May 19, 2012

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி - இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கை..!!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குக் கிரிக்கெட் பயணம் வரவுள்ள பாகிஸ்தான் அணி 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 3 டெஸ்ற் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளது. முதலாவது போட்டியாக டுவென்டி டுவென்டி போட்டி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கையில் சிங்கள கடும்போக்காளர்களின் பார்வை முஸ்லிம் சமூகத்தை நோக்கி திரும்பியிருக்கையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயம் நடைபெறவுள்ளது.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களில் ஒருசாரார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்ச, கொழும்பு மாவட்ட ஆளும் கட்சி எம்.பி. திலங்க சுமதிபால ஆகியோரும் இலங்கை முஸ்லிம்களில் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கையில் பிறந்து, வளர்ந்து, இலவச கல்விகற்று, இலவச மருத்துவ உதவிகளும் பெறுவதுடன், முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக சில சிறப்பு சலுகைகளையும் பெற்றுவரும் முஸ்லிம்களாகிய நாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பாகிஸ்தான் அணியிலுள்ளவர்கள் முஸ்லிம்கள், இலங்கை அணியிலுள்ளவர்கள் சிங்களவர்கள். எனவே முஸ்லிம்களாகிய நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்படுகிறோம் என்ற வாதத்தை நாம் ஒருபோதும் அங்கீகரிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ கூடாது.

பாகிஸ்தான் அணி இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுடன் விளையாடும் போது பாகிஸ்தான் அணிக்கு நாம் ஆதரவளிப்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமாக இருக்கலாம்.

இவ்வாறானதொரு நிலையில் சிங்கள கடும்போக்காளர்கள் முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிராயங்களை தம்மிடையே வளர்த்துக்கொள்ள பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிக்கும் நமது இலங்கை முஸ்லிம்களின் செயற்பாடுகள் எவ்வகையிலும் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

இலங்கையுடன் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் பகிரங்கமாக வெடி கொளுத்துவது, மைதானத்தில் பாகிஸ்தான் கொடியுடன் வலம் வருவது போன்ற நிகழ்வுகள் இன்னும்இன்னும் சிங்கள கடும்போக்காளர்களின் ஆத்திரத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அப்பாவி சிங்களவர்கள் கூட, முஸ்லிம்களுக்கு எதிராக நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு நாம் எச்சந்தர்ப்பத்திலும் வழியமைத்துவிடக்கூடாது.

பேஸ்புக்கில் பாகிஸ்தான் அணியை வாழ்த்தி நமது முஸ்லிம் இளைஞர்கள், சகோதரிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சிங்கள நண்பர்களை பதில் பதிவுகளை மேற்கொள்ளும் போதும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளிலேயே பதிலளிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் அவமானமாக அமைந்துவிடுகிறது.

எனவே எமது இந்த தவறான செயற்பாடுகள், நடத்தைகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாகிஸ்தான் முஸ்லிம் கிரிக்கெட் அணி என்ற உணர்வுடன் சிந்திப்பதை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு, எமது நாடு இலங்கை, எமது இலங்கை வீரர்கள் என்று சிந்திப்போம். முஸ்லிம் சமூகத்தை எவருக்கும் காட்டிக்கொடுப்பதை நிறுத்துவோம், எமது தனிநபர் செயற்பாடுகள் எந்தவகையிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.

ஆகமொத்தத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக பகிரங்கமாக செயற்படுவதையும், பேஸ்புக்கில் பகிரங்கமாக அவர்களை போற்றுவதையும் நிறுத்துவோம்..!!

34 கருத்துரைகள்:

Education. and medical services duty of unesco WHO UN protocol. and world help and our tax using for all Sri lankan so please keep off cricket and more quan and hadees. And prayer and duaaa no Pakistan or sinhastaan

காலத்திற்கு உகந்த நல்ல செய்தி. இது பள்ளிவாசல் கொத்பாக்களிலும் வலியுறுத்தப்பட்டால் இன்னும் நல்லது. இந்த செய்தியை சமூகத்தின் அனைத்து மட்டங்களிற்கும் கொண்டு செல்வதன் ஊடாகவே எதிர்பார்க்கும் விளைவை அடைய முடியும்.

i am appreciate.your opinion and advise all muslim should be think regarding above massage.

