July 29, 2012

''மன்னார் விவகாரம்'' - இந்த வினாக்களுக்கு விடை கிட்டுமா...?

 
இனாமுல்லாஹ்
இந்த விவகாரம் பல கோணங்களில் கவனாமாக பக்கச் சார்பின்றி பரிசீலிக்கப் பட வேண்டும் :
(1) உப்புக்குள மீனவர் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்ற பொழுது மன்னார் நீதிபதி ஆர்ப்பாட்டத்தைக் கலைக்குமாரும் ஆர்ப்பாட்டக் காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறும் உத்தரவிட்டார?
அவ்வாறெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் நீதிபதிக்கெதிராக ஏன் இதுவரை போலீசில் முறைப்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை ?
மன்னார் நீதிபதியின் தீர்ப்புகளில் திருப்தியில்லாவிட்டால் மேன் முறையீடு செய்வது பற்றி ஆலோசிக்கப் பட்டதா? .
(2) உப்புக்குள மீனவர் ஆர்ப்பாட்டத்திற்கும் குறிப்பாக நீதிமன்றத்தின் மீதான தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக மன்னார் மாவட்ட உலமாக்கள் அமைச்சர் ரிஷாதுக்கும் அங்கு கலகத்திற்கும் தொடர்பில்லை என அறிக்கையும் விடப்பட்டுள்ளது.
அப்படியாயின் தன மீது ஆதாரமற்ற வீண் பழி சுமத்திய நீதிபதிக்கெதிராக அமைச்சர் ரிஷாத் ஏன் முறையீடு செய்யவில்லை?
(3) அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிபதி சுமத்திய குற்றச்சாட்டு அமைச்சர் ரிஷாத் பதீயுதீனால் திட்ட வட்டமாக மறுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதி செய்துள்ள முறைப்பாடு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பொன்று ரிஷாத் பதியுதீனுக்கெதிராக அல்லது சார்பாக பெறப்படு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ரிஷாத் பதியுதீனை குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்வது நியாயமான போராட்டமாகுமா?
அவ்வாறு நிரூபிக்கப்படாமல் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் என ஊடகங்களிலும், அறிக்கைகளிலும் பதாதைகளிலும் பிரபல்யப் படுத்தப் படுவது எந்த வகையில் நியாயமாகும்.?
(4) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சட்ட ரீதியாக அமைச்சருக்கு ஏதேனும் நன்மைகள் இருக்கின்றனவா.?
(5) செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி ( கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடப்பதற்கு மூன்று நாளைக்கு முன்னர்) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருக்கின்ற உத்தரவு எத்தகையா பின் விளைவுகளைக் கொண்டிருக்கும்?
(6) மன்னருக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிந்திருந்தாலும் அவரால் தற்போதைய சூழ் நிலையில் அரசியலைத் தவிர வேறு எதையாவது செய்ய முடியுமா? குறைந்த பட்சம் தமிழ் முஸ்லிம் முறுகல் நிலையை தவிப்பதற்காக வழமை போல தமிழர் தேசியக் கூட்டணி சம்பந்தன் ஐயாவோடு ஆவது கதைப்பாரா.!
(7) நீதித்துறைக்கு பாதகமற்ற விதத்தில் மன்னர் முஸ்லிம்களது விவகாரம் குறித்து அல்லது மீள் குடியேற்றம் குறித்து ஜனாதிபதி அவர்களையோ அல்லது சம்பத்தப் பட்ட அமைச்சர்களையோ சந்தித்து நீதி அமைச்சரால் எதையாவது கதைத்து சாதிக்க முடியுமா?
இங்கு இன்னும் சில விஷயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் எல்லாக் கட்சிக் காரர்களும் இருக்கின்றார்கள் அனால் ஆளும் கட்சி எதிர்க் கட்சி வேறுபாடில்லாது எல்லோரும் குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அமைச்சருக்கேதிரக ஒன்றுபட்டு போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
நானும் ஒரு சட்டத்தரணியே நீதித் துறையின் சுயாதிபத்தியத்தில் (வழமை போல ) எனது அரசு தலையிடப் போவதில்லை என ஜனாதிபதியவர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்.!
பிரபல முஸ்லிம் சட்டத்தரணிகளும் வாய்மூடி மௌனிகளாக இருக்குமளவு தலைக்கு மேலால் வெள்ளம் பாய்ந்திருக்கிறது.

