July 31, 2012

''முஸ்லிம்கள் இனவாதம் கதைக்கிறார்களாம்...''

வடமாகாணத்தில் 2002 ஆம் ஆண்டு சமாதானகாலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டுயுத்தம் முடிவுற்ற பின்னரும் எந்தப் பிரதேசத்திலாவது முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தமிழ் மக்களால் தடுக்கப்பட்டமைக்கான ஆதாரபூர்வ தகவல்கள் எங்காவது இதுவரைபதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரம் இருந்தால் நிருப்பிக்காலாம் என மன்னார்  பொது அமைப்புக்களின் ஒன்றியம்குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

யுத்தகாலத்தில் கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கிளிநொச்சி மாவட்டம், நாச்சிக்குடா பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. பிரபல முஸ்லிம் உணவகம் கிளிநொச்சி நகரில் இயங்கியது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் மீள் குடியேற்றப்பட்டு, வாக்காளர் பதிவுகளும் மாற்றப்பட்டு அரசினது சலுகைகளும், புத்தளத்தில் இருந்துவந்து பெற்றுச் செல்கின்றனர்.

சட்டப்படி பதிவுமாற்றம் பெற்று அனைவரும் குடியேறியுள்ளதாக பிரதேச செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவை இவ்வாறு இருக்க வவுனியாவிலும், மருதானையிலும், மட்டக்களப்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம் நாடாத்தி மீள்குடியேற அனுமதிவிடு தடுக்காதே என்பது எவ்வளவு அபாண்டமான உலகத்தையே ஏமாற்றும் சுத்தப்பொய்.

மன்னார் ஆயர் என்ன அரசஉயர் அதிகாரியா? அல்லது அரசாங்க அமைச்சரா? அரசநிர்வாகத்தில் தலையிடுவதற்கு, யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர் மதகுரு குரல் கொடுக்க மட்டுமே முடியும். எந்த அதிகாரமும் அற்ற துறவி.

புலிகளின் ஆதரவாளர்கள்தான் திட்டமிட்டு முஸ்லிம்களை விரட்ட முனைகிறார்கள் என்கிறார் அமைச்சர். அவ்வாறானால் இலங்கை அரசின் நீதவான் புலியா? பயங்கரவாதம் முற்றாக அளிக்கப்பட்டதாக அரசுபிரகடனம் செய்தது. அரசாங்கத்தின் அறிவிப்புபொய்யானதா?

நாட்டின் சனாதிபதி இந்த கூற்றில் அதிககவனம் கொள்ளவேண்டுமென தயவுடன் வேண்டுகின்றோம். அமைச்சரின் இன்றையசகாக்கள் தான் புலிகளின் தீவிர விசுவாசிகளும், புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பாளர்களும் ஆகும். அன்று புலிகளை வழி நடத்தியவர்களே இன்றுஅமைச்சரின் ஆலோசனை வழிகாட்டுனர்கள். ஆகவே யார் யாருக்கு புலி?

மன்னாரில் இலங்கை அரசியலமைப்பின்படி ஜனநாயக நிர்வாகம் நடைபெறுகிறதா? அரசாங்கம் இதைகவனிக்க வேண்டும். அமைச்சரின் நாட்டாமைப் பஞ்சாயத் தீர்ப்பே செயல்படுத்தப்படுகிறது.

தனக்கு ஒத்துழைக்கவில்லை என முன்னாள் அரசாங்க அதிபர் வெளியேற்றபட்டார். காணி அபகரிப்புக்கு இடம் கொடுக்கவில்லை என மாந்தை உதவி அரசாங்க அதிபர் மாற்றப்பட்டார். சிறப்பாக செயலாற்றிய மடுவலயக் கல்விபணிப்பாளர் பதவிபறிக்கபட்டது. தனது ஆலோசனையை மதிக்கவில்லை என கமநலசேவை உதவி ஆணையாளர் இடமாற்றப்பட்டார்.

இவர்கள் செய்தகுற்றம் என்ன? இதைவிட கீழ்நிலை அதிகாரிகள் பலர் திட்டமிட்டு பழி வாங்கப்படுகின்றனர். தனக்கு விசுவாசமாக செயலாற்றுபவரையே சகல நிர்வாகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

வழங்கபட்ட நியமனங்கள் அதிகமாக தன் சார்புடையவருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த வேலைகள் அனைத்தும் அவர் சிபார்சிலேதான் வழங்கப்படுகிறது. ஆரச அதிகாரிகள் அன்று புலிகளுக்கு பயந்ததைவிட மோசமான பயத்தில் வேலை செய்கின்றார்கள்.

