July 30, 2012

முல்லைத்தீவில் புதிதாக 500 வீடுகள் - முஸ்லிம்களுக்கு பாரபட்சம்

(முல்லைத்தீவில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் தற்போது மீளக்குடியேறி வருகின்றனர். 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அங்கு பல நூறு குடும்பங்கள் வாழந்து வந்தன. இருந்தபோதும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முல்லைத்திவு முஸ்லிம்கள் ''பழைய அகதிகள்'' என்று கூறி அவர்களை முற்றாக புறக்கணித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

அஷ்ரப் ஏ.சமத்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு எல்லைக்கிராமமான வெலிஓயா மக்களின் மீள் வீடமைப்புத்திட்டத்திற்காக புதிதாக 500 வீடுகள் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் மேலும் 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐனாதிபதி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீள் குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்தார். இத்திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக நடைமுறைப்பட்டு வருகின்றது.

இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் குணரத்தின வீரக்கோன் ஆகியோர் இணைந்து வெலிஓயா பிரதேசததில் உள்ள  கலம்புர,கல்யாணபுர 1 கல்யாணபுர 11 கஜபாகுபுர, ஆகிய பிரதேசங்களில்  புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்தனர். 

இவ் வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 31ம் திகதிக்கு முன் நிர்மாணப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும். இவ் வீடமைப்புத்திட்டத்தினை முல்லைத்திவு மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேற்கொள்கின்றது. இத்திட்த்திற்கு மீள்குடியேற்ற அதிகார சபை இலங்கை மகாவலி அதிகார சபை அனுராதபுர மாவட்ட அலுவலகம் போன்ற அரச அலுவலகங்கள் அனுசரனையோடு இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இத்திட்டத்திற்காக பாதை, குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்திற்காக மேலதிகமாக 150 மில்லியன் ருபாவும் வீடமைப்பு அமைச்சினால்  ஒதுக்கப்பட்டுள்ளது.  இப் பிரதேசத்தில்  மேலதிகமாகவும் 2000 வீடுகள் நிர்மாணிப்பதற்கும் நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்தார்.






2 கருத்துரைகள்:

வீடமைப்புத் திட்டங்களில் முஸ்லிம்களை புறக்கணிப்பது இந்நாட்டில் வழமையான ஒன்றாகிவிட்டது.

முஸ்லிம் அமைச்சர்கள், ஜனாதிபதியின் முஸ்லிம் ஆலோசகர்கள் ஏதாவது செய்ய முடியாதா?

இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஏன் துணிடகூடாது??? நாட்டில் சுதந்திரமாக ஏனைய மக்களைபோல் அரச உதவிகளை பெற்று தானும் வாழ்வது அடிப்படை உரிமை இல்லையா முல்லைதீவு மக்களது?

Post a Comment