Header Ads



இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii பதவிக்கான திறந்த போட்டி பரீட்சை - 158 சிங்களவர், 13 தமிழர், 2 முஸ்லிம்கள் தெரிவு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii பதவிக்கான திறந்த போட்டி பரீட்சையில் முதல் கட்டத் தேர்வில் உயர் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 173 பேரில் 13 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் சித்தியடைந்துள்ளனர்.

போட்டிப் பரீட்சையின் உயர் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம்களின்  விவரம் வருமாறு,

ஜி.ஆதவன், ஜே.எஸ்.சிந்தாமணி, வி.தர்சினி, ரி.கோமாதேவி, கே.அபிராமி, எம்.சுதாகர், எவ்.ஏ.எவ்.பர்ஸானா, பீ.சுரேஸ்குமார், கே.விக்னரூபன், எம்.பிரதீப், எஸ்.கிருஷ்ணவாணி, பி.கப்தீபன், ரி.பிரியந்தி, எஸ்.தனிக்குமார், ஏ.முஹம்மட் ரௌசாட் அகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முதலாம் கட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி மேலும் ஒரு பரீட்சை நடைபெறவுள்ளது. அதில் உயர்புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தேவையானோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் 40 வீதத்தினரும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சேவையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பதில் கடமையில் உள்ளவர்களை உள்ளடக்கி நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் இருந்தும் 35 வீதத்தினரும் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களிடையே நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் இருந்தும் மிகுதி 25 வீதத்தினரும் திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் 400 பேர் மட்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். மூன்று நிலையிலும் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நேர்முகப் பரீட்சையும் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.