பொலிஸ் நிர்வாகம் பூரணமாக அவரது கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. அவரது ஆதரவாளர்களை எப்போதும் தண்டிப்பதில்லை. வள அபகரிப்பு தாராளமாக நடை பெறுகின்றது. பலதுறைகளில் ஊழல் மோசடிகள் நடக்கின்றன. மாந்தைமேற்கு சன்னாறிலே ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியாருடைய அனுமதியில் துப்பரவாக்கப்படுகின்றது?

இத்தனை முறையற்ற விதத்தில் அரச நிர்வாகத்தை ஜனநாயக விரோதமாகப் பயன்படுத்திவரும் அமைச்சர் முஸ்லிம்களை மீள்குடியேறத் தடுப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்வது, தும்பியைக் கொண்டு யானையை விரட்ட முனையும் கதையாகும்.

இவற்றுக்கு எதிராக நியாயம் கேட்கும் ஆயர் துரோகியாகவும் புலி முத்திரையும் குத்தப்படுகின்றது. இவரது சட்ட விரோத செயற்பாடுகளை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள். அதுவும் மன்னாரில் நீதியான நிர்வாக நடைமுறையீனத்திற்கு பிரதான காரணமாகும்.

எனவே குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டதன் விளைவே இலங்கையின் நீதித்துறைமீது இத்தனை அவமானம் நேரிட்டது. தீர்ப்பில் உடன்பாடு இல்லையெனில் மேன்முறையீடு செய்யலாம். அதைவிடுத்து இலங்கையில் சட்டவாக்க ஆட்சி நடைபெறுகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 18ம் திகதி இலங்கையின் நீதித் துறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது! எரிபொருள் மானியம் கோரி ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதிவழங்க மறுக்கும் காவல்துறை சட்டத்தை நடுவீதியில் அம்பலப்படுத்த அனுமதிக்கலாமா?

மன்னாரில் தமிழ் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடனேயே வாழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களின் சுயநல வாக்கு வங்கிக்காய் வங்குரோத்து அரசியல் பேசி மன்னாரைஅவமானப்படுத்துகின்றார்கள்.

எனவே மன்னாரில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை எவரும் தடுக்கவில்லை. தடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. அர்தமில்லாமல் இனவாதம் பேசுவது மனித நாகரிகங்களுக்கு அப்பால் உள்ளவையாகும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாவட்ட மக்களையும், சர்வதேச சமூகத்தையும் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் குறிப்பாக மன்னாரிலுள்ள தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு விரோதிகளாக வெளியில் காட்ட முனைவது வேதனைக்கு உரிய வெட்கக்கேடான செயலாகும்.

பத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அரசில் அமைச்சர்களாக இருக்கும்போது இதைச் சொல்வது நியாயமா? என்பதை நிருபிக்கவேண்டும்! அமைச்சரின் பயங்கரவாதச் செயற்பாடுகள் மன்னாரில் நிறுத்தப்படுமானால் மக்கள் சகோதரத்துவமாக வாழ்வார்கள்.

இவ்வாறான செயல்களால் இலங்கை அரசிற்கே சர்வதேசரீதியாக அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது!

இவற்றை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், இங்குள்ள அரசபுலனாய்வுத் துறையினரூடாக பாதுகாப்பு செயலாளரும் அறிந்து கொள்ளவேண்டுமென தினமும் பாதிக்கப்படும் மன்னார் மக்கள் சார்பாகநீதிக்காகவும் நியாயத்திற்காகவும் நல்லாட்சிக்காகவும் ஜனநாயக மரபுகளுக்காகவும் இலங்கைஅரசின் நல்லாட்சிநிகழ்ந்து இன ஐக்கியத்துடன் மொழிகடந்து, சகோதரத்துவமாக வாழ வேண்டுமென எதிர்பார்த்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

3 கருத்துரைகள்:

