Header Ads



இவரது தலையை கொண்டு வாருங்கள் 60 கோடி தருகிறோம் - பாகிஸ்தான் அறிவிப்பு


தலிபான் தகவல் தொடர்பாளர் இஷானுல்லா குறித்து, தகவல் தருபவர்களுக்கு, பாகிஸ்தான் அரசு, 60 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இவர்கள் "தேரிக் -இ- தலிபான்' என்ற பெயரில் இயங்குகின்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் படி, அரசை வற்புறுத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் நடக்கும் பெரும்பாலான குண்டு வெடிப்புகளுக்கு, இந்த அமைப்புதான் காரணமாக உள்ளது.அமைதிக்காக பிரசாரம் செய்த, மலாலா என்ற பள்ளி சிறுமியை, தலிபான்கள் சுட்டதில், மூன்று மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள். 

இஸ்லாமாபாத்தில் "டிவி' நிலைய ஊழியரின் காரில், வெடி குண்டை வைத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிப்பதற்கு முன், செயலிழக்க செய்யப்பட்டது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மாலிக், ஆயுதங்களை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும்' என, அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து, தேரிக்-இ-தலிபான் அமைப்பின் தகவல் தொடர்பாளர் இஷானுல்லா ரஹ்மான் குறிப்பிடுகையில், 

"வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக விளங்கும் மதசார்பற்ற அரசை, ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வரை, அமைதி நடவடிக்கைக்கு திரும்ப மாட்டோம்' என, கூறியிருந்தார்.இஷானுல்லாவின், இந்த பேட்டியினால், அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, அவருடைய தலைக்கு 60 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குறிப்பிடுகையில், "தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்களை கொல்வதை, தலிபான்கள் நியாயப்படுத்துகிறார்களா? தலிபான்கள், பணத்துக்காக, இஸ்லாமின் புகழை குலைக்கிறார்கள். இஷானுல்லாவின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 20 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்' என்றார். 

No comments

Powered by Blogger.