GREAT NEWS...WE SHOULD SUPPORT FIRST OUR COUNTRY...MY DEAR BROTHERS AND SISTERS IF U SUPPORTING TO OUR MOTHER LAND ITS ALSO KING OF SUNNAH....

I'm agree with you bro. Because our beloved prophet Muhammed Ibn Abdullah (PBUH) said that "حب الوطن من الإيمان" - (Patriotism) Love the Country / Nation is part of faith

முஸ்லிம்களின் நலன் கருதி அனைவரும் அவதானமாக இருக்கவேண்டிய தருணம்.

Our Identity=Muslim+Sri Lanka (Not Any Country)...

Great news for high time...

Jazakallah..

Well Said ! it's really insane supporting to other nation rather supporting to our Cricket Legends, Let's do this, and show 'em that we LOVE our country as they do, PROUD SRI LANKAN...!!!

Well Said ! it's really insane supporting to other nation rather supporting to our Cricket Legends, Let's do this, and show 'em that we LOVE our country as they do, PROUD SRI LANKAN...!!!

நாம் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கச் சொல்லித்தானே நபிகள்(ஸல்) கூறியுள்ளார்கள்.முதலில் முஸ்லீமாகவும்,அடுத்து சிறிலங்கனாகவும் ,எந்த ஊரில் பிறந்த வளர்ந்தோமோ அந்த ஊரவனகவும் இருப்பதுதான் நல்ல ஒரு பிரஜையின் முன்மாதிரி . விளையாட்டை விளையாட்டாக பார்க்கிற தன்மை எப்போ வருகிறதோ அன்றுதான்
நாட்டுக்கும் முஸ்லீம்களுக்கும் நல்லது .பாக்கிஸ்தான் இஸ்லாமிய,முஸ்லீம் நாடு என்று தலையில் தூக்கி
கொண்டாடுகிற அளவுக்கு எதை சாதித்து விட்டார்கள்.உலக முஸ்லீம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் வரும் போது
சில சில மாற்று முடிவுகள் எடுக்கலாம் .
கிரிகெட் வெறி பிடித்தலையும் ஒரு சில முஸ்லீம் வெறியர்களே,நாட்டில் வாழும் எங்களைப் போன்ற முஸ்லீம்களையும் நினைத்துப் பாருங்கள் .ஓதுவதில்,படிப்பதில்,நாட்டை,சமூகத்தை முன்னேற்றுவதில் வெறியுடன்
இருங்கள்.கேவலங்கெட்ட சூதாட்டம் நிறைந்த விளையாட்டான கிரிக்கெட்டை விட்டொழியுங்கள்.
Meraan

should take this message in to next Friday hothba in every masjid.


jazakallha

you guys living srilanga have had a all facilitties from there then why you want to support the pakistan its doesnt look fair for any body do what right ........thank you

ஆம்!நாம்இலங்கையர்.அந்தவகையில்சிந்தித்துசெயல்படுவதுநமதுகடமை. goodnews.4us

Good job done not only telling to pray these type of advises are alos comes under good deeds.

Where we most of us are not aware.

Please advise ACJU to tell this same thing in Jumma bayans.

Thanks again.

இதேபோல ஸ்ரீலங்கா அணி இங்கிலாந்து வரும்போதும் இங்கிலாந்து நாட்டு அணிக்கு ஆதரவு தெரிவிப்போம். அதுவே நம்மை வரவேற்று அணைத்து ஆதரவளிக்கும் நாடு ஆகும்!

we are sri lankans never forget it where ever we are living... and we must support our country teem and players only whenever play our players..That's not a religios programm but a game between our mother country and some other coutry...So dear muslims In the game of cricket and others aswell please be first for mother country all the times...

