July 21, 2012

மன்னார் சம்பவம் - விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் நீதவானால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Post a Comment