Header Ads



ராஜகிரிய மஸ்ஜித்திற்கு மூடுவிழா - பௌத்த தேரர்களின் அடாவடி..!


V

ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் கடந்த மூன்று தினங்களாக பௌத்த தேரர்களின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை குறித்த மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் குறித்த பள்ளியில் இன்று சுபஹ், லுஹர் தொழுகை கூட இடம்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த 29.07.2012 அன்று இரவு ஜாமியுல் தாருள் ஈமானுக்கு வந்த வேறு பிரதேசத்தை சேர்ந்த பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்தை மூடுமாறு கோஷமிட்டுள்ளனர். அவர்கள் கோஷமிட்ட பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மஸ்ஜித் நிர்வாகத்தினர் மஸ்ஜிதுக்கு அண்மையில் இருக்கும் ராஜகிரிய விகாரையின் பௌத்த தேரரைச் சந்தித்து இந்த விடயம் தொடர்பாகப் பேசியுள்ளனர்.

அதற்கு அவர் மஸ்ஜிதை தற்காலிகமாக ஒரு நாள் பூட்டுங்கள் நான் உங்களுக்கு நல்ல தீர்வொன்றைப் பெற்றுத்தருகிறேன் என்று கூறியுள்ளார். குறித்த தேரர் பிரதேச முஸ்லிம்களுடன் நன்றாக பழகுபவர் என்பதால் மஸ்ஜித் நிர்வாகமும் அதைக் கேட்டு ஒரு நாள் மூடிவிட்டு மறுநாள் அவரை சந்தித்தபோது அவர் தற்போது நிலைமை என் கையை விட்டு சென்றுவிட்டது என்று கையைவிரித்துள்ளார்.

மஸ்ஜித் மூடப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் கழிந்துள்ளது. மூன்றாவது நாளான இன்று மஸ்ஜிதுல் ஜாமியுல் தாருள் ஈமான் நிர்வாகத்தினர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை அணுகி மஸ்ஜித் மூட்டப்பட்டுள்ளமை தொடர்பாக முறையிட்டனர்.

இது தொடர்பாக உடனடியாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் பௌசியுடனும் தொடர்பு கொண்டு இதை அறிவித்துள்ளோம், அவர் எந்த வகையிலும்; மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

குறித்த மஸ்ஜித் சட்டரீதியாக எல்லா ஆவணங்களையும் கொண்டுள்ளது. வக்பு சபையிலும் பதிவைக் கொண்டுள்ளது. எந்த வகையிலும் மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஏற்றுக்கொள்ளாது. மஸ்ஜிதை மீண்டும் திறக்கத்தேவையான உடனடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் என்றும் ஜம்இயதுல் உலமா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது என்றும்; ஜம்இயதுல் உலமா தெரிவித்துள்ளது.

12 comments:

  1. Why the President is not saying anything about this?

    ReplyDelete
  2. Which area this Rajagiriya masjid situated in Sri lanka?

    ReplyDelete
  3. Arappadiththa niruvaakam ithai munnare aalosanai seythu moodaamal irunthirukkalaam muthalil aalosanai seythu moodaamal irunthirukkalaam ippo minister kalum jamyathul ulamaa safayum thevai

    ReplyDelete
  4. "யா அல்லாஹ், உன்னை வணங்குவதை விட்டும் நம்பிக்கையாளர்களைத் தடுக்கும் அக்கிரமக்காரர்கள் திருந்தி நேர் வழி பெறக் கூடியவர்களாக இருந்தால், அவர்களை திருத்தி விரைவிலேயே நேர்வழியின் பால் செலுத்துவாயாக, இல்லாவிட்டால், அவர்களை உடனேயே அழித்து, அதனை நீ மற்றவர்களுக்கும் படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக."

    பள்ளி நிர்வாகத்தின் சமயோசிதமற்ற நடவடிக்கையும் இதற்கு ஒரு முக்கிய காரணம். சம்பவம் நடைபெற்ற உடனேயே, அவர்கள் ஜமிய்யத்துல் உலமா, முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் மீடியா போரம் மற்றும் போலிஸ் என்பவற்றைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

    பெளத்த மத வெறியர்கள் மீண்டும் ஒரு தடவை ஏதாவது மஸ்ஜித் தொடர்பில் அடாவடித்தனம் பண்ணினால், உடனடியாக மேற்கொள்ளப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எல்லா பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் உடனடியாக வழங்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  5. To Editor :

    தலைப்பில் உள்ள ''மூடுவிழா'' என்ற சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை.

    மூடு ''விழா''(??)

    இது அல்லாஹ்வின் இல்லம் தொடர்பான செய்தி.
    ஆகவே தயவு செய்து சற்று கவனம் செலுத்தவும்.

    ReplyDelete
  6. Ella vishayathilum arashiyal laafam thedum muslim thalaiwarhal irukkum varaikum izu theeraza pirachinai than... netru ranil patri oolai vitta AZWAR inru enge?
    panathukkaha ezaiyum tharai varkkak koodiya izu mathiri muzukelumbu illazavankal irukkum varaikkum elangai muslimkalukku vidivu????????????????????????????

    ReplyDelete
  7. pl's give all muslim minister phone number

    ReplyDelete
  8. Assalamu Alaikkum Ithu naan 15years vaalntha idam sahothararhale Intha Masjith kaaha neraya per poradi irukanka ewalavo sinhala & Muslim PM maarata peasi irkanka Entha oru naldavadikayum eduka mudiyatha nilama. intha mazi nadakura visayam onnum enkaluku pthusu illa valamaya oworu ramadan kum nadakura intha visayatha intha year ramadan la la Jaffna Muslim Makkaluku thelivu paduthiyathukku Jasakkallahuhaire ellaru dhua sainka ithu oru neethi kidaika insha allah Allah miha periyavan intha rajagiriya la neraya muslims irukanka every ramadan (Sri Parakumba Maha Vidyalaya) fithar senchi masha allah neraya Muslims kalanthukolluvanka athoda mukkiyama rajagiriya Powtha therar kooda kalanthu kolluvanka antha ifthar la kooda intha Masjith Pirachchinaihala eduthu solluvom. Rajagiriya Mukkiya idamaha kondu thnnudaya Velaya poorthisaiya masha allah Neraya muslims vaalranka ean (Unani & ayurvedic Campus) kooda Rajagiriya la thaan amanchi iruku ithanala Campus Students kooda Thanki vaalranka.Masjidh Place Kreedapittiya Mawatha, Obeysekarapura - Rajagiriya.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Every muslims please pray for allah and request from him on this holy ramazan month to clear our Muslim’s domestic problems which is happening on these days by others. Allah (our Rahman) will accept surely our regards , requests, hesitates on this ramazan from the true Muslims. Please kindly get a moment to think & save our Islam on these days. Other ways “Allah says” “If we don’t save the Islam (Culture) Allah will save it by the other group of the people) So we shouldn’t to be from the guys who cracking the Islam Culture please.

    ReplyDelete
  11. saboor,,,, allah is greatest,,,,, he may help for everything,,,,

    ReplyDelete
  12. whts the hell is going on his srilanka for other religions worship places? if some thing closed by law and order by the country or administration , it can be accepted. but these monks taking charge and start closing mosque and government and police no action against these monks. i dont think muslim ministers have solution for this issue at this time.mahinda muslim ministers, gota allways giving speaches and word to protect mulims and masjid, but its never happen and not going to happen, muslim community need to think some thing differntly. we cannot accept any more these masjid closing incidents by theras

    ReplyDelete

Powered by Blogger.