந்தூரி கொடுப்பவர்களுக்கு பள்ளிக்கு அருகாமையில் பாடசாலை கட்டச்சொன்னாய்

பள்ளிவாயல்கள் கட்டி மனிதர்களை கூறுபோடுவதை விட்டு மனிதத்தை வாழ வைக்கும் மனிதர்களை உருவாக்கச் சொன்னாய்

மனிதர்களின் ஈமானை அளவிட்டு பரிசும், பட்டமும் கொடுப்பதைவிட்டு எம் சமூகத்தின் பிரச்சினைகளை அளந்து தீர்வு தேடச்சொன்னாய்

நீ மரணித்தாய் அது அல்லாஹ்வின் நாட்டம் உனக்கு சுவனத்துப் பாக்கியம் கிடைக்க வேண்டும் 

நாம் உயிரோடுதான் இருக்கிறோம் இதன் பிறகாவது நாம் வாழும் பூமியில் ரிஸானாக்கள் பிறந்திடாமல் அதனை குட்டி சுவனமாக்குவோம்.

-இன்ஷா அல்லாஹ்-

6 comments:

  1. இன்ஷா அல்லாஹ் ....

    இறைவனுக்காக பள்ளி கட்டுவதை விட ஒரு சகோதரனுக்கு ஹலாலான தேவைக்கு உதவுவது எவ்வளவு மேல்.

    நெஞ்சு கனக்கிறது இந்த சமூகத்தை எண்ணி ( என்னையும் சேர்த்துதான் ).

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள் நவின்ரீர்கள்.
    நன்றிகள் பல உமக்கு.

    ReplyDelete
  3. ஏழைகளின் வாழ்வு மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெறிகையில் உதவாமல் இருபோர் யாரும் இல்லை ஏழைகளின் உண்மைகளை எத்திவைக்க வேண்டியது தெறிந்திருக்கும் உங்களை போன்றோறின் பொறுப்பும் அதுகுறித்து ஆதங்கபடும் ஊடகங்களின் பொறுப்புமாகும் என் வீட்டில் நான் உண்டியல் வைத்திருக்கிறேன் எதட்காக தெறியுமா கந்தூரிக்கு நேர்சைபோடவோ அல்லது ஸியாரதுக்கு நேர்ந்து காசுபோட்டு நிறப்பவோ அல்ல குடும்பத்தில் நிகழும் நோய் நொடிகள் கஸ்டங்கள் தேவைகளின் போது இயலுமான ஸதகாவை அதில் இட்டு விடுவோம் யாராவது வீடு தேடி வந்தால் அவர்களுக்கு கொடுத்திடுவோம் அதில் எவ்வள்வு உள்ளதோ அவ்வளவையும்

    தேடி சென்று ஸதகா செய்ய ஆண்கள் எப்போதும் வீட்டில் இருப்பதில்லை மஹ்ரமில்லாத அண்துணை இல்லாமல் எங்கள் பெண்கள் வெளி இறங்குவதும் இல்லை இது என் கதை மட்டும் அல்ல எத்தனையோ ஆயிர கணக்கான குடும்பங்களின் நிலை இதுதான் அவர்களுக்கு உதவ முடியும் ஆனால் அவர்களால் தேடி சென்று உண்மையானோறுக்கு உதவும் நிலை அவர்களுக்கு இல்லை

    உதவி தேவைபடுவோறுக்கும் உதவ முடியுமானோறுக்குமான பாலம் ஒரு ஊடகத்தின் மூலமும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமுமே சாத்தியம் அப்படி இஃலாசான என்னத்தில் அதனை ஒரு ஊடகமோ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமோ முன் எடுத்து சென்றால் வறுமையை குறைக்க முடியாவிட்டாலும் அவர்களின் சில தேவைகளையாவது சாத்தியமானோர் தீர்த்துவைக்கும் வழி பிறக்கும் கன்னியமாக உதவி கோறும் நிலையை உருவாக்காமல் ஏழைகளின் உண்மையான நிலையை அறிந்து கொள்வது கஷ்டம் உண்மையான ஏழை கவுரவத்தில் சீமானாக இருப்பான் அவன் கவுரவத்தை இழந்து தன் கஷ்டத்தை அடுத்தவருக்கு தெறிவிப்பதில்லை அவனது கவுரவம் பாதுகாக்க பட்ட நிலையிலேயே அவன் அவனது வறுமையை போக்க தீர்வை என்றும் தேடுவான்

    ReplyDelete
  4. This letter is very important to the Islamic People & Organizations of Sri Lanka.

    ReplyDelete
  5. dawah kalathil ungali winji quraan Sunnah wai pesakkudiyawarhalukku ungada padaippukkalil wambukku ilukka witta ungal inathukku thukkame warathu pola. ugada ameer ithaellam solli tharathillaya? enna koduma sir? nega ellam eppa pakkuwappattu eppa dawah seirathu.

    ReplyDelete
  6. lets ask thawba n struggle against un islamic customs in our society.feesabilillah

    ReplyDelete

Powered by Blogger.