Header Ads



கலாபூஷணம் அன்சார் அகால மரணம்


பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கலாபூஷணம் கோவை அன்சார் (எம்.எஸ். அன்சார்) வாகன விபத்து ஒன்றில் அகால மரணமானார். மரணிக்கும் போது அன்னாருக்கு வயது 75 ஆகும். 

பத்தரமுல்லயிலுள்ள சுயாதீன தொலைக்காட்சி சேவை அலு வலகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொழும்பு – 12, வாழைத்தோட்டம், சாஞ்சி ஆராய்ச்சித் தோட்டத்தைச் சேர்ந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

சிந்தாமணி வாரப் பத்திரிகையில் பிரசுரமான “மணிக்கவிதை” மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான இவர் நீண்டகாலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். “வதனம்” என்ற கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியரான இவர் ஓர் இலக்கிய ஆர்வலராவார். இவரது பல்சுவை கவிதைகள் அடங்கிய “கனவுகளின் பிரசவம்” என்ற நூல் புரவலர் புத்தகப் பூங்கா பிரசுரமாக 2010 ஆம் ஆண்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

அன்னாரின் ஜனாஸா குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், கலை உலக நண்பர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.