Header Ads



மியன்மார் விவகாரத்தை ஐ.நா. கொண்டுசெல்ல இஸ்லாமிய கூட்டமைப்பு தீர்மானம்

மியன்மார் ரொஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திற்கு முன்னர் இந்த விவகாரத்தை ஐ.நா. சபையிடம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டதாக இஹ்ஸனொக்லு தெரிவித்தார்.

மியன்மாரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் லட்சக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 1.5 பில்லியன் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளின் அமைப்பாகும்.

1 comment:

  1. இதுதான் ஒரு பெரிய மாறுதலுக்கான ஆரம்பம் என தெரிவதால், இப்போதைக்கு ஐ நா சபைக்குக் கொண்டு செல்லட்டும்.

    இன்ஷா அல்லாஹ் சிரியாவில் ஆட்சி மாறி, லிபியாவில் ஸ்திரமான ஆட்சி உதயமாகி, முர்சியின் இராணுவம் பலம் பெற்று, துருக்கி மேலும் முன்னேறிய நிலையில், அடுத்த முறை ஐ நா வுக்கு கொண்டு செல்லாமல், இவர்களே சரியான தீர்மானம் எடுத்து சுயமாக நாவடிக்கையும் எடுக்கும் உறுதியை அல்லாஹ் வழங்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.