Header Ads



யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய நூலகம் திறப்பு


பா.சிகான்

யாழ் சோனகத்தெரு முஸ்லீம் கல்லூரி வீதியில் நிதாஉல் புர்கான் இஸ்லாமிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

அதிபர் ஏ.சி.ஏ.ஜெலில் தலைமையில் மாணவன் அப்துல்லாவின் கிராஅத்தோடு நிகழ்வு ஆரம்பமானது. கல்வி மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி தலைமையுரையில் குறிப்பிடப்பட்டது.

இதன்போது உரையாற்றிய மௌலவி எம்.ஏ பைஸர் மதனி, நூலக உருவாக்கத்தின் அவசியம், அதன் நோக்கம், எதிர்கால செயற்பாடுகள் குறித்து எடுத்து கூறியதோடு ஒரு முஃமினின் தொலைந்து போன சொத்து அறிவு அதனை கண்ட இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்' என்ற நபி மொழிக்கமைய தனது உரையை நிகழ்த்தினார்.

இந்நூலகத்தின் விசேட அம்சமாக இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்கள் அடங்கிய புத்தகங்களும் இறுவெட்டுக்களும் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் உலமாக்கள் புத்திஜீவிகள் சமூகசேவையாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

2 comments:

  1. மகிழ்ச்சியான ஒரு செய்தி, மாஷா அல்லாஹ்.
    யாழ்ப்பாணத்தில் குடியேறி இருப்பவர்கள் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நூல்நிலையத்தின் பயன்கள் சென்றடைய வேண்டும்.

    மக்கள் மார்க்கத்தின் தெளிவான அறிவை பெற்றுக் கொண்டால், எத்தனையோ பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமைந்து விடுவதுடன், மறுமையில் மகத்தான வெற்றியையும் பெற்றுத் தரும்.

    யாழ்ப்பாணத்திற்கு வெளியில் வாழ்பவர்கள் (உள்நாடு, வெளிநாடு), சதகதுல் ஜாரியாவை நாடி, இந்நூலகத்திட்கு எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும் என தெரிந்துகொள்ள முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.