அப்துல்சலாம் யாசீம்
திருடனின் தாயிடம் திருடனைப்பற்றி சாத்திரம் கேட்பது போல இவ்வரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஐpத் பிரேமதாச கிண்ணியாவில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரகள் இரண்டு பேரும் இவ்வரசாங்கத்தின் அமைச்சர்ககளே !இவர்களிடமே ஐனாதிபதி இஸட் புள்ளி குறித்து விபரத்தை கோருகிரார் இது யாருக்கு உரித்தான கேள்வி என கேள்வி எழுப்பினார்.
தனது தந்தை ஆர்.பிரேமதாசவின் ஆட்சியின் போது இந்ந நாட்டிலுள்ள சகல மதங்களுக்கும் தனித்தனியான அமைச்சுக்களை உருவாக்கி தங்களுடைய மதப்பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் உரிமையை வழங்கியிருந்தார்.
ஆனால் இன்று எல்லா மதங்களையும் ஒருவரின் கிழ் கொண்டு வந்து சிறுபான்மை மக்களது மத சுதந்திரத்தை இல்லாமல் செய்வதற்கு வழி வகுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எமது கைக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது தற்போது பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை பள்ளியை நிர்மானிக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன் என்பதை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கூறிக்கொல்ல விரும்புகின்றேன்.
எனது தந்தை அநேகமான விடயங்களை கற்றுத்தந்திருக்கின்றார். முஸ்லிம்களுடைய சுபஹ த்தொழுகைக்கான அதான் ஒழியைக்கேட்டு தான் அதிகாலையில் எழும்ப பழகிக்கொண்டதாக சொல்லியிருக்கின்றார்.
அரசியலிலே எனது இலக்கு என்ன என கேட்கின்றார்கள். ஒரு பலமான அமைச்சராவதா அல்லது பிரதமராவதா? நாட்டின் நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதியாவதா? ஆனால் எனது இலக்கு ஒன்றே ஒன்றாகும்.
கிண்ணியாவிலிருந்து மூதுர் செல்லும் வழியில் என்னைப்பார்த்து நீங்கள் ஓன்று சொல்ல வேண்டும் இந்ந நாட்டிலே பௌத்தன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் சேவையாற்றி ஒரு குடிமகன் போகிறான் என்று என்னைப்பார்த்து சொல்ல வேண்டும் இதுவே எனது ஒரே ஆசை. இதுவே ஒரே இலக்கு எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வேட்பாளர்களான எம்.ஏ.மஹ்ருப், .நசுறுல்லாஹ், இம்றான் மஹ்ருப் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை வேட்பாளர்கள் பங்கு பற்றினர.
















6 கருத்துரைகள்:
இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மக்களின் மத வழிபாடுகள் மற்றும் மதவழிபாட்டு தளங்களை இரண்டாம் பட்சமாக்கும் புனித பூமி சட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது எனும் உண்மையை மறந்து விட்டார்!!!!!!?
எல்லாம் சரிதான் ”முஸ்லிம்களுக்கு கூறிக்கொல்ல விரும்புகின்றேன்” என்று சொன்னது சற்று பயமாக இருக்கின்றது.
தலைகள் மாறினாலும் ஒரு போதும் கொள்ளைகள் மாறப் போவதில்லை
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
Then late Premadasa who created kolakoti,underworld,Arms for LTTE atrocities then why did not wake up for Bogahahadiya Brit morning 4 am
rashad புனிதபூமி சட்டம் ஒன்றும் பௌத்தர்களுக்கான சட்டம் கிடையாது எல்லா மதத்தவருக்குமான சட்டம்.
அச்சட்டம் கொண்டு வரபட்டது நல்ல நோக்கத்திர்க்காக இருந்தாலும் தற்போதையா பேரின வாத அரசியல்வாதிகளால் பௌத்தர்களுக்கும்,கிரிஸ்தவர்களுக்குமே பெரிதும் துணை நிக்கிறது.
முஸ்லிம் ஓட்டுகளால் வெற்றிபெற்று இன்று பாராளுமன்ற மந்திரிகளாக இருக்கும் முஸ்லிம் மந்திரிகள் பேரினவாத சக்திகளிடம் கூனி குறுகி நின்று தம்புள்ள பள்ளியை பற்றி வாயை திறக்காமல் இருக்கும் இக்காலகட்டத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்மான பணிகளை நீங்களே மேற்கொள்வீர்கள் என்று நீங்கள் பொய்தான் சொல்லி இருந்தாலும் உங்களை எம் சமூகம் பாராட்ட கடமை பட்டுள்ளது.
நீங்கள் கூறியது உணமையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் ஆனால் நீங்கள் பேசிய இப்பேச்சை எதிரணியினர் பேரினவாதிகளிடம் போட்டு காண்பித்து அடுத்த முறை உங்கள் சீட்டை கிழிப்பது மட்டும் தின்னம்.
Post a Comment