July 30, 2012

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை நடைமுறைப்படுத்து - தக்பீர் முழக்கத்துடன் தீர்மானம்

ஹப்றத்

தேசிய காங்கிரஸின் மாகாண சபை வேட்பாளர்கள் அறிமுகமும் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்களின் சம்மேளத்தின் தீர்மாணங்களை மக்களுக்கு அறிவிக்கும் (பைஅத்); சத்தியபிரமான பிரகடனமும் இப்தார் நிகழ்வும் நேற்று (29) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துப்பள்ளிவாசல்களினதும் தலைவர்கள் உலமாக்கள் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா ஸக்கி உட்பட பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன்

அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலிருந்தும் கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தேசிய காங்கிரஸூம் அனைத்துப்பள்ளிவாசல்களின் சம்மேளமும் இணைந்த மூன்று பிரகடனங்களை நிறைவேற்றியமை விNஷட அம்சமாகும்.

1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நான்கு வெட்பாளர்களுக்கும் தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்டுள்ள வலய ஒழுங்குகளுக்கு அமைவாக இதய சுத்தியுடன் வாக்களித்தல்.

2. வடக்கு மாவட்ட முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்சபையில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

3. மீண்டும் வடக்கோடு கிழக்கை இணைக்க மேற்கொள்ளப்படும் சதிவேலையிலிருந்து முஸ்லீம் சமுதாயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற பிரகடனம் தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதுடன் துஆப் பிராத்தனையும் நடைபெற்றது.




4 கருத்துரைகள்:

தக்பீர் முழங்கி பிரகடனம் செய்தார்களா?, பள்ளிவாயலில் தினமும் ஐவேளை அல்லாஹ்வை தலைவணங்க தக்பீருடன் அதான் முழங்குகின்றதல்லவா,அங்கே மேடையில் வீற்றிருக்கும் தலைவரானவர் பள்ளிக்குள் கூட்டம் நடாத்திவிட்டு அந்தப் பள்ளியிலேயே அதான் சொன்னதும் ஜமாஅத் தொழுகைக்கு நில்லாமல் ஓட்டம் எடும்பதும் ஏன் என்று கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்.
தேர்தல் வந்தால்தான் தக்பீரும் முழக்கமும். இல்லாவிட்டால் பாட்டுக் கச்சேரியும், கூட்டமும் குஞ்சரியும் தான்.
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்????

ஆக மொத்தத்தில் தமிழ் நாட்டு பிணந்தின்னி அரசியல் வாதிகளுக்கு எப்படி இலங்கைத் தமிழர்களோ உங்களுக்கு நாங்கள் இப்போது தேவைப் படுகிறது.

athawulla pls islathai waithu arasiyal nadham podathe, innum innum un un muttal thanagalukku adimiyaaha akkaraipatru makkal thayaarillai, unnaaal mudiyumaain unathu arikkayia mahinda or gota or basil idam sollipaar, summa sanaglai pallikku kooppittu arasiyal naadaham pannamal, mudiyumaain seyalil konduwara mahindawidam pahirangamaaha sawaal vittu un arikkayai samarpi, nee ammbilai ennu nirufi, summa ponnunga arasiyal innum pannathey

nawasdeen சரியாகச் சொன்னீர்கள்.

இவ்வளவு நாளும் இவர் எந்த லோகத்தில் இருந்தார்?


நிச்சையமாக இவர் மீண்டும் நம்மைப் பற்றிப் பேசுவார்,
>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<
>>>>>>>>>>>>>>>>



அடுத்த தேர்தல் வரும் பொழுது மட்டும்....

Post a Comment