Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக 10 இணையங்கள் - நடவடிக்கை எடுப்பேன் என மஹிந்த உறுதி


TN

அண்மைக்காலமாக 10 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் மிக மோசமான முறையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கொண்டு வந்தார். இந்த இணையத்தளங்களில் சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய வகையில் விடயங்கள் உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் மஹரகம அரபுக் கல்லூரியில் எற்பாடு செய்யப்பட்டிருந்த தலைமைத்துவ கருத்தரங்கிற்கான அழைப்பிதழை ஜிஹாத் பயிற்சி கருத்தரங்கு என்று மாற்றி இணையத்தளங்களில் போடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியதாகவும் இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் யுத்தத்தினால் ஏற்பட்ட சமாதானம் சீர்குலைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் இத்தகைய போலி இணையத்தளங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். அப்போது சிலர் எங்களை சர்வாதிகாரிகள் என்று குற்றம் காணவும் முடியுமென்றும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

3 comments:

  1. கிழக்கு மாகாணத் தேர்தலுடன் வாக்குறுதிகள் காற்றில் பறக்காமல் இருக்கட்டும்.

    ReplyDelete
  2. இத்தகைய நடவடிக்கையை உண்மையிலேயே எடுத்தல், அது முழு நாட்டுக்கும் நல்லது. இணையத் தளங்கள் மட்டுமல்ல, இத்தகைய Facebook பக்கங்களுக்கும் இதே நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.

    N.M. அமீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

    ReplyDelete
  3. ippo ivar kaattum muslim akkari just for east muslims votes, but not in real. he only promises but there will be no action, ivare pinnaala poi anda website itku pohora poduwaaru. payangara killadi politician

    ReplyDelete

Powered by Blogger.