Header Ads



நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன் - காணாமல்போன ஊடகவியலாளரின் மனைவி தெரிவிப்பு

காணாமற்போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஐரோப்பாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் இன்று நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார், நான் ஜெனீவா சென்றிருந்தேன். 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றேன். மாலை 4 மணியளவில் அந்த நிகழ்வில் நான் கலந்துகொண்டேன். அதன்போது, இலங்கையில் காணாமற்போனவர்கள் தொடர்பாக நான் கருத்து வெளியிட்டேன். நான் அவ்விடத்தில் உரை நிகழ்த்தியதன் பின்னர், மிகவும் மோசமான முறையிலேயே இலங்கை அரசாங்கம் நடந்துகொண்டது.

மொஹான் பீரிஸ் இந்த விடயம் தொடர்பாக எதனையும் கூற மறுப்பதனால், இது குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்காகவே நான் அங்கு சென்றேன். அவ்வாறில்லாமல், நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக அங்கு செல்லவில்லை. எனது கணவர் தொடர்பிலான விடயங்களை அவர்கள் வெளியிட வேண்டும். அதற்காகவே நான் இவையனைத்தையும் செய்கின்றேன்.

எனினும் நான் நாட்டை காட்டிக்கொடுக்க முயல்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனைய நாடுகளின் அவதானம் திரும்பும் வகையில் நான் எனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான விடயங்களை ஆராயும் குழுவின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன். தாம் தொடர்ந்தும் இதுகுறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர். அரசாங்கத்திடம் தொடர்ந்தும் இதுகுறித்து வினவுவதாகவும் என்னிடம் அவர்கள் குறிப்பிட்டனர். எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.