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியமே ஆயர் நீதி கேட்கிறார் என்றால் அமைச்சர் அநீதி செய்கிறார் என்றல்லவா அர்த்தம் . முதலில் உப்புக்குளம் மீன் வாதியை திருப்பி கையளிக்கவும். பிறகு யார் நீதி செய்கிறார்கள் யார் அநீதி செய்கிறார்கள் என்று பார்க்கலாம். 1930 ஆம் ஆண்டு முதல் பொய் சொல்லிச் சொல்லியே தமிழினத்தின் அப்பாவிகளை கொன்றவர்கள் உங்களைப் போன்ற பொது அமைப்புக்கள். புலிகள் மக்களை முல்லிவைக்காளில் பணயக் கைதிகளாக வைத்திருந்த பொது எங்கே போனது உங்கள் ஒன்றியம். அன்று புலிகளுக்கு ஊதிய நீங்கள் இன்று புலி ஏற்றிய விசக் கருத்துக்களுடன் வாழ்கிறீர்கள். முஸ்லிம்களை வாழ விடமாட்டேன் என்கிறீர்கள்.
முஸ்லிம்களின் வீடுகளையும் பாடசாலைகளையும் உடைத்து சேதப் படுத்திய செயலே முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் செயல்கள் ஆகி விட்டனவே. அநீதிபதிக்கும் நீதி விளங்க மாட்டேன் என்கிறது. சுடச் சொல்லும் அதிகாரம் அற்ற அவர் கத்திய கத்தே நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்பதைக் காட்ட வில்லையா? ஆயரும் எதிராக நிற்கிறார். நீங்களும் அவர்களையே ஆதரிக்கிறீர்கள். வாட் இஸ் திஸ்.? உங்களில் யாரும் நீதியாக பேசக் கூடியவர்கள் இல்லையா?

moolye muttru mulutha kettu ini keduvathatku ondum illa enda kattamthaan thamil kooththamaippu muslim kaankirasa kilakku maahaana aatchippankukku alaikkiraanka vilankallaya thanbi. senthu aatch amaicha pinnar kilakku maahaana muslimkalum ippidiththaan aarpattam edukka vendi varum neethi manraththukku munnaala.

மன்னார் முஸ்லிம்களுடன் தமிழர்கள் நலுறவாடியதன் சான்றுதான் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் செயட்பாடுகளை போற்றி புகழ்ந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்களின் அத்தனை அசையும் அசையா சொத்துக்களையும் ஒட்டு மொத்த ஊறுமே கபளீரம் செய்து பங்கு போட்டதாகும்???

கேவலம் முஸ்லிம்களுடன் உறவு இருந்திருந்தால் இப்படி அந்த மக்கள் அல்லல் பட்டு கட்டி காத சொத்துகளை எல்லாம் ஆண்டு அனுபவிக்க இவர்களுக்கு மனம் வருமா என்ன???

அசையும் அசையா சொத்துகள் மட்டுமா வீடுகளில் உள்ள கூரைகள்,ஓடுகள்,நிலைகள்,யன்னல்கள் கதவுகள் ஏன் வீடுகளில் இருந்த மரங்களையும் வெட்டி கொத்தி அல்லவா தங்கள் கைவரிசையை காட்டி மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்றதிட்கு ஆதரவளித்து வழிமேல் விழிவைத்து அந்த நாளை காத்திருந்தனர்???


உறவென்றால் என்னவென்று தெறியுமா இவர்களுக்கு ஒருத்தர் கூலி வேலைக்கி ஆளை கூட்டி வந்தார் அந்த கூலியால் வேலை முடிந்ததும் கூலியை மறந்து அவசரமாக எங்கோ சென்று விட்டார் கூலியாலுக்குறிய கூலியை கொடுக்க முடியவில்லையே என்ற கவளையில் அந்த பணி கொடுத மனிதர் அந்த கூலி தொகைக்கு ஆட்டை வாங்கினார் அது பல வருடங்களில் பட்டியாக பெருகி விட்டது பல வருடங்களின் பின் அந்த பணி கொடுத்தவரை சந்திக்கும் கூலியால் தன் கூலியைகேட்கிறார்

அவர் அந்த் ஆட்டு பட்டியையே கொடுத்து விடுக்கிறார் இது தான் பிறரின் உரிமையை சொத்தை காக்கும் வழி முறை??? ஆனால் மன்னாரில் மக்களை குடியேற தமிழர்களாகிய நாங்கள் தடை இல்லை என்று சொல்பவர்கள் மக்கள் குடியேறும் நிலைக்கு எதனை விட்டு வைதிருக்கின்றனர்??? அப்படி முஸ்லிம்களுக்கு உரித்தான எல்லாவற்றையும் கொடுத்திருந்தால் ஏன் மீனவர்கள் ஆர்பாட்டம் பன்ன போகின்றனர் முழு குடும்பங்களும் சேர்ந்த்தாக???