நானும் படிக்கும் காலங்களில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்தவன் .பின்
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் பத்து வருடங்களாக தொழில் புரிந்து வருகின்றேன் .இங்கு பாகிஸ்தான் நாட்டவர்கள் தொழில் புரிந்து வருகிறார்கள் .அவர்கள் எம்மை கண்டு கொள்ளவும் மாட்டார்கள் .எம்மிடம் பணம் இருந்தால் அதை பறிக்கப் பார்ப்பார்கள் ஒரு அவசரத்திக்கு உதவவும் மாட்டார்கள் .எமக்கு அவசரத்திக்கு உதவுவது எம் நாட்டை சேந்த முஸ்லிம் ,சிங்கள, தமிழ் சகோதர்கள் தான்.நாம் இலங்கையினர் என்று தான் பார்ப்பார்கள்.இந்தியா பாகிஸ்தான் நாடினர் எம்மை கீழ் தரமாக நடுத்துவார்கள். தொழில் காரணமாக ஒரே அறையில் எவ்விதத்திலும் பாகிஸ்தானியர்களுடன் இலங்கையினருக்கு இருக்க முடியாது எந்நாளும் பிரச்சனை படுத்துவார்கள்,நாம் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் நமக்கு கெடுதி தான் செய்வார்கள் . .ஒரு சிலர் மேல் அதிகாரிகளிடம் எம்மை பற்றி வேண்டும் என்று தவறாக சொல்லி வைப்பார்கள் . மேலும் ஒரு சில பாகிஸ்தானியர் தொழுவதும் இல்லை .
இவர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் இன்னும் கிரிகட் இல் ஆதரவு அளிப்பது தேவை இல்லாத ஒன்று .
இலங்கை நாட்டு முஸ்லிம்கள் என்றும் இலங்கை அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் .அடுத்த நாட்டினர் நமக்கு ஒரு போதும் உதவ முன்வரமாட்டார்கள் .நாம் அனுபவத்தில் பார்த்தது - நன்றி என்றும் நவாஸ்,பார்சான் ,நசீம் ,பாஸ்கர், சுனில் - சவுதி

as sport have freedom to choose a our selves no body can force to support them so don't take as political take it easy

assalaamu alaikkum
entha naattil waalkiromo antanaattudaiya patru irukkanum
maarka vidayangalil wettrumaikal vandal pesi teerkanum
naangal vaalum naadu thai naadahum athanai nesikkanum
enda naattukku alaitthalum (ahathi)andasthil thaan kawanippu kidaikkum

people support Pakistan 4 d talent n talent only...it s a passion..it s so hard to change easily....

If u stay a day in Pakistan , u will never ever support to them, they bring bad name to moslem ummah,I'm in Australia I know theirs bad attitude,jeyawewa

Mr. Nissan Doha & and the "anonymous" who talks about talent, your comments prove that you have little or no concern about the current turmoil Muslims in SL are going thru. It shows the upbringing of both of you. people like you are cause of all trouble in SL. Talking of Pak team record since recently (especially after the Inzamam era) is nothing but drugs, match fixing and womanising.. seems like you have passion for these rather than cricket. England and SA teams have immense talent.. do you support them? Wake up guys.. I graduated from Lahore, if anyone has right to support Pakistan that would have been me... But never against SL and not even for a time of wink of my eye.. regardless what is happening in SL as most of the SL believe that Muslims are purposely not given equal opportunity.. two wrongs does not make a right..

Mr. Doha and the Anonymous who said talent, Guys mind Muralidaran Jayasuriya aren't those talent. Prophet Mohamed SAW compromised a lot for peace, There talent in match fixing, drug dealing etc. If you consider them as Muslims please do consider about the Muslims who are in Dambulla. It's illiteracy to support who doesn't. Mr. Murugan even if we support Sri Lanka the majority of the Sinhalese think that we support Pakistan. Yes as Muslims we are brother and sisters around the world but patriotism is with us. Even during the Kandy Kings period we fought against the British and during the Geneva problem we came to street.

