Header Ads



யாழ் மாநகர சபையில் கைகலப்பு - முஸ்லிம் வீதிகளின் புனரமைப்புக்கும் நிதியொதுக்கீடு

யாழ். மாநகர சபை ஆளும் தரப்பினருக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை கடும் அடிதடி சண்டை நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் சபையில் பொலிஸார் குவிக்கப்பட்டு சபை நடவடிக்கை நடைபெற்றது.

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு மேதலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான நெல்சிப் திட்டத்தின் கீழ் நான்கு வீதிகளை புனரமைப்பதற்கு ஆளும் கட்சியின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென ஆணையாளர் எஸ்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

செட்டியார் தோட்டவீதி 10 இலட்சம் ரூபா செலவிலும், ஜின்னாவீதி, அசாப் வீதி, காதி அபூபக்கர் வீதி, யதுரிஸ் மக்கா வீதி, வடிகால் மதகுகள் திருத்தம் என்பன 15 இலட்சம் ரூபா செலவிலும், மாவடிவீதி, கமால் வீதி, வைரவர் கோயில், கற்குளம் வீதி என்பன 12 அரை இலட்சம் ரூபா செலவிலும் பாரதி வீதி அதன் உப ஒழுங்கைகள், ஸ்ரான்லி ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி என்பன 10 இலட்சம் ரூபா செலவிலும் திருத்தப்படவுள்ளன.

இப்புனரமைப்பு வேலைகள் 47 அரை இலட்சம் ரூபா மதிப்பீட்டில் புனரமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் அனுமதி வழங்கவில்லை என்று மாநகரசபை உறுப்பினர் வி.கனகரத்தினம் தெரிவித்தார். இவ்விடயம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளுங்கட்சி உறுப்பினர்களாகிய விஜயகாந், நிசாந்தன், மனுவல் மங்களநேசன் ஆகிய உறுப்பினர்கள் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.