ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக அவர் இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்களை சந்தித்த போது கேள்வியெழுப்பப்பட்டது.எனினும், அவ்வாறான தீர்மானங்கள் எதனையும் தாம் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள எத்தனிப்பது கட்சி ஆதரவாளர்களை அநாதரவாக்கும் செயற்பாடு என மல்வத்தை மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினருடன் பேசிய அஸ்கிரி மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், அவசர தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் என தயாசிரி ஜயசேகரவுக்கு அறிவுறுத்தினார். அரசியலில் ஈடுபடுவதற்கு முடியாத நிலையெற்பட்டால்? வயல் உழுமாறும், அல்லது வழமையான தொழிலான சட்டத்தரணி பணியில் ஈடுபடுமாறும் தேரர் வலியுறுத்தினார்.










1 கருத்துரைகள்:
தண்டச் சோறு தின்று பழகிவிட்ட அஸ்கிரிய புத்த ரகித்தவுக்கு, விவசாயத்தின் மதிப்பு புரியவில்லை போலும். விவசாயத்தை இழிவு படுத்த வேண்டாம். அரசியல் வாதிகளுக்கு சரியான தொழில் மாநகர சபையில் பொது மல சல கூட சுத்தீகரிப்புப் பணிதான்.
Post a Comment