Header Ads



முஸ்லிம் சமூக பிளவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் போராடவேண்டும் - O.I.C.


சவுதியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) மாநாட்டில் சிரியாவை இடை நீக்கவும், மியன்மார் முஸ்லிம் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜித்தாவில் கடந்த இரு தினங்கள் நடைபெற்ற 57 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் முஸ்லிம் சமூகத்தின் பிளவுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்ற அழைப்புடன் இந்த மாநாடு முடிவடைந்தது.

இஸ்லாமிய நாடுகள் அரசியல் இலாபத்திற்காக பிரிவினைவாதத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநாட்டின் முடிவில் அதன் செயலாளர் நாயகம் எகல்டின் இஹ்ஸனொக்லு வலியுறுத்தினார். TN

No comments

Powered by Blogger.