நானும் ஒரு காலத்தில் சின்ன பிள்ளையாக இருந்த போது பாகிஸ்தானுக்கு எப்போதும் அதரவு தான் ஆனால் அது பெரிய தவரு இப்போது தான் உனர்ஹின்றேன்.பாகிஸ்தான்காரன் பற்றி தெரிந்த பிறகு தான் அவர்கள் யார் என்று தெரியும் அவர்களின் அதிகமானவர்கள் படிக்காதவர்கள்,முட்டாள்கள்,கல்வர்கள் சுருக்க சொன்னால் உலகமே தெரியாது.

பாகிஸ்தான்,இந்திய ,நேபால்,பங்களாதேஷ் இந்த நாட்டு மக்களோடு பழகும் போது மிச்சம் கவனமாக இருக்க வேண்டும்,இவர்கள் சல்லிக்கு கொலைகளை செய்யவும் தயங்கமட்டன்ஹல்.

எங்கள் நாட்டு மக்களுக்கு ஒப்பிடுவதற்கு உலகத்தில் யாருமில்லை,அதை நாங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போதுதான் உணர்கிறோம்.

சரியாக சொன்னீர்கள் பாகிஸ்தான் ,பங்களாதேஷ் காரர்கள் எம்மை ஸ்ரீ லங்கன் என்று கேவலமாக பேசுவார்கள்
ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நான்காம் வகுப்பு கூட படிக்காதவர்கள் . இவர்களுக்கு போய் யாராவது வக்காலத்து வாங்குவார்களா ? எம் நாட்டில் உள்ள சகோதர மொழி மக்களுடன் இணைத்து வாழுதல் நல்லது
நம் நாட்டு சிங்கள தமிழ் சகோதரர்கள் உதவுவது போல் மற்றைய நாட்டு மக்கள் உதவ முன் வருவது இல்லை

ஏற்றுக்கொள்ள கொள்ள முடியாத பதவி
நாங்கள் முசுலிம் நாங்கள் பாகிஸ்தான் அணிக்கே ஆதரவு கொடுப்போம்
எங்களுக்கு இப்போது அடி விழுகிறது அதற்க்கும் இந்த அரசு ஏதும் செய்யவில்லை
ஒருவர் கூட முசுலிம் இல்லாத அணிக்கு ஆதரவு என்ற பேச்சே இல்லை
சிங்களம் ஒழிக்க

murugan 90% of the Sri Lankan tamils are supporting India. Please try to advise tamils do not interfere in our matters. Mind your own business.

cricket I paththi pesina eththanai comments warukuzu wera welaye illaya ongalukku? stupids! think about our future in Sri Lanka. live peace fully nd build the nation . cricket is just a game which distroys our golden time stop wasting ur valuble time infront of TV's. Educate ur children nd ur brothers and sisters.

ஜெஸ்லியா ஜெஸ்ரி


இது என்ன நியாயம்? ஒரு இலங்கைப் பிரஜை தனக்குப் பிடித்தமான கிரிக்கட் அணிக்கு ஆதரவளிப்பது தவறா? அப்படியானால் வேறு விளையாட்டுக்களான கால்பந்து, ஹொக்கி, ஐஸ் ஹொக்கி போன்ற விளையாட்டுகளிலே இலங்கை அணிக்கு எப்படி ஆதரவளிப்பது...? இலங்கை மேற்கூறிய விளையாட்டுகளிலே பங்குபற்றல்கள் இல்லை அல்லது குறைவாக இருக்கின்றார்கள் . இப்போது பிரேஸில் போன்ற அணிகளுக்குத்தானே நாம் ஆதரவு தருகின்றோம். அதுமட்டும் தவறு இல்லையா? சரியான ஒன்றைத் தவறு என்று கருதிக்கொண்டு மடத்தனமாக நடந்து கொள்வதும் தவறுதானே? அந்தத் தவறுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ளச் சொல்வது அந்தத் தவறை ஏற்றுக்கொள்வது போலாகாதா? பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது அவர்கள் முஸ்லீம் வீரர்கள் என்பதனால் என்று வைத்துக்கொண்டால் பங்களாதேஷுடன் அவர்கள் விளையாடும்போது என்ன செய்வதாம். இரண்டுமே முஸ்லீம் அணிகள்தானே? விளையாட்டில் அணிகளின் திறமைதான் முக்கியமே தவிர அவர்கள் எந்த நாடு எந்த மதம் என்பதல்ல நண்பரே.