ஒன்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும். வட புல முஸ்லிம்களின் உரிமைக்குரலாக அமைச்சர் ரிஷாத் பார்க்கப்படுவதும், அரசியல் ரீதியாக தெற்கிலும் கிழக்கிலும் அமைதி வழிப் போராட்டம் நடத்துவதும் நீதி மன்ற நடவடிக்கைகளில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அதே நேரம் முற்று முழுதான வட புல முஸ்லிம்களது விவகாரம் இந்த நீதித்துறையுடன் கூடிய சர்ச்சைகளோடு (நியாயங்கள் இருந்த போதும்) பிணைக்கப்படுவதும் இரண்டு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக பிரபல்யம் செய்யப்படுவதும் நிச்சயமாக சாதகமான விளைவுகளை தரப் போவதில்லை.
எது எப்படியோ பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று இடம் பெற வேண்டும் என்பதில் நீதித் துறை சார்ந்தவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள், அமைச்சரும் தான் நிரபராதி என்பதில் உறுதியாக் இருக்கின்றார்...
இதற்கு மக்கள் மன்றம் தீர்ப்புக் கூற முடியாது, நீதி மன்றம் மாத்திரமே தீர்ப்புக் கூற வேண்டும்!
இந்த பதிவுக்கான படத்தை நான் தெரிவு செய்யும் பொழுது அநீதி ஒழிக்கப்பட்டு இரண்டு சமூகங்களுக்கிடையிலும் சமாதான சகவாழ்வு கட்டி எழுப்பப் பட வேண்டும் , இந்த உடனடி நிகழ்வுகள் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நிரந்தர முறுகலாக மாறி விடக்கூடாது என்பதற்காகவே நீதி தராசின் இரு தட்டிலும் சமாதானப் புறாக்களை கொண்ட படத்தை தெரிவு செய்தேன். நீதி நியாயம் நிலை நிறுத்தப் படாமல் நிரந்தர சமாதான சக வாழ்வு ஒரு போதும் எய்தப்பட முடியாது

3 கருத்துரைகள்:

unkaludaya machchan hakeem oru sattathaarani muslim samoohaththin thalaivar athatku mela neethi amaichcharum kooda appadi irunthum sattaththaranikal sanka thalaivar vijedasa rajapakkusa.enthavitha adippadyum illalaml minister riattukku ethira nadavadikkai edukka manru senrullar.unka machchan minister hakeem intha nadavadikkaikku
vijedasavudan udanpaadu illai enral avarathu arikkayai onrum innum kaana villaye...? yen oomayaaka irukkinrar sammathaththitku arikuriya..? addalaichenai abdussalam lowyer mattum 29-07-2012 navamaiyil mannar makkalukkahavum minister risad oru muslim enpathatkaahavum oru anuthaapa arikkayai veliyittullaar.

இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களுக்கே அதிக தகுதிகள் உள்ளன
1.முஸ்லிம்களின் தலைவன் என்று சொல்லிக்கொள்கிறார்
2.அவர் ஒரு சட்டத்தரணி
3.மிக முக்கியமான் ஒன்று அவர் தான் நாட்டின் நீதி அமைச்சர்
இப்படி பல தகுதிகளுடன் இருக்கும் இவர் வெறுமனே மன்னார் மக்களை சென்று சந்தித்தால் பிரச்சனை முடிந்து விடுமா? ..... இல்லை ரிசாத் தனது கட்சி இல்லை என்பதனால் மெளனமாக இருக்கின்றாரா? தயவு செய்து கட்சி பேதங்களை மறந்து நீதி அமைச்சர் இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.... தனது சுய நலத்துக்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக ஆக்கி விடவேண்டாம் இந்த உதவியை ஆவது செய்து மறைந்த தலைவர் விட்டுச்சென்ற பனியை தொடரவும்......

மஸீஹுதீன் இனாலுல்லா அவர்களே தெரு நாயை போல் சுட்டு தள்ளுங்கள் என்ற நீதிபதியின் உத்தரவுகெதிராக போலிஸ்ஸில் முறைபாடு செய்யமுடியும் அப்படி நீங்கள் ஏன் முறைபாட்டை செய்யவில்லை என ஏன் சம்பவ இடதிட்கு சென்று நீங்கள் பாதிக்கபட்டவர்களுக்கு ஆலோசனை கூறவில்லை தமிழ் முஸ்லிம் உறவை பற்றி கவளைபடுகிறீர்களே இந்த நாட்டில்ன் வரலாற்றிலில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் நல் உறவாடி முஸ்லிம்களுக்கு செய்த நலவையும் சேவையைம் உதவியையும் நாபகபடுத்தி (அப்படி இருந்தால்) தமிழ் முஸ்லிம் உறவை பற்றி கதைக முDஇயுமா உங்களால் எங்களை பொறுத்தவரை தமிழர்களுடன் உறவுக்கு முதல் தீராத பகைக்கு முடிவு வேண்டும் அதட்கு நேர்மையான அனுகு முறை வசியம் பகை தீர்ந்தாலே உறவு சாத்தியம் பகை தீர வழி உரிமைக்கு தடையாக இருக்கும் வரைஒற்றுமை அது காகிததில்தான் எழுத முடியும்

Post a Comment