ஆயர் துறவியனில் ஏன் ஆலயத்தில் ஜெபம் பன்னுவதுடன் மட்டும் நின்றிடாது முஸ்லிம்கள் அரசகாணிகளில் அவர்களின் உரிமைக்குஅ அமைய குடியேறுவதட்கு எதிராக ஜனாதிபதி முதல் தூரகங்கள் உட்பட தமிழ் ஊடகங்கள் எல்லாவற்றிட்கும் மடல் மடலாய் வரையவேண்டும்??? அந்த மீனவர்கள் செய்த ஆர்பாட்ட வேலை நீதிபதியையும் வக்கீல்களையும் உசுபேத்த ஏன் அவர் அந்த இடதிட்கு வந்திருந்தார் ஏன் நீதிபதியுடனும் வக்கில்கலுடனும் உரையாடி கொண்டிருந்தார் அந்த நேரம் இவை தெளிவாக ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றதே

ரிஷாத் தீர்பில் தலை இட்டதாக குற்ற சாடும் அதே குற்ற சாட்டை மன்னார் ஆயர் நீதிபதியுடன் உரையாடி தீர்பை மாற்றி எழுத வட்புறுத்தினார் என்று ஏன் குற்றம் சாட்ட முடியாது மன்னார் ஆயர் தன் உத்தியோக ரீதியான தொலைபேசியிலும் தனிபட்ட தொலைபேசியிலும் சம்பவம் நடந்த அன்றும் அதட்கு முன்னரும் பல தடவை நீதிபதிக்கும் வக்கீல்கள் அரச அதிகாரிகளுக்கும் ஏன் அதிகமான கோல் எடுத்திறுக்கிறார் அவரது தொலைபேசி விபரம் இதட்கு சாட்சி பகர்கிறதே???


மீள் குடியேற்றதிட்கு தடை இல்லையெனில் மன்னாரில் உள்ள அரச காணிகள் முஸ்லிம்களின் சன தொகைக்கு அமைய பங்கிடபடுவதை ஏன் தமிழ் எம்பிக்கள் காணி ஆக்கிரமிப்பாக சித்தரிக்கனும்??? மன்னாரிலே முஸ்லிம்கள் வெளியேற முதல் 30% இருந்தனர் இன்று அவர்கள் முழு மன்னார் சன தொகையில் 40% மேல் இருக்கின்றனர் எனவே குடியேற்றதிட்கு தடை இல்லையெனில் 40% அரச காணிகள் முஸ்லிம்களுக்கு ஒதுக்க படுகையில் ஏன் கொக்கரிக்கிறீர்கள்?? குடியேற்றதிட்கு த்டை இல்லாததால்தானா அரச அதிகாரிகள் கடந்த பது வருடங்களில் மீள்குடியேற்ற ஒதுகீடுகளில் 40% முஸ்லிம்களுக்கு ஒதுக்காமல் தமிழர்களின் மீள்குடியேற்றதிட்கே 90% நிதிகளை பயன் படுத்தினர்???


முஸ்லிம்கள் நல் உறவுடன் தமிழர்களுடன் வாழ்வதாக பொய் உரைத்து தீராத பகைகளையும் ஜென்ம விரோத துரோகங்களையும் பிராயசித்தமே இல்லாமல் மறைக்க முனையாதீர்கள் ஏனெனில் நீங்கள் நீதமாக நடக்காதவரை உங்களுடன் யாறும் நீதமாக நடந்துகொள்ளவே மாட்டர் புலிகளின் அழிவு முஸ்லிம்களுக்கு செய்த அநியாயதினாலேதான் ஆரம்பமாகி முடிந்தது இன்று புது வேஷம் போட்டிருக்கும் புலி ஆதரவு சக்திகளினதும் முடிவு நிச்சயம் புலிகளின் அழிவை போன்றே ஏட்படுவது நிச்சயம்

Post a Comment