Jesslya Jessly

எந்த நாட்டில் வாழ்கின்றோமோ அந்த நாட்டுக்குத்தான் விளையாட்டில் ஆதரவளிக்க வேண்டுமென்பதுதான் நாட்டுப்பற்றா என்ன? நாட்டப்பற்றைக் காண்பிக்க எத்தனையோ அன்றாட கருமங்கள் உள்ளன. வீதியையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பது, பஸ் ரயிலில் இருக்கைகளையும் யன்னல் கண்ணாடிகளையும் சேதப்படுத்தாதிருப்பது, அகற்றாதிருப்பது போன்றவற்றிலே அந்த நாட்டுப்பற்றைக் காண்பித்து வரலாமே...? விளையாட்டும்கூட நாம் கடைப்பிடிக்கும் மதம், சித்தாந்தங்கள், கொள்கைகள் போல பொதுவான ஒன்றுதானே தவிர தனியே ஒரு நாட்டுக்குரியதல்ல..! இந்த ரீதியிலே போனால், 'இலங்கையிலேதானே இருக்கிறீர்கள்.! இஸ்லாம் கிறிஸ்தவம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இலங்கையரின் மதமான பௌத்தத்தைக் கடைப்பிடியுங்கள்!' என்று கூடச் சொல்வார்கள். Note: My name is not "Jesslya Jessry" as you mentioned. I'm Jesslya Jessly

noorஒன்றை மட்டும் விளங்கி கொள்ளுங்கள் இலவச கல்வி மருத்துவம் இது போன்றவை வழங்குவதால்
அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டு என்று கூறுவது தவறு அதற்காக மக்கள் வரி கட்டுகின்றனர் அணைத்து
பொருட்களுக்கும் விலை அதிகரிப்பு இவைகளின் மூலம் அரசாங்கம் நன்மை அடைகின்றனர் முஸ்லிம்களுக்கு
ஒரு பயனும் இல்லை நபி ஸல் அவர்கள் கூறினார்கள் எனக்கு மிகவும் பிடித்த ஊர் மதீனா என்று சிந்தித்து பாருங்கள்
மக்காவில் பிறந்து வருடம் வாழ்ந்த அவர்கள் இப்படி சொன்ன காரணம் இஸ்லாத்தை பரப்பவும் அதை நேசித்தது காரணம் என்று
சொல்லி இருக்குறார்கள் அல்லாஹ்வை ஈமான் கொல்லாத எந்த மனிதனின் செயலையும் ஆதரிப்பது அவனையும் அவன் பின்பற்றும்
மதத்தையும் நாம் ஊகுவிப்பதுக்கு சமம் பாகிஸ்தான் அரசு இலங்கை அரசுக்கு உதவி புரியாவிட்டால் தமிழ் ஈழத்தை
வென்று இருக்க முடியுமா ? சிந்தியின்கள் இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்கள் எப்போது நிம்மதியாக இருந்து இருக்குறார்கள்
கொஞ்சம் சிந்தியுங்கள் பாகிஸ்தானியர்களை போல் நேரத்துக்கு தொழுபவர்கள் வேறு யாரும் இல்லை நானும் கல்பில் பதின் ஐந்து வருடம்
இருப்பவன் காபிர் காபிர்த்தன் முஸ்லிம் முஸ்லிம்தான்

this is appreciated ./................

becuse if muslim cricketer... in sri lanka team they have to change there name..example (siraj mohamed-suraj Randiv),dilsan.etc.we are not dividing.only sihalisht can do that..pls editor should explaine that also.

Post a Comment